மீண்டும் ISRO வெற்றி.. NASA வயிறு எரியுமே.. மகேந்திரகிரியில் வெறும் 723.6 வினாடிகளில் சாதித்த விஞ்ஞானிகள்!
நிலவை நோக்கிய சந்திரயான்-3 மிஷன் எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவிற்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ "வேற லெவல்" திட்டமொன்றில் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதென்ன திட்டம்? தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் அப்படி என்ன சோதனை நடந்தது? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றான ககன்யான் மிஷனை (Gaganyaan Mission) பற்றித்தான். 3 விண்வெளி வீரர்களை கொண்ட ஒரு குழுவை 400 கிமீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் 3 நாட்கள் அனுப்பி வைத்து, பின்னர் இந்திய கடல் நீரில் தரையிறக்குவதன் மூலம் அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதே ககன்யான் மிஷன் ஆகும்.

எல்லாம் சரியாக நடந்தால், ககன்யான் மிஷன் ஆனது இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமாக இருக்கும். கூடவே இஸ்ரோவின் மனித விண்வெளி பயணத் திறனை உலகிற்கு நிரூபிப்பதாகவும் இருக்கும்; குறிப்பாக நாசா என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு!
ககன்யான் மிஷன் ஆனது மனித உயிர்களை உள்ளடக்கியது என்பதால் இஸ்ரோ இதில் மிக மிக கவனமாக பணியாற்றி வருகிறது. இதில் எந்தவொரு சிறு தவறும் நடந்துவிட கூடாதென்று பல வகையான சோதனைகளை நடத்தி வருகிறது. அப்படியாக சமீபத்தில் தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் ஒரு 2 சோதனைகள் நடத்தப்பட்டது.
அந்த இரண்டுமே, ககன்யானை ஏவுவதற்கு பயன்படுத்தப்படும் உந்துவிசை அமைப்பின் செயல்திறனை (Propulsion System Performance) மேலும் சரிபார்க்கும் மாற்றம் செம்மைப்படுத்தும் நோக்கத்தின் கீழ் நடத்தப்பட்ட சோதனைகள் ஆகும். இஸ்ரோ இதை ககன்யான் சர்வீஸ் மாட்யூல் ப்ராபல்ஷன் சிஸ்டமின் (Gaganyaan Service Module Propulsion System) "ஹாட் டெஸ்ட்" என்று கூறுகிறது.
மகேந்திரகிரியில் நடந்த இரண்டு சோதனைகளுமே வெற்றிகரமான முடிவுகளை வழங்கி உள்ளன. மொத்தம் 723.6 வினாடிகள் நீடித்த ஆரம்ப ஹாட் டெஸ்ட்டில் ஆர்பிட்டல் மாட்யூல் இன்ஜெக்ஷன் (Orbital Module injection), 100 நியூட்டன் த்ரஸ்டர்களின் கேலிப்ரேஷன் பர்ன் (Calibration burn of 100 Newton thrusters) மற்றும் லிக்விட் அபோஜி மோட்டார் இன்ஜின்களின் (Liquid Apogee Motor engines) மீது இஸ்ரோ விண்ணங்கள் கவனம் செலுத்தினர். எல்லாமே திட்டமிட்டபடி நடந்துள்ளது.
இந்த வெற்றி ககன்யான் மிஷனுக்கான தயார்நிலையை உறுதி செய்கிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது. அடுத்தகட்டமாக மேலும் 3 சோதனைகள் நடத்தப்பட உள்ளதாகவும், அவைகள் ககன்யானின் டீ-பூஸ்டிங் தேவைகள் மற்றும் பெயரளவிலான பணி சூழல்களை நிரூபிக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் "செயல்படாத எஞ்சின்களை அடையாளம் கண்டு அதை ஐசோலேட் செய்ய கேலிப்ரேஷன் பர்ன் மிகவும் அவசியம். லிக்விட் அபோஜி மோட்டார் இன்ஜின்கள் மற்றும் ரியாக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (Reaction control system - RCS) த்ரஸ்டர்களும் கூட எதிர்பார்த்தபடி செயல்பட்டன" என்று இஸ்ரோ கூறியுள்ளது.
723.6 வினாடிகள் நடந்த சோதனைக்கு பிறகு நடந்த ஹாட் டெஸ்ட் ஆனது 350 வினாடிகள் நீடித்தது. இது ஆர்பிட்டல் மாட்யூல் ஆனது இறுதி கட்ட சுற்றுப்பாதையை அடைவதற்கான சர்குலரைஷேஷனை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த சோதனையின் போதும், எல்ஏஎம் இன்ஜின்கள் தொடர்ச்சியான பயன்முறையில் இயங்கின, ஆர்சிஎஸ் த்ரஸ்டர்களும் பல்ஸ் மோட்-ல் இயங்குன" என்று இஸ்ரோ கூறியுள்ளது.
ககன்யான் தொடர்பான இஸ்ரோவின் எல்லா சோதனைகளுமே வெற்றிகரமாக முடிவது உண்மையிலேயே ஒரு நல்ல அறிகுறி தான். ஏனென்றால் ககன்யான் மிஷன் ஆனது கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடக்கும்படி திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இது 2024 ஆம் ஆண்டின் முதல் பாதிக்கு தள்ளப்பட்டுள்ளது. இனிமேல் இது ஒத்திவைக்கப்படக் கூடாது!


Click it and Unblock the Notifications








