Home
News

இஸ்ரோவின் அபார திட்டம் - 'மை'ப்போட்டு பேசிய மயில்சாமி..!

By Muthuraj

ஒரு தனியார் கல்லூரியின் தொடக்க விழாவின் போது, ஊடகங்களுடன் பேசிய பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ மூன்று மாதங்களில் நான்கு முக்கிய செயற்கைக்கோள்கள் தொடங்க இருக்கிறது என்று கூறியதுடன் இஸ்ரோவின் அபார திட்டம் பற்றிய துணுக்கையும் சேர்த்தே வழங்கியுள்ளார்.

உடனே அடுத்த செவ்வாய் கிரக பயணத்திற்கு மங்கள்யான்-2 தயாராகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது 'அதுக்கும் மேல'..!!

அண்டம் முழுக்க :

அண்டம் முழுக்க :

அடுத்த 3 ஆண்டுகளில் 'சாதனை' செயற்கைகோள் ஏவுதல்கள் , சந்திரன், ரஷ்ய கூட்டணி, சூரியன் என்று இஸ்ரோவின் திட்டங்கள் அண்டம் முழுக்க நீள்கிறது.

அபார திட்டம் :

அபார திட்டம் :

எப்போதும் இல்லாத அளவிற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 70 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வண்ணம் ஒரு அபார திட்டத்தை இஸ்ரோ ஆய்வு நோக்கத்தோடு முன்னெடுக்கிறது.

இடைவெளி :

இடைவெளி :

இஸ்ரோ ஏற்கனவே ஆகஸ்ட் 2015 மற்றும் ஆகஸ்ட் 2016 ஆகிய இடைவெளிக்குள் பத்து செயற்கைக்கோள்களை செலுத்தியிருக்கிறது, மேலும் நான்கு செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டமிடுகிறது.

விண்ணில் செலுத்த :

விண்ணில் செலுத்த :

இந்தாண்டு செப்டம்பரில் இன்சாட் - 3டிஆர் (INSAT-3DR) மற்றும் எஸ்சிஏடிசாட்-1 (SCATSAT-1), அக்டோபரில் ஜிசாட்-18, நவம்பரில் ரிசோர்ஸ்சாட்-2ஏ விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

சந்திரயான்-2 :

சந்திரயான்-2 :

புகழ்பெற்ற சந்திரயான் வெற்றிக்கு பிறகு, இஸ்ரோ ரஷ்யாவுடன் இணைந்து சந்திரயான்-2 திட்டத்தை தொடங்க இருக்கிறது.

தனி திட்டம் :

தனி திட்டம் :

ரஷ்யாவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் கூட இரண்டாம் முறை நிகழும் இந்த நிலா பயணம் இந்தியாவின் தனி திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியீடு :

வெளியீடு :

சந்திராயன் 2 முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோவராக இருக்கும் அதன் வெளியீடு 2017 இறுதியில் அல்லது 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் சூரிய ஆய்வு :

முதல் சூரிய ஆய்வு :

அனைத்தையும் விட மிக முக்கியமாக அண்ணாதுரையின் கருத்துப்படி இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு திட்டமான ஆதித்யா எல்1 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட இருக்கிறது.

தனி பயண சாம்ராஜ்யம் :

தனி பயண சாம்ராஜ்யம் :

இஸ்ரோவின் தனி பயண சாம்ராஜ்யத்தின் கீழ், இந்தியா பல விண்வெளி பயண திட்டங்களை அறிமுகம் செய்து வெற்றி கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடினமான உழைப்பு :

கடினமான உழைப்பு :

செவ்வாய் மற்றும் நட்சத்திரங்கள் சார்ந்த ஆய்வு என 82 வெற்றிகரமான விண்வெளி செயற்கைகோள்களுக்கு பின்னால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கடினமான உழைப்பு இருக்கிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பிரளய பூகம்பம் : நாளைக்கூட ஏற்படலாம், புதைந்து கிடைக்கும் ஆபத்து..!


அதிர்ச்சி : இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ISRO To Launch Four Key Satellites In The Next Three Months, Reveals Plans To Go To The Sun. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X