உங்கள் குழந்தைகளும் இஸ்ரோவிற்கு செல்ல ஒரு அரிய வாய்ப்பு! இதை உடனே பண்ணுங்க!

|

இஸ்ரோ நிறுவனம் சமீபத்தில் அனுப்பிய சந்திராயன் - 2, விண்கலம் விரைவில் நிலவில் தரையிறங்கவுள்ள நிலையில் அந்த அரிய காட்சியை பிரதமர் மோடியுடன் உட்கார்ந்து பார்க்கும் அரிய வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. அதுகுறித்த தகவல்களை பார்ப்போம்.

 சந்திராயன் 2 நிலவில் இறங்குவதை பிரதமர் மோடியுடன் பார்க்க வேண்டுமா?
இஸ்ரோ

நடத்தும் ஆன்லைன் வினாடி வினா நிகழ்ச்சியில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றால் பிரதமருடன் உட்கார்ந்து சந்திராயன் - 2, விண்கலம் விரைவில் நிலவில் தரையிறங்கவுள்ளதை பார்க்கலாம்

விதிமுறைகள்:

விதிமுறைகள்:

1. இந்த வினாடி வினாவில் 20 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு 600 வினாடிகள் கால அவகாசம் தரப்படும்

2. ஒவ்வொரு கேள்வியும் வரிசைப்படி வரும். அதிகபட்ச சரியான பதிலை அளித்தவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். ஒரே மதிப்பெண்களை பலர் எடுத்திருந்தால் அவர்களின் கால அளவு கணக்கிடப்பட்டு அதில் யார் குறைவான நேரத்தில் பதில் அளித்துள்ளார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

#3

#3

கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் கேள்வியை ஸ்கிப் செய்துவிட்டு அடுத்த கேள்விக்கு செல்லலாம். பின்னர் கடைசியில் விடை தெரியாத கேள்விக்கான பதிலை முயற்சிக்கலாம். இந்த வினாடி வினா தற்போது ஆன்லைனில் உள்ளது.

ஆகஸ்ட் 23: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! ஆகஸ்ட் 23: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

#4

#4

இஸ்ரோ நிறுவனம் நடத்தும் இந்த ஆன்லைன் வினாடி வினா நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 20 வரை மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். வானியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த போட்டி நடத்தப்படுகிறது.

#5

#5

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் இஸ்ரோவின் இணையதளத்தில் கணக்கை தொடங்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே உண்டு. போட்டியை தொடங்கிவிட்டால் போட்டியை நிறுத்தவோ, தள்ளிப்போடவோ முடியாது. இந்தியர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழை இஸ்ரோ இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். போட்டியை முடித்த பின்னர் டவுன்லோடு ஆப்சன் தோன்றும்.

#6

#6

அதிகபட்சமாக சரியான விடை எழுதியவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். 20 கேள்விகளுக்கு பதில் அளிக்க 10 நிமிடங்கள் அதாவது 600 வினாடிகள் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் 20ஆம் தேதிக்குள் கலந்து கொள்ள வேண்டும்.

#7

#7

8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், யூனியன் பிரதேசங்களில் இருந்தும் இருவர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் பெங்களூர் இஸ்ரோ நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு பிரதமருடன் அமர்ந்து சந்திராயன் 2 நிலவில் தரையிறங்குவதை காணும் வாய்ப்பை பெறுவார்கள்

உச்சக்கட்ட குஷியில் உள்ள ஜியோ பயனர்கள்! அப்படி என்ன செய்தது ரிலையன்ஸ் ஜியோ?உச்சக்கட்ட குஷியில் உள்ள ஜியோ பயனர்கள்! அப்படி என்ன செய்தது ரிலையன்ஸ் ஜியோ?

#8

#8

வெற்றி பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், வெற்றி பெற்றவர்கள் தங்கள் பெற்றோர் பெயர், முகவரியுடன் கூடிய அரசின் அடையாள அட்டை, மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இருந்து ஒரு கடிதம் ஆகியவற்றை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

#9

#9

தவறான தகவல் கொடுத்து பங்கு பெறுவது, ஒருமுறைக்கு மேல் பங்கு பெறுவது, உள்பட முறைகேடு செய்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த போட்டியின் விதிமுறைகளை மாற்றவோ, நீக்கவோ இஸ்ரோவுக்கு உரிமை உண்டு

#10

#10

என்ன மாணவர்களா, இந்த போட்டியில் கலந்து கொண்டு பிரதமருடன் உட்கார்ந்து சந்திராயன் 2, விண்கலம் நிலவில் தரையிறங்குவதை பார்க்க தயாரா? உடனே https://quiz.mygov.in/quiz/online-space-quiz/ இணையதளத்திற்கு செல்லுங்கள்

Best Mobiles in India

English summary
ISRO Quiz: A Chance For Your Kids To Go To ISRO! Get It Done Right Now! : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X