திக் திக் நிமிடங்கள்.. கிரகணத்தில் இருந்து தப்பிய Aditya L1 விண்கலம்.. பதறாமல் சாதித்த ISRO விஞ்ஞானிகள்!
இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் தங்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் சோலார் மிஷனின் (India's First Solar Mission)மிகவும் முக்கியமான "திக் திக்" கட்டம் இன்று (2024 ஜனவரி 6) அரங்கேறியது.
பதறாமல் சாதித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்! பல கட்டங்களை உள்ளடக்கிய ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இறுதி சுற்றுப்பாதைக்குள் (Final Orbit) இன்று மாலை (ஜன.6) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆதித்யா எல்-1 விண்கலமானது லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 (Lagrange Point 1) என்று அழைக்கப்படும் அதன் இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 என்பது பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு இடமாகும். இது விண்வெளியில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசைகளில் ஒரு நுட்பமான சமநிலையில் (Delicate Equilibrium) கொண்ட ஒரு தனித்துவமான இடமாகும்.
எல்1 பாயிண்ட் ஆனது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மொத்த தூரத்தில் 1% மட்டுமே என்றாலும் கூட, அதை துல்லியமாக சென்றடைவதற்கு ஆதித்யா எல்1 விண்கலம் பல எளிமையான மற்றும் சில சிக்கலான "திக் திக்" கட்டங்களை தாண்ட வேண்டி இருந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை மிகவும் சாமார்த்தியமாக மற்றும் கூலாக செய்து முடித்துள்ளனர்.

கிரகணத்தில் இருந்து தப்பிய ஆதித்யா எல்1 விண்கலம்! ஆதித்யா எல்1 விண்கலமானது லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1-ஐ சுற்றியுள்ள ஒளிவட்ட பாதையில் வைக்கப்படும் என்பதால்.. இனிமேல் இது எந்த விதமான சூரிய கிரகணத்திலும் சிக்காது. ஆகையால் ஆதித்யா எல்1 விண்கலத்தால் தொடர்ந்து சூரியனை கண்காணிக்க, ஆய்வு செய்ய முடியும்.
இதன் மூலம் சூரிய செயல்பாடுகள் (Solar activities) மற்றும் விண்வெளி வானிலையில் சூரிய கிரகத்தின் தாக்கத்தை (Effects on space weather) நிகழ் நேரத்தில் கவனிக்க முடியும். இஸ்ரோவின் இந்த மகத்தான சாதனைக்காக அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் குவியத் தொடங்கியுள்ளன.

"இந்தியா இன்னுமொரு அடையாளத்தை உருவாக்குகிறது. இது மிகவும் சிக்கலான மற்றும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நான் தேசத்துடன் இணைந்து பாராட்டுகிறேன். மனிதகுலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளை தொடர்ந்து தொடர்வோம்" என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








