Home
News

சலாம் ராக்கி பாய்.. 2274 கிலோ.. ISRO விஞ்ஞானிகளின் அடுத்த சம்பவம்.. மொத்த இந்தியாவும் வாய் பிளக்க போகுது!

இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது, பிப்ரவரி 17 ஆம் தேதியன்று மொத்த இந்தியாவும் வாய் பிளக்க வைக்க உள்ளது. ஏனென்றால் குறிப்பிட்ட நாளில் தான் 2274 கிலோ எடையுள்ள ஒரு செயற்கைகோள் விண்ணில் பாயவுள்ளது.

அதென்ன செயற்கைகோள்? இதன் பணி என்ன?இதனால் இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் என்ன நன்மை? இந்த செயற்கைகோள் எப்போது விண்ணில் ஏவபடும்? எங்கிருந்து ஏவப்படும்? 2274 கிலோ எடையுள்ள ஒரு செயற்கைகோளை நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் பத்திரமாக விண்ணில் ஏவி விடுவார்களா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:

2274 கிலோ.. ISRO விஞ்ஞானிகளின் அடுத்த சம்பவம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது பிப்ரவரி 17ஆம் தேதியன்று ஸ்ரீஹரிகோட்டாவில் (Sriharikota) இருந்து தனது இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட்டை (INSAT-3DS Satellite) விண்ணில் செலுத்துகிறது. இந்த செயற்கைகோளானது, இந்திய நாட்டை பாதிக்கும் தீவிரமான காலநிலையை (Extreme climate) கண்காணிக்கும் வானிலை ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பெரிய உதவியாக இருக்கப்போகிறது.

ஏனென்றால் இஸ்ரோவின் இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் ஆனது விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வேகத்தில் மேம்பட்ட செயற்கைக்கோள் தரவு (Improved satellite data) மற்றும் பூமியின் உயர் தெளிவுத்திறன் புகைப்படங்களை (High resolution images of the Earth) வழங்கும் திறனை கொண்டுள்ளது.

2274 கிலோ.. ISRO விஞ்ஞானிகளின் அடுத்த சம்பவம்!

புவி அறிவியல் அமைச்சகத்தின் (Ministry of Earth Sciences) நிதியுதவியையும் கொண்ட இந்த 2274 கிலோ எடையுள்ள சாட்டிலைட் ஆனது புயல்கள், பருவமழை அமைப்புகள், இடியுடன் கூடிய மழை மற்றும் பிற இயற்கை பேரழிவுகளை கண்காணிக்க புதிய சாட்டிலைட் ப்ராடெக்ட்ஸை (Satellite products) உருவாக்க உதவும். மேலும் இஸ்ரோவின் இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் ஆனது வளிமண்டலம், நிலம் மற்றும் பெருங்கடல்களையும் கண்காணிக்கும்.

மொத்தமாக இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் ஆனது நான்கு பேலோடுகளை (Payloads) உள்ளடக்கியது - ஒரு இமேஜர் (Imager), ஒரு சவுண்டர் (Sounder), ஒரு டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (Data Relay Transponder) மற்றும் ஒரு தேடல் மற்றும் மீட்பு டிரான்ஸ்பாண்டர் (Satellite aided Search and Rescue Transponder).

2274 கிலோ.. ISRO விஞ்ஞானிகளின் அடுத்த சம்பவம்!

இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட்டின் மல்டி-ஸ்பெக்ட்ரல் இமேஜர் (Multi-spectral imager) ஆனது ஆறு வேவ்லெங்த் பேண்டுகளில் (Six wavelength bands) பூமியின் படங்களை உருவாக்கும், இது நீராவி (ஈரப்பதம்) போன்ற வண்ணம் சார்ந்த வளிமண்டல அளவுருக்களை (colour-dependent atmospheric parameters) காட்சிப்படுத்த உதவும்.

இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட்டின் சவுண்டர் ஆனது வளிமண்டலத்தின் வெர்ட்டிக்கல் ப்ரொஃபைலை (Vertical profiles of the atmosphere) உருவாக்குவதில் பங்களிக்கும் மற்றும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் (temperature and humidity) போன்ற தகவல்களை வழங்கும். பெயர் குறிப்பிடுவது போலவே இன்சாட்-3டிஎஸ் என்பது புவிசார் சுற்றுப்பாதைக்குள் (Geostationary orbit) செலுத்தப்படவுள்ள இந்தியாவின் மூன்றாம் தலைமுறை வானிலை செயற்கைக்கோள் ஆகும். அதாவது இது இன்சாட் செயற்கைகோள் சீரீஸின் ஒரு தொடர்ச்சியாகும்.

தற்போது வரையிலாக ​​வானிலை ஆய்வாளர்கள் செப்டம்பர் 2016-ல் செலுத்தப்பட்டு இன்னும் செயல்படும் இன்சாட்-3டி (INSAT-3D) மற்றும் இன்சாட்-3டிஆர் (INSAT-3DR) போன்ற செயற்கைக்கோள்களால் உருவாக்கப்பட்ட தரவுகளை மட்டுமே விரிவாகப் பயன்படுத்துகின்றனர். 2024 பிப்.17 ஆம் தேதிக்கு பின்னர் இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் வழியிலான தரவுகள் மற்றும் புகைப்படங்களையும் பெறுவார்கள்.

2003 முதல், இந்திய வானிலை ஆய்வு துறையானது (India Meteorological Department - IMD) அதன் செயல்பாட்டு வானிலை நோக்கங்களுக்காக இன்சாட் தரவைப் பயன்படுத்துகிறது. செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவுகள் ஆனது துல்லியமான முறையில் முன்னறிவிப்பு, வளிமண்டலம் மற்றும் கடல் அளவுருக்களை கண்காணித்தல் மற்றும் ஒட்டுமொத்த வானிலை சேவைகளை (Meteorological services) மேம்படுத்துகிறது. இதனால் சொத்து, உயிர் மற்றும் வாழ்வாதாரத்திற்கான இழப்பை முடிந்தவரை குறைக்க முடிகிறது.

Best Mobiles in India

English summary
ISRO Scientists all set to Launch 2274 kgs weighing INSAT 3DS Satellite on Feb 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X