Subscribe to Gizbot

இந்தியாவை பார்த்து 'மீண்டும் ஒருமுறை' வாயைப்பிளக்க போகின்றன உலக நாடுகள்..!

Written By:

இஸ்ரோ - நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நம் நாட்டிற்கான செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதில் மட்டுமில்லை பிற உலக நாட்களின் செயற்கை கோள்களை 'முதுகில் சுமந்து' கொண்டு விண்ணுக்குள் நுழைவதிலும் அசைக்க முடியாத சாதனைகளை படைத்துள்ளது என்பது தான் நிதர்சனம்..!

பல உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கு இஸ்ரோ ஒரு 'சிம்மசொப்பனமாய்' விளங்குகிறது என்பதற்கு அமெரிக்கா தொடங்கி கனடா, பிரான்ஸ், கொரியா, துருக்கி என பல நாடுகள் இஸ்ரோவிடம் 'உதவிகேட்டு' ஒப்பந்தம் வைத்துக் கொண்டுள்ளதே சான்றாகும். இவ்வாறான பெருமைகளையும் தோற்கடிக்க முடியாத திறமைகளையும் கொண்டுள்ள இஸ்ரோவை கண்டு, பிற உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் 'மேலும் மேலும் வாயை பிளக்க இருக்கின்றன'..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வெற்றி :

வெற்றி :

உலக நாடுகளின் கவனம் இஸ்ரோவின் பக்கம் திரும்ப வாய்த்த பல காரணங்களில் ஒரு முக்கியமான காரணம் தான் - சந்திராயன் 1, 2008 ஆம் நான்ட்யு அக்டோபர் 22 ஆம் தேதி நிலவின் பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்யும் நோக்கதிற்காக விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றியும் அடைந்தது. அந்த வெற்றியானது தற்போது பிற உலக நாடுகளின் எல்லைகளை தாண்டி நிலவு தொட்டு பின் சூரியன் வரை பயணிக்க இருக்கிறது.

ஆதித்யா எல்1 :

ஆதித்யா எல்1 :

தற்போது இந்தியா நிலவை நோக்கி தனது இரண்டாம் வெற்றி பயணத்தை தொடர இருக்கிறது, அதாவது சந்திராயன்-2 விண்கலம் 2017 ஆம் நிலவில் தரை இறங்க இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தியா விண்வெளி ஆராச்சியின் முதல் சூரிய பயணமும் அரங்கேற இருக்கிறது. சுமார் 378.58 கோடி ரூபாய் செலவில் உருவாகும் ஆதித்யா எல்1 ஆனது 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்.

சந்திராயன்- 2 :

சந்திராயன்- 2 :

இந்த முறை நிலவிற்கு செல்லும் சந்திராயன்- 2 ஆனது நிலவு பற்றிய மேலும் பல அரிதான தகவல்களை சேமிக்க இருக்கிறது முக்கியமாக வேற்று கிரக வாசிகள் சார்ந்த அறிகுறிகள் மற்றும் சாத்தியக்கூறுகள் ஆகியவைகளை ஆராய இருக்கிறது என்று பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

லெக்ராஞ்சியப் புள்ளி :

லெக்ராஞ்சியப் புள்ளி :

சூரியனை நோக்கி பயணப்படும் ஆதித்யா எல்1 ஆனது, பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ள லெக்ராஞ்சியப் புள்ளியில் (Lagrangian point) செலுத்தப்பட்டு சூரியனை ஆராய இருக்கிறது.

ஏழு தரவு :

ஏழு தரவு :

மேலும் ஆதித்யா எல் 1 ஆனது சூரியனை வெளிப்புறக் அடுக்குகளை கண்காணிக்கும் வகையிலான அதிநவீன கொரோன்கிராப் (Coronagraph)தொலைநோக்கி உட்பட 7 வகையான ஏழு தரவுகளை சுமந்து செல்ல இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சகாப்தம் :

சகாப்தம் :

இதுபோன்ற விண்வெளி ஆராய்ச்சி களுக்கான விடயங்களில் மட்டுமின்றி, பிற நாட்டு செயற்கை கொல்களை வினில் செலுத்துவதில் உதவி புரியும் 'ஸ்பேஸ் மார்க்கெட்டிங்' என்பதில் சகாப்தம் ஒன்றை உருவாக்கி கொண்டிருகிறது இஸ்ரோ.

டாலர்கள் மற்றும் யூரோக்கள் :

டாலர்கள் மற்றும் யூரோக்கள் :

பிற நாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உதவியதில் இதுவரையிலாக சுமார் 15 மில்லியன் டாலர்கள் மற்றும் 80 மில்லியன் யூரோக்கள் ஈட்டியுள்ளது இஸ்ரோ, மேலும் 5 மில்லியன் டாலர்கள் மற்றும் 50 மில்லியன் யூரோக்கள் வரையிலான ஒப்பந்தகள் கைவசம் உள்ளன.

இந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் :

இந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் :

இவைகள் மட்டுமின்றி இந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் (Indian Regional Navigation Satellite - IRNSS) திட்டத்திற்கு ரூ. 1420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளக்கப்படம் :

விளக்கப்படம் :

இந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் எப்படி இயங்கும் என்ற விளக்கப்படம்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

விஞ்ஞானிகளின் மூளையை 'கசக்கும்' விண்வெளி குழப்பங்கள்..!!


கூகுள் மேப்ஸில் வினோதம், 'ஸூம்' செய்து பார்த்தால்... "அட"..!!


விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Isro all ready for Chandrayaan II and Aditya L1. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot