லேண்டர் விக்ரம் நிலமை என்ன? நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!

|

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செப்டம்பர் 26 ஆம் தேதி சந்திரயான் -2 இன் விக்ரமின் லேண்டர் தரையிறங்கியுள்ள தளத்தின் எச்.டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. நாசாவின் மூன் ஆர்பிட்டர் கிளிக் செய்துள்ள இந்த புகைப்படம் தற்பொழுது நாசாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 6, விக்ரம் லேண்டர்

நிலவில் மேற்பரப்பில் விழுந்துள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை எடுப்பதில் இஸ்ரோவிற்கு சிக்கல் எழும்பியது. இந்தியாவின் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 6ம் தேதி, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் பொழுது செயலிழந்தது. அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோ மும்முரமாக தீவிரம் காட்டி வந்தது. ஆனாலும் இஸ்ரோவின் முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை.

மனைவி அந்தரங்க காட்சி லீக்-கணவர் ஷாக்: எல்இடி டிவியில் நுழைந்த ஹேக்கர் அட்டகாசம்.!மனைவி அந்தரங்க காட்சி லீக்-கணவர் ஷாக்: எல்இடி டிவியில் நுழைந்த ஹேக்கர் அட்டகாசம்.!

தானாக முன்வந்த நாசா

நாசா, அதன் மூன் ஆர்பிட்டரை பயன்படுத்தி செயலிழந்த விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிந்து, அதை புகைப்படம் எடுத்து, பூமிக்கு அனுப்ப உதவும் என்று நாசா தானாக முன்வந்தது. இஸ்ரோவும் இதற்குச் சம்மதம் தெரிவித்து விக்ரம் லேண்டரின் புகைப்படத்திற்காகக் காத்திருந்தது நம் அனைவருக்கும் தெரியும்.

கிடுகிடுக்கும் விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! முழு விபரங்கள்.!கிடுகிடுக்கும் விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! முழு விபரங்கள்.!

விக்ரம் லேண்டர் இடத்தை கண்டறிவதில் நாசாவிற்கு சிக்கல்

விக்ரம் லேண்டர் இடத்தை கண்டறிவதில் நாசாவிற்கு சிக்கல்

செப்டம்பர் 17 ஆம் தேதி, நாசாவின் லூனார் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் (NASA's Lunar Reconnaissance Orbiter (LRO) நிலவின் தென்துரு மேற்பரப்பிலிருந்து, விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறியப் புகைப்படம் எடுக்க அனுப்பப்பட்டது. ஆனால் நாசாவின் LRO ஆர்பிட்டரால், விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிய முடியாமல் போனது. இதற்கான காரணத்தை நாசா தெளிவாக தற்பொழுது வெளியிட்டுள்ளது.

நாசா தெரிவித்த காரணம்

நாசா தெரிவித்த காரணம்

நாசாவின் மூன் ஆர்பிட்டர் ஏன் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தையும் நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென்துருவப் பகுதிக்கு மேல் கடக்கும் பொழுது மாலை நேரம் துவங்கிவிட்டது. இதனால் நிலவின் பெரும்பாலான பகுதிகள் இருளால் மூடப்பட்டுவிட்டது. இதனால் விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிவதில் சிக்கல் எழுந்தது.

32 இன்ச் டிவி ரூ10000: தீபாவளிக்கு அதிக தள்ளுபடி- தெறிக்கவிடும் சியோமி டிவி.!32 இன்ச் டிவி ரூ10000: தீபாவளிக்கு அதிக தள்ளுபடி- தெறிக்கவிடும் சியோமி டிவி.!

மறைந்திருக்கும் விக்ரம் லேண்டர்

மறைந்திருக்கும் விக்ரம் லேண்டர்

நாசாவின் LRO ஆர்பிட்டர் கிளிக் செய்துள்ள எச்.டி புகைப்படத்தை LRO ஆர்பிட்டர் குழு, பல முறை நன்கு ஆராய்ந்தும், விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கண்டறிய முடியவில்லை. புகைப்படத்தில் உள்ள நிழல் பகுதிக்குள் தான் விக்ரம் லேண்டர் மறைத்திருக்கக்கூடும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த எச்.டி புகைப்படங்கள் நாசாவின் Obscured in the Lunar Highlands? தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் நாசா புகைப்படம் எடுக்க போகிறதாம்

மீண்டும் நாசா புகைப்படம் எடுக்க போகிறதாம்

நாசாவின் மூன் லேண்டர் மீண்டும் நிலவின் தென்துருவத்தை அக்டோபரில் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இம்முறை நாசா மூன் லேண்டர், விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை கடக்கும் பொழுது பகல் நேரமாக இருக்கும் என்றும், இம்முறை வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. லேண்டரைக் கண்டுபிடித்துப் படமெடுக்க மீண்டும் நாசா முயற்சிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ISRO's Vikram Lander Is Missing In A Photo Released By NASA : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X