இஸ்ரோ: நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் எப்போது தெரியுமா?

|

சந்திரயான் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டதினால், இஸ்ரோவின் அடுத்த எதிர்கால திட்டங்களான ககன்யான் திட்டம் மற்றும் ஆதித்ய L-1 திட்டங்கள் எந்த விதத்திலும் பாதிக்காது என்று இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார்.

நிலவிற்கு இந்தியர்கள்

நிலவிற்கு இந்தியர்கள்

நிலவிற்கு மனிதர்களை அனுப்பும், இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டம் வரும் 2022ம் ஆண்டு எந்த தடையுமின்றி நடைபெறும் என்று இஸ்ரோவின் அதிகாரி பி.ஜி.திவாகர் தெரிவித்துள்ளார்.

பி.ஜி. திவாகர் கூறியதாவது

பி.ஜி. திவாகர் கூறியதாவது

முன்னதாக இஸ்ரோ விண்வெளி நிறுவனத்தில் விஞ்ஞான செயலாளராக இருந்த பி.ஜி. திவாகர், இப்போது பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் பூமி கண்காணிப்பு பயன்பாடுகள் மற்றும் பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலகத்தின் இயக்குநராக உள்ளார். சந்திரயான் மற்றும் ககன்யான் இரண்டுமே வெவ்வேறு நோக்கங்களையும் பரிமாணங்களையும் கொண்ட திட்டம் என்று கூறியுள்ளார்.

நிலவில் 'பிரக்யான் ரோவர்' ஆராய்ச்சியைத் துவங்க வாய்ப்புள்ளது! இஸ்ரோவின் அடுத்த முயற்சி!நிலவில் 'பிரக்யான் ரோவர்' ஆராய்ச்சியைத் துவங்க வாய்ப்புள்ளது! இஸ்ரோவின் அடுத்த முயற்சி!

ககன்யான் திட்டம்

ககன்யான் திட்டம்

சந்திரயான் திட்டம் மற்றும் ககன்யான் திட்டம் இரண்டுமே வெவ்வேறு திட்டங்கள் எனவும், தற்பொழுது நடந்த நிகழ்விற்கும் ககன்யான் திட்டத்திற்கும் எந்த பாதிப்பும் கிடையாது மற்றும் சம்பந்தமும் கிடையாது என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். ககன்யான் திட்டம் எந்த தடையுமின்றி தயார் செய்யப்பட்டு வருவதாகவும், 2022ல் நிச்சயமாக நிலவிற்கு மனிதர்களை இஸ்ரோ அழைத்துச் செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

36மணி நேரத்தில் கண்டுபிடிப்பு: லேண்டர் உயிர்பிக்கும் வேலையில் இஸ்ரோ-சிவன் மகிழ்ச்சி.!36மணி நேரத்தில் கண்டுபிடிப்பு: லேண்டர் உயிர்பிக்கும் வேலையில் இஸ்ரோ-சிவன் மகிழ்ச்சி.!

ஆதித்யா L-1 திட்டம்

ஆதித்யா L-1 திட்டம்

கடந்த சுதந்திர தினத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி ககன்யான் திட்டத்ம் பற்றிய அறிவிப்பை அறிவித்தார். அவர் அறிவித்த அறிவிப்பின்படி 2022ம் ஆண்டில் மூன்று இந்தியர்கள் நிலவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இத்துடன் இஸ்ரோவின் முதல் சூரியன் திட்டமான ஆதித்யா L-1 திட்டமும் அடுத்த ஆண்டு எந்த தடையுமின்றி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 17: இந்தியாவில் 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!செப்டம்பர் 17: இந்தியாவில் 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

நிலவில் 3 வீரர்கள்

நிலவில் 3 வீரர்கள்

சந்திரயான்-2 திட்டம், விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் சாப்ட் லேண்டிங் செய்வதையே நோக்கமாகக் கொண்டது. ககன்யான் திட்டத்தின்படி நிலவிற்கு 3 வீரர்கள் தரையிறங்கி பின் மீண்டும் பூமிக்குப் பத்திரமாகக் கொண்டுவரப்படுவர் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
ISROs Plan On Gaganyaan Mission to send humans to the moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X