இயற்கை சீற்றம், கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க கிளம்பும் இஸ்ரோவைன் புதிய கண்.!

By Prakash
|

இதுவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் பல சாதனைகள் படைத்துள்ளனர், அடுத்து இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்த 29மணி நேர கவுண்ட்டவுன் நாளை தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட்டின் எடை பொறுத்தவரை 320டன் மற்றும் 44.4மீட்டர் உயரம் கொண்ட ராக்கெட்டில் அனுப்பபடும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைகோள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 ஆகஸ்ட்-31:

ஆகஸ்ட்-31:

வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது, மேலும் இதற்கான 29மணி நேர கவுண்ட்டவுன் நாளை பகல் 1.59மணிக்கு தொடங்கி 31ஆம் தேதி மாலை 6.59மணிக்கு நிறைவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.

இஸ்ரோ :

இஸ்ரோ :

கடல் சாரந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கான ஐஆர்என்எஸ்எஸ் 7செயற்கைகோள்களை ஏற்கனவே விண்வெளிக்கு அனுப்பியது இஸ்ரோ,
மேலும் தற்சமயம் முதலில் செலுத்தப்பட்ட செயற்க்கைகோள்களின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து இப்போது
புதிதாக ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைகோளை வடிவமைத்துள்ளது இஸ்ரோ.

இயற்கை சீற்றம்:

இயற்கை சீற்றம்:

இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த செயற்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறதுஎன விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனர்.

செயற்கைகோள் :

செயற்கைகோள் :

பூமியில் இருந்து 20ஆயிரத்து 657கிலோ மீட்டரில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சதீஷ்தவான்

சதீஷ்தவான்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சார்ந்த சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Countdown begins for PSLV C38 launch on Friday at 9 29 am ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X