Home
News

ஒப்போவுடன் ஒப்பந்தம் செய்த "இஸ்ரோ"- இனி கடலிலேயே இருந்தாலும் பிரச்சனை இல்ல: புதுவித அனுபவத்துக்கு தயாரா?

By Karthick M

இந்தியா சீனாவிடையே லடாக் எல்லை விவகாரம் பூதாகரமாக தலைத் தூக்கியது. தொடர் மோதல் போக்கு நிலவி வந்தாலும் சீனாவுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் தொடர் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, இரண்டாவது அளவிலான மக்களை தொகை கொண்ட நாடு சீனா. இருநாடுகளும் வர்த்தக நடவடிக்கைகளில் உடன்பாடு மேற்கொள்வதில் தயங்குவதில்லை. பொதுவாக இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையை ஆக்கிரமித்த நிறுவனங்களில் சீன நிறுவனங்களுக்கு பிரதான பங்கு வகிக்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ

இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போவுடன் புதிய தொழில் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. ஆர் & டி மற்றும் முக்கியமான வழிசெலுத்தல் சேவைக்காக சீன நிறுவனமான ஒப்போவுடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இஸ்ரோவின் NavIC அமைப்பு இந்திய நிலப்பரப்பை உள்ளடக்கிய விரிவான பிராந்திய வழிசெலுத்தல் சேவைகளை வழங்குகிறது. இது கூகுள் மேப்ஸ் போன்ற சேவையாகும். குறுஞ்செய்தி ஸ்மார்ட்போன்கள் மூலம் அனுப்பும் தொழில்நுட்பத்தின் எதிர்கால ஆய்வு மற்றும் வளர்ச்சி கருவி குறித்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் நேவிக் அமைப்பானது குறுஞ்செய்திகளை பகிரும் திறனை கொண்டதாகும்.

நேவிக் மெசேஜிங் சேவை

நேவிக் மெசேஜிங் சேவை

நேவிக் மெசேஜிங் சேவையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போவுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஒப்போ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நேவிக் பயன்பாட்டின் மூலம் இந்திய நிலப்பரப்பை உள்ளடக்கிய விரிவான பிராந்திய வழிசெலுத்தல் சேவைகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி இந்திய நிலப்பகுதியையும் தாண்டி 1,500 கி.மீ. PNT தூர வழிகாட்டு சேவைகளை வழங்கும் முதன்மை செயல்பாட்டிற்கு நேவிக் பயன்பாடுகிறது. அதோடு குறுந்தகவல்களை ஒளிபரப்பும் திறன் கொண்டதாக இருக்கிறது.

துல்லியமாக அறிந்துக் கொள்ள உதவும்

இந்த சேவையின் மூலம் ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கும் நபர்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை துல்லியமாக அறிந்துக் கொள்ள உதவும். தொழில்நுட்ப வழிகாட்டுதல்களோடு மட்டுமில்லாமல் குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் இது பயன்படுகிறது. ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரோ மற்றும் ஒப்போ இந்தியா ஆகியவை நேவிக் செய்தியிடல் சேவைகளின் தொழில்நுட்பத் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும். ஒப்போவுடன் இணைந்து பயன்படுத்தப்படும் இந்த சேவை இந்திய பயனர்களின் தேவையை மனதில் கொண்டு நேவிக் செய்தியிட் சேவையை மொபைல் தளத்துடன் இணைந்து விரைவான பயன்பாட்டுக்கு தயாராகி வருகிறது.

ஒப்போ மற்றும் இஸ்ரோ

ஒப்போ மற்றும் இஸ்ரோ

ஒப்போ மற்றும் இஸ்ரோ ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தொழில்நுட்பத் தகவல்களை பரிமாறிக் கொள்ளும். இந்த அம்சத்தின் மூலம் குக்கிராமம், சமுத்திரங்கள் என எங்கு சிக்கிக் கொண்டாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும் இந்த பயன்பாட்டின் மூலம் அவசர குறுஞ்செய்தி அனுப்பி பிறரிடம் உதவி கேட்கலாம். OPPO இந்தியாவால் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் NavIC குறுந்தகவல் அம்சத்தை இணைத்து உள்நாட்டு தீர்வுகளை உருவாக்க இஸ்ரோ மற்றும் ஒப்போ இந்தியாவின் ஒப்பந்தம் பயன்படும் என ஒப்போ இந்தியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேவிக் செய்தியிடல் சேவை

நேவிக் செய்தியிடல் சேவை

செய்தியிடல் சேவை முக்கியமாக கடல்களில், மோசமான அல்லது தகவல் தொடர்பு இல்லாத பகுதிகளில் வாழ்க்கை பாதுகாப்பு எச்சரிக்கைகளை அறிவிக்க உதவுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து ஒப்போ துணைத்தலைவர் தஸ்லீம் ஆரிப் கூறிய தகவல்களை பார்க்கலாம். இஸ்ரோவுடன் ஒப்போ இந்தியா மேற்கொண்டுள்ல ஒப்பந்தத்தை தொடர்ந்து மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் அதிக முதலீட்டை இந்தியாவில் ஒப்போ செய்ய இருப்பதாக குறிப்பிட்டார். அதேபோல் ஒப்போ இஸ்ரோ ஒப்பந்தம் மூலம் நேவிக் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என குறிப்பிட்டார்.

ஒப்போ இந்தியாவின் துணைத் தலைவர்

ஒப்போ இந்தியாவின் துணைத் தலைவர்

மேலும் ஒப்போ இந்தியாவின் துணைத் தலைவர், தங்கள் சமீபத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நேவிட் பயன்பாட்டின் தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்காக தங்கள் தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் ஆர்&டி திறன்களுடன் இஸ்ரோவை ஆதரிப்போம். மேக் இன் இந்தியாவை நோக்கிய தங்கள் பார்வைக்கு, ஒப்போ அதன் தயாரிப்புகளை அதிகரிக்க மேலும் முதலீடு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Isro Signs Agreement with Oppo For Detailed Navigation Services
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X