இஸ்ரோ வெளியிட்ட நிலவின் புதிய 'மூன்ஸ் இம்பாக்ட் கார்ட்டர்' படங்கள்!
சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் மேற்பரப்பில் காணப்படும் மூன்ஸ் இம்பாக்ட் கார்ட்டர்களை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ தற்பொழுது அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

லேண்டர் தரை இறங்கும்பொழுது பின்னடைவு
நிலவை ஆராய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர் தரை இறங்கும்பொழுது பின்னடைவு ஏற்படுத்தினால் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் ஆராய்ச்சி செய்வதில் தடை ஏற்பட்டது. ஆனால் சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவி ஆராய்ச்சி செய்து வருகிறது.
மூன்ஸ் இம்பாக்ட் கார்ட்டர்
தற்பொழுது சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர், மூன்ஸ் இம்பாக்ட் கார்ட்டர் எனப்படும் பள்ளங்களைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இந்த பள்ளங்கள் அனைத்தும் நிலவின் மேற்பரப்பில் எரிகற்கள், சிறுகோள்கள், விண்கற்களால் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

DF-SAR மூலம் பள்ளங்களை படம்பிடித்த இஸ்ரோ
நிலையின் மேற்பரப்பில் விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள இந்த கார்ட்டர் பள்ளங்கள் சிறிய அளவு, பெரிய அளவு, மல்டி ரிங் வலயங்கள் மற்றும் பெரிய பேசின் வடிவ பள்ளங்களாக உருவாகியுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த பள்ளங்களை இஸ்ரோ தனது DF-SAR மூலம் படம்பிடித்துள்ளது.

தொடங்கியது நிலவின் ஆராய்ச்சி
SAR மூலம் அதிக அழுத்தம் கொண்ட ரேடார் சிக்னல்களை நிலவின் மீது செலுத்தி, நிலவின் கடினமான பறை, கட்டமைப்பு, கலவை மற்றும் மேற்பரப்பு பொருள் பற்றிய கூடுதல் விவரங்களை இஸ்ரோ சேகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த புகைப்படங்களை வைத்துக் கூடுதல் ஆராய்ச்சியை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications