இஸ்ரோ வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்!

|

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், சந்திரனின் தன்துருவத்தின் புகைப்படத்தைத் தனது ஹெச்டி கேமராவால் படம்பிடித்து நிலவின் முதல் புகைப்படங்களை தற்பொழுது இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ளது. இஸ்ரோ ஒருவழியாக தற்பொழுது நிலவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

நிலவின் புகைப்படங்கள்

நிலவின் புகைப்படங்கள்

நிலவை ஆய்வு செய்து வரும் ஆர்பிட்டர் கருவி மூலம் நிலவின் தென்துருவ பகுதியின் பள்ளங்களைப் படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள நிலவுக்கு அருகாமையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இஸ்ரோவின் திட்டம்

இஸ்ரோவின் திட்டம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் 'இஸ்ரோ' சார்பில், ஜூலை 22ல், சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக தரையிறங்கப்பட வேண்டிய 'விக்ரம் லேண்டர்' கருவி, தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதன் தொடர்பை இழந்தது.

ரயில் பெட்டியில் இந்த மஞ்சள் நிற சாய்வு கோடுகள் ஏன் இருக்கிறது? இதற்கு அர்த்தம் தெரியுமா?ரயில் பெட்டியில் இந்த மஞ்சள் நிற சாய்வு கோடுகள் ஏன் இருக்கிறது? இதற்கு அர்த்தம் தெரியுமா?

ஆர்பிட்டர் விண்கலம்

ஆர்பிட்டர் விண்கலம்

தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பை மீண்டும் பெற இஸ்ரோ பல வழிகளை மேற்கொண்டது. நாசாவுடன் கூட இஸ்ரோ முயற்சித்தது, ஆனாலும் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. ஆனாலும் நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் விண்கலம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.

போகஸ்லாவ்ஸ்கி பள்ளம்

போகஸ்லாவ்ஸ்கி பள்ளம்

தற்பொழுது சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் 100 கி.மீ. உயரத்திலிருந்து நிலவின் மேற்பரப்பைப் படம்பிடித்துள்ளது. சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்துள்ள படத்தில் 4 கி.மீ. நீளம், 3 கி.மீ. விட்டம் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி இந்த போட்டோவில், பதிவாகியுள்ளது . இந்த பள்ளம் நிலவின் தென் பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் இல்ல ரயில் தான் நம்புங்க என்று வியக்க வைக்கும் முதல் தனியார் ரயில்!விமானம் இல்ல ரயில் தான் நம்புங்க என்று வியக்க வைக்கும் முதல் தனியார் ரயில்!

மின்காந்த துகள்கள்

மின்காந்த துகள்கள்

நிலவின் பள்ளங்களை அடையாளப்படுத்த விஞ்ஞானிகள் பெயர்களைச் சூட்டுவது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது புகைப்படத்தில் காணப்படும் பள்ளத்திற்கு, ஜெர்மனி, வானியல் அறிஞர் பலோன் எச் லட்விக் வான் போகஸ்லாவ்ஸ்கியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்துடன் இஸ்ரோ நேற்று வெளியிட்ட ஒரு தகவலில், நிலவின் தரைப் பகுதியில், மின்காந்த துகள்கள் இருப்பதை, விண்கலம் கண்டறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Best Mobiles in India

English summary
ISRO Releases Pictures Of Moon Surface Taken By Chandrayaan-2 Orbiter : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X