Home
News

கரணம் தப்பினால் மரணம்.. உச்சகட்ட டென்ஷனில் ISRO விஞ்ஞானிகள்.. வானில் இருந்து தூக்கி வீசப்படும் விண்கலம்!

இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள மிகவும் முக்கியமான சோதனைக்காக இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் தங்களை தாங்களே தயார்படுத்தி கொண்டிருக்கின்றனர். அதென்ன சோதனை? விண்வெளியில் இருந்து தூக்கி வீசப்படப்போகும் விண்கலம் எது? அது தப்பிக்குமா? ஏன் இந்த விபரீதமான சோதனை? இதோ விவரங்கள்:

இஸ்ரோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது அடுத்த சில நாட்களில் ககன்யான் மிஷன் தொடர்பான ஒரு முக்கியமான சோதனையை மேற்கொள்ள உள்ளது. இந்த சோதனையின் முக்கிய நோக்கமே,ககன்யான் மிஷனின் பாராசூட் சிஸ்டமை சரிபார்ப்பதே ஆகும். இதற்காக ஒரு ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் நடத்தப்படவுள்ளது.

கரணம் தப்பினால் மரணம்.. உச்சகட்ட டென்ஷனில் ISRO விஞ்ஞானிகள்!

இதன்கீழ், சினூக் ஹெலிகாப்டரில் (Chinook helicopter) இருந்து சுமார் 4 - 5 கிமீ உயரத்தில் இருந்து ககன்யான் மிஷனின் க்ரூ மாட்யூல் (Crew module) பூமியை நோக்கி வீசப்படும். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் நடத்தப்பட உள்ள இந்த சோதனையின் வழியாக "பெயரளவிலான" நிபந்தனைகளின் கீழ் ககன்யான் மிஷனின் பாராசூட் அமைப்பு சோதிக்கப்படும்.

இந்த சோதனையின் போது 2 பாராசூட்களும் சரியான நேரத்தில் திறக்கப்பட்டு, க்ரூ மாட்யூலின் ஸ்பிளாஷ் டவுன் செயல்முறை சரியாக நடக்கும் பட்சத்தில், இந்த சோதனை வெற்றி அடையும். ஒருவேளை ஒரு பாராசூட் திறக்காமல் போனால் அல்லது 2 பாராசூட்களும் திறக்கப்படாமல் போனால் அல்லது பாராசூட்களை தாமதப்படுத்தும் சூழ்நிலைகள் ஏதேனும் உருபனால், இந்த சோதனை தோல்வியில் முடிவடையும்.

கரணம் தப்பினால் மரணம்.. உச்சகட்ட டென்ஷனில் ISRO விஞ்ஞானிகள்!

இது ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் சீரீஸின் கீழ் நடக்கும் முதல் சோதனை என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் இதைவொரு முக்கியமான சோதனையாக பார்க்கின்றனர். ஏனென்றால் பூமியை நோக்கி வீசப்படும் க்ரூ மாட்யூலில் தான் ககன்யான் மிஷனுக்கான 3 இந்திய விண்வெளி வீரர்கள் அமர போகிறார்கள்.

க்ரூ மாட்யூல் ஆனது வெற்றிகரமாக கடலில் விழுந்த பின்னர் மற்றொரு ஹெலிகாப்டர் அதை கண்டுபிடிக்கும். அதனை தொடர்ந்து இந்திய கடற்படையினர் ககன்யான் மிஷன் குழுவை மீட்டு சென்னை கடற்கரைக்கு கொண்டு வருவார்கள். இப்படியாக திட்டமிடப்பட்டுள்ள ககன்யான் மிஷனில் க்ரூ மாட்யூலின் ஸ்பிளாஷ் டவுன் மற்றும் ரிக்கவரி ஆனது மிகவும் முக்கியமான படிகள் ஆகும்.

கரணம் தப்பினால் மரணம்.. உச்சகட்ட டென்ஷனில் ISRO விஞ்ஞானிகள்!

இருப்பினும் ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் ஆனது சரியாக எப்போது (எந்த தேதியில்) நடக்கும் என்கிற விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் ககன்யான் மிஷனில் எந்தவொரு சிறு சிக்கலும் ஏற்படாமல் இருக்க, இன்னும் எத்தனை சோதனைகள் நடத்தப்படும் என்பதும் குறித்தும் எந்த தகவலும் இல்லை.

சமீபத்தில் இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானிகள் ராக்கெட் என்ஜின்களுக்கான இலகுரக கார்பன்-கார்பன் முனையை (Lightweight Carbon-Carbon Nozzle For Rocket Engines) உருவாக்கி சாதனை படைத்தது இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்தில் (Rocket Engine Technology) ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஆகும்.

சி-சி நாஸில் (C-C Nozzle) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த புதிய வகை ராக்கெட் எஞ்சின் முனையானது கார்பன்-கார்பன் (C-C) கலவைகள் போன்ற மேம்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது விதிவிலக்கான பண்புகளை (Exceptional Properties) வழங்கும் என்று இஸ்ரோ கூறுகிறது. அதாவது இது ராக்கெட் என்ஜின்களின் முக்கிய அளவுருக்களை (Vital Parameters) மேம்படுத்தும்.

அதில் த்ரஸ்ட் லெவல்கள் (Thrust levels), ஸ்பெசிஃபிக் இம்பல்ஸ் (Specific impulse) த்ரஸ்ட்-டூ-வெயிட் விகிதங்களும் (Thrust-to-weight ratios) அடங்கும். இதெல்லாமே சேர்ந்து லான்ச் வெஹிக்கலின் அதாவது ராக்கெட்டின் பேலோட் திறனை 15 கிலோ வரை அதிகரிக்கும். இஸ்ரோவின் இந்த புதிய லைட்வெயிட் சி-சி நாஸில் ஆனது குறிப்பாக பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட்டிற்காக தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வியின் நான்காவது ஸ்டேஜில் தற்போது கொலம்பியம் அலாய் (Columbium Alloy) மூலம் செய்யப்பட்ட முனைகளுடன் இரட்டை என்ஜின்கள் (Twin engines) பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மெட்டாலிக் டைவெர்ஜென்ட் உடனான சிசி நாஸிலை பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 67% மாஸ் ரிடெக்ஷனை அடைய முடியும். இதன் மூலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பேலோட் திறனை 15 கிலோ வரை அதிகரிக்க முடியும். விண்வெளி பயணத்தில் 15 கிலோ கூடுதல் எடை என்பது ஒரு மிகப்பெரிய மேம்பாடாகும். Photo Courtesy: ISRO

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO Scientists Crucial Air Drop Test To Check Gaganyaan Parachute System Using Chinook helicopter
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X