Just In
Don't Miss
- News
சிலைகளுக்கு பதில்.. இந்தியா 'சகிப்புத்தன்மை.. மரியாதை' கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை கட்டணும்'.. ராஜன்
- Movies
அருண் விஜய்யின் அடுத்த மிஷனில் இணைந்த புதுமுக நடிகை.. அது என்ன மிஷன் தெரியுமா?
- Sports
மைதானம் முழுவதும் ஒலிக்கப் போகும் அந்த இளம் வீரரின் பெயர்.. கடும் சிக்கலில் ரிஷப் பண்ட்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இஸ்ரோவின் புதிய ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட காரணம் இதுதான்!
இஸ்ரோவின் அடுத்த புதிய ஏவுதளம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. அது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் பதில் அளித்து அதற்கான காரணம் என்ன என்பதையும் விளக்கியுள்ளார்.

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் அடுத்த புதிய ஏவுதளம்
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் அடுத்த புதிய ஏவுதளம் அமைக்கப்படவிருக்கிறது, அதற்கான நில கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி முக்கியமாக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் தான் இஸ்ரோவின் தற்போதைய இரண்டு ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் ஜிஎஸ்எல்வி மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடேங்கப்பா.!- நாளை முதல் வோடபோன், ஏர்டெல் கட்டணம் கடும் உயர்வு- புதிய திட்டங்கள்

மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்
இந்நிலையில் கூடுதல் ஆராய்ச்சிக்காக இன்னொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்த மத்திய அரசு, அதற்கான தகுந்த இடமாகத் தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்து, அதற்கான திட்டவரைவு தயார்செய்யப்பட்டு வருவதாக மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.

குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்கான முக்கிய காரணம்?
இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை இஸ்ரோ தலைவர் சிவன் விவரித்துள்ளார். தெற்கு நோக்கி ராக்கெட்டை ஏவவேண்டும் என்றால், ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் மத்தியில் கடற்பகுதிக்கு அருகில் இருந்தால் மட்டுமே இது சத்தியம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
டிசம்பர் 6 முதல் அனைத்து "ஜியோ கட்டணமும் உயர்வு": எவ்வளவு தெரியுமா?

2300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தெற்கு நோக்கி ராக்கெட்களை ஏவமுடியாது என்பதனால், தமிழகத்தில் இந்த சூழ்நிலையுடன் தகுந்த இடமாக இருக்கும் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று சிவன் தெரிவித்துள்ளார். இந்த புதிய ஏவுதளம் அமைக்க சுமார் 2300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என்றும், இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தைவிட சிறியது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090