Just In
- 25 min ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 47 min ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- 1 hr ago யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- 2 hrs ago புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
Don't Miss
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இஸ்ரோவின் NavIC சேவையை ஆதரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் சிப்செட்கள் இவைதான்!
இஸ்ரோ புதிய 'NavIC' என்ற இந்திய ஜிபிஎஸ் சேவையை ஆதரிக்கக்கூடிய சிப்செட்களை உருவாக்குவது குறித்து குவால்காம் மற்றும் பிராட்காம் போன்ற சிப் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகியது. தற்பொழுது அந்த பேச்சு வார்த்தை ஒரு முடிவிற்கு வந்துள்ளது.
மூன்று புதிய சிப்செட்கள்
குவால்காம் நிறுவனம் தற்பொழுது மூன்று புதிய சிப்செட்களை வெளியிட்டுள்ளது. இந்த மூன்று புதிய சிப்செட்களும் இந்தியாவின் நேவிக் செயற்கைக்கோள் சேவைகளை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று சிப்செட்களும் இஸ்ரோவில் உள்ள மேதைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
NavIC சேவை
இந்தியப் பிராந்திய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பின் (IRNSS) செயல்பாட்டுப் பெயர் தான் நாவிக் (NavIC). NavIC என்பது குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்தின் (ஜி.பி.எஸ்) இந்தியப் பதிப்பாகும். இஸ்ரோவின் இந்த புதிய NavIC சேவை ரஷ்யாவின் க்ளோனாஸ், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கலிலியோ மற்றும் ஜப்பானின் QZSS சேவைக்கு எதிராகப் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்கள்
குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 720 ஜி, 662 மற்றும் 460 போன்ற சிப்செட்களை NavIC சேவைக்கான ஆதரவுடன் வெளியிட்டுள்ளது. இவை நடுத்தர அடுக்கு செயல்திறன் கொண்ட சிப்செட்களுக்கான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் காணப்படும் சிப்செட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துல்லியத் தகவல்
ஜி.பி.எஸ் மற்றும் பிற செயற்கைக்கோள் பொருத்துதல் சேவைகளுக்கு மாறாகச் சிறந்த மற்றும் துல்லியமான ஜி.பி.எஸ் அளவீடுகளை வழங்க, NavIC இந்தியப் பயனர்களை மட்டும் கவனமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி, NavIC சுமார் 5 மீட்டர் வரை துல்லியத் தகவலை வழங்குகிறது.
3ஜிபிபி அனுமதி
இந்த புதிய இந்திய ஜி.பி.எஸ் சேவை இரட்டை அதிர்வெண் எஸ் மற்றும் எல் பேண்டுகளை ஆதரிக்கிறது. அதேபோல் 3ஜிபிபி (3GPP) முன்பே நாவிக் சிப்செட்களுக்கான அனுமதியை வழங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் NavIC ஆதரவுடன் களமிறங்கும் சாதனம்
தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி சியோமி நிறுவனம் நாவிக் ஆதரவுடன் கிடைக்கும் சிப்செட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. சியோமி ஸ்மார்ட்போன் சாதனங்கள் தான் இஸ்ரோவின்NavIC ஆதரவுடன் களமிறங்கும் முதல் சாதனங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470