Home
News

தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா?

பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜிபிஎஸ் அமைப்புக்கு மாற்றாக இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோளின் இந்திய வெர்ஷனை கொண்டுவர குவால்காம் போன்ற சிப் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்திய இருப்பிடத்தை அறியும் அமைப்பு நேவிக் என்று அழைக்கப்படுகிறது.

குவால்காம் ஒப்புதல்

குவால்காம் ஒப்புதல்

சமீபத்தில், குவால்காம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் தனது பங்காளிப்பை அறிவித்தது, ஐஆர்என்எஸ்எஸ் மற்றும் இந்திய விண்வெளி தளங்களுடன் ஊடுருவல்கள் தொடர்பான ஆதரவை அளிப்பதாக அறிவித்தது.

மற்ற நாடுகளின் வசதிகள்

மற்ற நாடுகளின் வசதிகள்

ஜி.பி.எஸ் என்பது வானொலி வழி இருப்பிடத்தை அறியும் அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்க அரசுக்கு சொந்தமான இதை அந்நாட்டு விமானப்படையால் இயக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜி.பி.எஸ் தவிர ரஷ்யாவின் க்ளோனாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ, சீனாவின் பெய்டோ ஆகிய இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோள் அமைப்புகள் உள்ளன.

இஸ்ரோவின் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்

இஸ்ரோவின் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்

2017 ஆம் ஆண்டு இந்தியா ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1- ஜி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியபோதே அதனுடைய இருப்பிடத்தை அறியும் அமைப்பு முறையை பெற்றுவிட்டது. இது இந்திய மண்டல இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கொள் அமைப்பில் (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்) ஏழாவது செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள்கள் புவிசார் ஒத்திசைவு மற்றும் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரத்யேக செயற்கைக்கொள் வசதி

பிரத்யேக செயற்கைக்கொள் வசதி

இது வெளிநாட்டு அரசையோ அல்லது வெளிநாட்டு சப்ளையர்களையோ சார்ந்து இல்லாமல் இந்திய மக்களுக்கும் ராணுவ பயணர்களுக்கும் அதன் கூட்டு அமைப்புகளுக்கும் பிரத்யேக செயற்கைக்கொள் இருப்பிடத்தை அறியும் அமைப்பு சேவையை வழங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.1.420 கோடி செலவிடப்பட்டது.

இந்திய மண்டலத்தை கண்காணிக்கும் செயற்கைகோள்

இந்திய மண்டலத்தை கண்காணிக்கும் செயற்கைகோள்

ஐஆர்.என்.எஸ்.எஸ் என்பது இந்திய மண்டல இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோள் அமைப்பு. இது நிலையான இருப்பிடத்தை அறியும் சேவையை அனைத்து பயனாளர்களுக்கும் வழங்குகிறது.

பல்வேறு வகையில் உதவி

பல்வேறு வகையில் உதவி

இது சாலை போக்குவரத்து, விமானப்போக்குவரத்து, கடல்போக்குவரத்து, பேரிடர் மீட்பு மேலாண்மை, வாகன கண்காணிப்பு, கடற்படை மேலாண்மை, செல்போன்களின் ஒருங்கிணைப்பு, துல்லியமாக நேரத்தை அளவிடுதல், வரைபடம் தயாரித்தல், நில அளவை செய்யும் விவரங்களை பெறுதல் ஆகியவற்றில் சிறந்து செயல்படுகிறது.

என்டிஏஏ மாநாட்டு அறிக்கை

என்டிஏஏ மாநாட்டு அறிக்கை

இந்த நிலையில் இந்தியாவின் நேவிக் செயல்பாட்டை, அமெரிக்க கூட்டமைப்பு ஊடுருவல் செயற்கோள் அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் (என்.டி.ஏ.ஏ) 2020 மாநாட்டு அறிக்கையின் ஒரு பகுதியாகும்

வாக்கெடுப்புக்கும் அனுப்பப்படும்

வாக்கெடுப்புக்கும் அனுப்பப்படும்

NDAA அதன் ஒப்புதலை வழங்கியிருந்தாலும், இது வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவின் சபை மற்றும் செனட் ஆகியவைகளில் விவாதம் நடத்தி வாக்கெடுப்பிற்கு பின்னர் சட்டமாக இயற்றப்பட வேண்டும்.

யு.எஸ்.சாட்னாவ் அமைப்பு

யு.எஸ்.சாட்னாவ் அமைப்பு

ரஷ்யாவின் க்ளோனாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ, சீனாவின் பெய்டோ ஆகியவைகளுக்கு யு.எஸ்.சாட்னாவ் அமைப்புகள் பொறுப்பு வகிக்காது, தனி நபர் தரவை பகிர்வது, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள் ஆகிய எந்த புகார்களுக்கும் யு.எஸ்.சாட்னாவ் உதவாது. ஆனால் தற்போது இந்தியாவின் நேவிக்குடன் இணைந்து செயல்பட இருக்கிறது.

இந்தியா பெருமைப்படும்

இந்தியா பெருமைப்படும்

NAVIC செயல்பாட்டை தங்களது ஊடுருவல்கள் அமைப்பாக நியமிப்பது என்பது பல உலகளாவிய செயற்கைகோள் அமைப்புகளுக்கு அமெரிக்கா வழங்கும் முன்மாதிரி நடவடிக்கைகளாகும். இதன்மூலம் இந்திய தயாரிப்பு செயற்கைகோளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட விரும்புவது இஸ்ரோவோடு இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமான செயலாகும்.

Source: indiatimes.com

Best Mobiles in India

English summary
ISRO's NAVIC Satellite Navigation System Gets Salute From United States
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X