2020 நமதே., காலரை தூக்கும் இஸ்ரோ: சந்திரயான் 3, ககன்யான் என பல திட்டங்கள்

|

2020 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு புதிய பயணங்களை திட்டமிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 10-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சிவன் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஜிசாட் -1 செயற்கைகோள்

ஜிசாட் -1 செயற்கைகோள்

இந்த பட்டியலில் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களான ஜிசாட் -1 மற்றும் கிசாட் -2 ஆகியவை அடங்கும். கூடுதலாக, பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் ரிசாட் 2 பிஆர் 2 மற்றும் கண்காணிப்புக்கான மைக்ரோசாட் ஆகியவையும் ஏவப்பட உள்ளது.

ஆதித்யா 1(சன் மிஷன்)

ஆதித்யா 1(சன் மிஷன்)

2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆதித்யா எல் 1 (சன்) மிஷனையும், டிசம்பரில் ககன்யானின் முதல் ஆளில்லா சோதனை விமானத்தையும் தொடங்க இலக்கு வைத்துள்ளோம் என்று தலைவர் சிவன் கூறியுள்ளார். ஆதித்யா மிஷன் சூரியனை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் பணி ஆகும். இதை விண்ணுக்கு எடுத்து செல்ல 400 கிலோ பி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிதூள்.!- போதும்., போதும்னு சொல்ல வைக்கும் அடிதூள்.!- போதும்., போதும்னு சொல்ல வைக்கும் "ஜியோ": இலவசம் மேல் இலவசம் அறிவிப்பு

சூரியனை ஆராயத் திட்டம்

சூரியனை ஆராயத் திட்டம்

இந்த செயற்கைக்கோள் ஆறு விஞ்ஞான ஆராய்ச்சி பேலோடுகளை சுமந்து செல்ல உள்ளது. அவை பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ தூரத்தில் உள்ள லக்ராஜியன் புள்ளி 1 (எல் 1) ஐ சுற்றி உள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்வின் போது எந்தவொரு கிரகணமும் இல்லாமல் சூரியனை துள்ளியமாக ஆராய முடியும் என கண்காணிக்கப்படுகிறது. இது இஸ்ரோவுக்கு ஒரு பெரிய வெற்றியை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டமும் அடுத்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. மூன்று விண்வெளி வீரர்கள் பல்வேறு விண்பயிற்சி சோதனைகளுக்காக ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பப்படு உள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆர்.எல்.வி என்ற சிறிய செயற்கைக்கோள் செலுத்தும் கருவியும் 2020 ஆம் ஆண்டில் ஏவப்பட உள்ளது. செலவினங்களைக் குறைப்பதிலும், இஸ்ரோ ஊழியர்களுக்கு அதிக ஊதியம் செலுத்துவதிலும் ஆர்.எல்.வி ராக்கெட்டுகள் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

பட்ஜெட் சுமார் ரூ.666 கோடி

பட்ஜெட் சுமார் ரூ.666 கோடி

அடுத்த ஆண்டு இஸ்ரோவிற்கு அரசு வழங்கவுள்ள பட்ஜெட் சுமார் ரூ.666 கோடியாகும். சந்திரயான் 3 அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சந்திரயான் 3 திட்டத்தில் லேண்டர், ரோவர் மற்றும் கூடுதல் எரிபொருள் ஏற்றிச் செல்ல ஒரு பாகமும் இருக்கும். இதற்கான 75 கோடியில் ரூ.60 கோடி, சந்திரயான் 3-க்குத் தேவையான கருவிகள், பாகங்கள் வாங்குவதற்கும் ரூ.15 கோடி மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மிஸ் பண்ணா நாங்க பொறுப்பில்ல: உடனடியாக இதை செய்யுங்கள்- டுவிட்டர் வலியுறுத்தல்மிஸ் பண்ணா நாங்க பொறுப்பில்ல: உடனடியாக இதை செய்யுங்கள்- டுவிட்டர் வலியுறுத்தல்

செலவுத் திட்டங்கள்.,

செலவுத் திட்டங்கள்.,

ரூ.8.6 கோடி மனிதனை விண்ணிற்கு அனுப்பும் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் எனவும் ரூ.12 கோடி செலவில் சிறிய செயற்கைகோள்கள் சிலவற்றை விண்ணிற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது(இந்த நிகழ்வு 2021-2022ல்தான் செயல்படுத்தப்படும்). அதேபோல் இந்த விண்கலன்களை ஏவத்தேவையான ஏவுதளத்தை உருவாக்க ரூ.120 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Isro's 2020 target: Sun mission, Gaganyaan test-flight, chandrayaan 3, Etc

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X