சொன்னா சொன்னது தான்., திட்டமிட்டப்படி நடக்கும்: ISRO தலைவர் சிவன் பேட்டி!
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் விண்வெளி திட்டமான ககன்யான் திட்டத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்காது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டம்
இந்த ககன்யான் திட்டமானது 2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மனித உருவிலான பெண் ரோபோ
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை முதற்கட்டமாக 2021 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இஸ்ரோ தலைவர் சிவன் இந்த பெண் ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார்

வியோமமித்ரா பெண் ரோபோ
இஸ்ரோ வியோமமித்ரா பெண் ரோபோ இஸ்ரோவின் இந்த வியோமமித்ரா பெண் ரோபோ மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை தகவல் தெரிவித்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன், விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாடும் திறன் மற்றும் விண்வெளி வீரர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் திறன் போன்று பல திறன்கள் வியோமமித்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று சிவன் தெரிவித்தார்.

கோவிட் 19 எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது
இந்த நிலையில் கொரோனா தொற்றான கோவிட் 19 எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதோடு இந்த வைரஸ் தொற்று பராவமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பல்வேறு நாடுகளும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பயிற்சி இடைநிறுத்தம்
இஸ்ரோ ககன்யான் திட்டத்துக்கு விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நான்கு விமானிகள் இந்திய விமானப்படையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் முன்னதாகவே யு.ஏ.வில் பயிற்சியை மேற்கொண்டனர்.

கொரோனா தொற்று காரணமாக விண்வெளி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்
அதன்பின் பிப்ரவரி மாதம் முதல் மாஸ்கோவிற்கு அருகில் உள்ள காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்தில், சோதனை மேற்கொண்டனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக விண்வெளி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விண்வெளி வீரர்கள் நலமோடு உள்ளனர்
இருப்பினும் விண்வெளி வீரர்கள் நலமோடு உள்ளனர் என்றும், அவர்கள் பத்திரமாக விடுதியில் உள்ளனர் என்றும் மாத இறுதிக்குள் விண்வெளி மையம் திறக்கப்படும் என்றும் தகவல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் பாதிப்படைந்துவிட கூடாது
விண்வெளி வீரர்கள் பாதிப்படைந்துவிட கூடாது 12 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் பயிற்சியானது நடைபெறும் எனவும் அதில் 3 மாதங்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக சேர்க்கப்பட்டது எனவும் இந்த இடை நீக்கம் காரணமாக விண்வெளி வீரர்கள் பாதிப்படைந்துவிட கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விமான மருந்துகளின் நிபுணத்துவம்
இதில் மூன்று விண்வெளி வீரர்களைத் தவிர, விமான மருந்துகளின் நிபுணத்துவம் பெற்ற விமான அறுவை சிகிச்சை நிபுணர்களும் ககன்யான் பணியின் ஒரு பகுதியாக உள்ளனர்.

விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏஜென்சி
இஸ்ரோ வட்டார தகவல் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏஜென்சி ஒரு மாத கால அவகாசம் இடைவெளி விட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ரஷ்யாவில் எங்கள் நடவடிக்கைகள் சரியான பாதையில் இல்லை எனவும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் பயணத்திற்குப் பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தேவைப்படுவதால், தாங்கள் எங்கள் அணியை இருக்கும் இடத்திலேயே தங்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
இதையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் கோவிட் 19 தொற்று காரணமாக ரஷ்யா தங்கள் நான்கு வீரர்களுக்கும் 15 மாத இடைவெளி விட்டுள்ளது. இருப்பினும் இந்த பணி 2022-க்குள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நான்கு ஐ.ஏ.எஃப் பணியாளர்களின் பயிற்சி
நான்கு ஐ.ஏ.எஃப்(இந்தியன் ஏர் போர்ஸ்) பணியாளர்களின் பயிற்சி பிப்ரவரியில் யூரி ககரின் பயிற்சி மையத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைய திட்டமிடப்பட்டது. கோவிட் 19 காரணமாக பயிற்சி காலத்தை மேலும் நீட்டிக்கக்கூடும். ரஷ்யா பயிற்சிக்குப் பிறகு, நான்குவீரர்களுக்கும் இந்தியாவில் மேலும் பயிற்சி வழங்கப்படும்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு ஏவதல்
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு ஏவதல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த செயல்களால் ககன்யான் திட்டம் தாமதம் அடையாது. முன்னதாகவே 2022-க்கு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு போதிய கால அவகாசம் உள்ளது.
source: indiatimes.com


Click it and Unblock the Notifications








