வடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்! ஸ்தம்பித்த உலக நாடுகள்!

|

News Source : Economictimes.indiatimes.com

கடந்த 2017 ஆம் ஆண்டு, வடகொரியாவில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனையானது, இரோஷிமாவில் நடத்தப்பட்ட அணுசக்தி வெடிகுண்டை விட 17 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்று இஸ்ரோ அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அணு ஆயுத சோதனை

அணு ஆயுத சோதனை

வடகொரியா அதிபர் கிம் ஜாங், அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை மிரட்டி வந்தார். பாதுகாப்பில்லாத அணு ஆயுத சோதனையை நடத்தியதால், அந்நாட்டின் மீது சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. பொருளாதார தடையினால் வடகொரியா பெரிய அளவில் சேதம் அடைந்தது.

பொருளாதார தடை

பொருளாதார தடை

அதற்குப் பின் அந்நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பைக் கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. அதற்கு கைமாறாக தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவிடம் கேட்டு கொண்டது. இருப்பினும் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனை குறித்து பல நாடுகள் ஆய்வு செய்து வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

3 பேர் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு

3 பேர் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு

வடகொரியாவில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனை குறித்து 3 பேர் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது. 3 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீஜித், ரித்தேஷ் அகர்வால் மற்றும் ஏ.எஸ்.ராஜாவாட் ஆகியோர் ஆய்வு செய்து அது குறித்த ஆய்வறிக்கையையும் தற்பொழுது தாக்கல் செய்துள்ளனர்.

மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்

மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்

வடகொரியா நடத்திய அணுசக்தி சோதனை மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், அந்த சோதனையில் 245 முதல் 271 கிலோ டன் எடை கொண்டது வெடிகுண்டுகள் சோதனை செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணுசக்தி குண்டுகள் இரோஷிமாவில் 1945ம் ஆண்டு வீசப்பட்ட குண்டுகளை விட ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு! முழுத்தகவல்.!ஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு! முழுத்தகவல்.!

இரோஷிமாவை மிஞ்சும் ஆபத்து

இரோஷிமாவை மிஞ்சும் ஆபத்து

இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட அணுக்குண்டை விட தற்பொழுது சோதனை செய்யப்பட்ட அணுகுண்டுகள் 17 மடங்கு ஆற்றல் அதிகமானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டில் 15 கிலோ டன் வெடிப்பொருள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தது.

ஸ்தம்பித்துபோன உலகம்

ஸ்தம்பித்துபோன உலகம்

மவுண்ட் மண்டபத்திற்கு கீழ் 542 மீட்டர் ஆழத்தில் இந்த அணுசக்தி சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால்தான் இந்த சோதனை நடத்தப்பட்ட இடத்தில் உள்ளமலை சற்று நகர்ந்துள்ளது என்றும், அதிர்ஷ்டவசமாக நிலநடுக்கம் ஏதும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள இந்த அறிக்கையால் உலக நாடுகள் ஸ்தம்பித்துபோய்யுள்ளது.

{document1}onep

Best Mobiles in India

Read more about:
English summary
ISRO Recent Report Says 2017 North Korean Nuke Test Is Powerful Than Hiroshima Nuke Missiles : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X