இனி இந்த அமெரிக்க தொழில்நுட்பத்திற்கு வேலை இருக்காது.! இஸ்ரோ உருவாக்கியுள்ள ககன் நேவிகேஷன்.!
இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றது என்றே கூறலாம். இந்நிலையில் இஸ்ரோ உருவாக்கி இருக்கும் ககன் நேவிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதன்முறையாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது வானில் பறக்கும் விமானங்களின் துல்லியமான இருப்பிடம் முதல், ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் மேப் வரை அமெரிக்காவின்
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று தான் கூறவேண்டும்.

ஆனால் இந்த ஜிபிஎஸ் ஆனது முற்றிலுமாக அமெரிக்காவின் ராணுவ கண்டுபிடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொழில்நுட்பத்தை செயலிழக்க செய்வதற்கான முழு உரிமை அமெரிக்காவிற்கு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சொந்தமாக நேவிகேஷன் தொழில்நுட்பத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டதன் விளைவாக IRNSS மற்றும ககன் போன்ற தொழில்நுட்பங்களை இஸ்ரோ அமைப்பு உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

அதாவது இதற்கான பிரத்யேக செயற்கைக்கோளையும் இஸ்ரோ அனுப்பியுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கார் விமான நிலையத்தில் இண்டிகோ VTR-72 விமானம் இந்த ககன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரையிறங்கியது.

குறிப்பாக இஸ்ரோவின் இந்த தரமான தொழில்நுட்பம் மூலம் விமான தாமதமாகும் நேரம் குறையும் எனவும், எரிபொருள் சிக்கனம் மற்றும் விமானம் பாதுகாப்பு மேம்படும் எனவும் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தனர். எனினும், கொரோனா பெருந்தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மேலும் சமீபத்தில் நிலவிற்கு அனுப்பி வைக்கப்படும் சந்திராயன் 3 விண்கலம் திட்டத்திற்கான முதல் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதாவது ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் என்ற தலைப்பில் இஸ்ரோ வெளியிட்டு உள்ள 17 நிமிட ஆவணப்பதிவு வீடியோவில், இந்தியா அனுப்பிய 75 செயற்கைக்கோள்கள் காட்டப்பட்டு உள்ளன. பின்பு இதில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கு தயாரான சந்திரயான்-3 லேண்டர் போன்ற படமும் உள்ளது. மேலும் இந்த திட்டத்தினை நடப்பு ஆண்டு ஆகஸ்டில் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம் எனஇஸ்ரோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications