Subscribe to Gizbot

என்ன டா இது.. இஸ்ரோவிற்கு வந்த சத்தியசோதனை..!

Written By:

இஸ்ரோ - நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நம் நாட்டிற்கான செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதில் மட்டுமில்லை பிற உலக நாட்களின் செயற்கை கோள்களை 'முதுகில் சுமந்து' கொண்டு விண்ணுக்குள் நுழைவதிலும் அசைக்க முடியாத சாதனைகளை படைத்துள்ளது என்பது தான் நிதர்சனம். பல உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கு இஸ்ரோ ஒரு 'சிம்மசொப்பனமாய்' விளங்குகிறது என்பதற்கு அமெரிக்கா தொடங்கி கனடா, பிரான்ஸ், கொரியா, துருக்கி என பல நாடுகள் இஸ்ரோவிடம் 'உதவிகேட்டு' ஒப்பந்தம் வைத்துக் கொண்டுள்ளதே சான்றாகும்.

உலக நாடுகளின் கவனம் இஸ்ரோவின் பக்கம் திரும்ப சக்திவாய்த்த பல காரணங்களில் ஒரு முக்கியமான காரணம் தான் - சந்திராயன் 1, 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி நிலவின் பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்யும் நோக்கதிற்காக விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றியும் அடைந்தது. அந்த வெற்றியானது தற்போது சந்திராயன்-2 (Chandrayaan II) தொடர இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சந்திராயன் - 2 :

சந்திராயன் - 2 :

முழுக்க முழுக்க உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட லேண்டர் மற்றும் ரோவர் ( Lander and Rover) கொண்ட சந்திராயன் - 2 ஆனது டிசம்பர் 2017 அல்லது 2018 முதல் பாதியில் விண்ணில் செலுத்தப் பட இருக்கிறது.

சேமிப்பு சாதனங்கள் :

சேமிப்பு சாதனங்கள் :

மேலும் நிலவிற்கு சென்று மாதிரிகளை சேமித்து பூமிக்கு கொண்டுவரும் சாதனங்களையும் சந்திராயன் 2 கொண்டுள்ளது.

சந்திராயன் 1 :

சந்திராயன் 1 :

பூமி கிரகத்தின் 'சோல் சாட்டிலைட்' () என்று அழைக்கப்படும் நிலவில் நீர் ஆதாரங்கள் இருப்பதற்க்கான ஆய்வில் சந்திராயன் 1 முக்கிய பங்கு வகித்தது.

உடன்படிக்கை :

உடன்படிக்கை :

அதனை தொடர்ந்து, அடுத்த நிலவு பயணத்தில் 2010-ஆம் ஆண்டில், ரஷ்ய விண்வெளி ஏஜென்சியான ராஸ்கோமோஸ் ஆனது லூனார் லேன்டர் க்கு பொறுப்பு வகிக்கும் என்றும் இந்தியாவின் இஸ்ரோவானது ஜி.எஸ்.எல்.வி யுடன் சேர்த்து ஆர்பிட்டர் மற்றும் 'ரோவர்'க்கு பொறுப்பு வகிக்கும் என்று உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.

முடிவு :

முடிவு :

இந்நிலையில் ரஷ்யா தங்களது லேண்டரில் சில கோளாறுகள் இருப்பதாகவும், அதனை மேலும் சில பரிசோதனைக்கு உட்படுத்த போவதாகும் கூறிவந்ததால் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இஸ்ரோவே லூனார் லேண்டர் ஒன்றை உருவாக்கி விட முடிவு செய்தது.

நாசா உதவி :

நாசா உதவி :

இஸ்ரோவின் லூனார் லேண்டர் ஆனது முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பாக இருப்பினும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவிடம் இருந்து ஒரு 'சிறிய' உதவியை பெரும் நிலையில் இருக்கிறது.

டீப் ஸ்பேஸ் நெட்வர்க் :

டீப் ஸ்பேஸ் நெட்வர்க் :

ஒரு செயற்கைகோளை ஒரே இடத்தில இருந்துகொண்டு கண்காணிக்க முடியாது, மறுபக்கத்தில் இருந்தும் கண்காணிக்க உதவி தேவை அதைதான் டீப் ஸ்பேஸ் நெட்வர்க் (Deep Space Network) எனப்படும்.

தற்போது :

தற்போது :

முதலில் இந்த உதவியை ரஷ்யாவின் ராஸ்கோஸ்மோஸ் விண்வெளி ஏஜன்சி செய்வதாக இருந்தது தற்போது இந்த பணிக்காக நாசா உதவி புரிய இருக்கிறது.

விண்வெளி சார்ந்த ஒத்துழைப்பு :

விண்வெளி சார்ந்த ஒத்துழைப்பு :

நாசா மற்றும் இஸ்ரோவிற்கு இடையே விண்வெளி சார்ந்த ஒத்துழைப்பை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து கொண்டே வருகிறது.

1974 மற்றும் 1998 :

1974 மற்றும் 1998 :

இதற்கு முன்பு 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டில் அணு சக்தி பரிசோதனைக்காக இஸ்ரோவும் நாசாவும் கூட்டணி அமைத்து பணியாற்றியது என்பதும் குறிபிடத்தக்கது.

மார்ஸ் ப்ராஜக்ட் :

மார்ஸ் ப்ராஜக்ட் :

மேலும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தை அடையும் 'மார்ஸ் ப்ராஜக்ட்'தனில் இஸ்ரோவும் நாசாவும் ஒன்றிணைந்து பணியாற்ற இருக்கிறது.

ரஷ்ய கூட்டணி :

ரஷ்ய கூட்டணி :

ப்ராஜக்ட் சந்திராயன் 2-ல் ரஷ்யாவின் உதவியை இஸ்ரோ புறக்கணித்தாலும் கூட எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் இணைந்து பலவகையான விண்வெளி ஆராய்ச்சிகளை நிகழ்த்த இருக்கிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இதுநாள் வரை உண்மை என்று நாம் அனைவரும் நம்பிய 13 பிரமைகள்..!


மெல்ல மெல்ல வெளிப்படும் பிளாக் ஹோல் புதிர்களும், பூமியின் முடிவும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Isro Says Chandrayaan II Will Be Indigenous and Take Minor Help From US. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot