6 மாதங்களில்10 செயற்கை கோள் ஏவும் இஸ்ரோ: பிறந்தநாளில் பிரதமர் வாழ்த்து.!

பிரதமர் நரேந்திர மோடி இன்று 68 பிறந்த நாள் கொண்டாடுகிறார். இந்த வேளையில் பிஎஸ்எல்சி சி42 ராக்கெட் இங்கிலாந்தின் இரண்டு செயற்கைகோள்கையும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

|

பிரதமர் நரேந்திர மோடி இன்று 68 பிறந்த நாள் கொண்டாடுகிறார். இந்த வேளையில் பிஎஸ்எல்சி சி42 ராக்கெட் இங்கிலாந்தின் இரண்டு செயற்கைகோள்கையும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

6 மாதங்களில்10 செயற்கை கோள் ஏவும் இஸ்ரோ: பிறந்தநாளில் பிரதமர் வாழ்த்து

மேலும் இஸ்ரோ சார்பில் அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரோவின் செயற்கைகோள் ஏவும் திட்டம் பல்வேறு நாடுகளின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவுக்கு உதவும் திட்டமும் தயாராகியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா:

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் நேற்று இரவு 10 மணிக்கு 8 நிமிடத்திற்கு வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்தப்பட்டது.

செயற்கை கோள் பயன்பாடு :

செயற்கை கோள் பயன்பாடு :

இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவசர் மற்றும் எஸ்1-4 ஆகிய செயற்கைகோள் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சூற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை உள்ளிட்டவைகளை கண்ணாகிக்க உதவும்.

583 கி.மீ சுற்றுவட்ட பாதை:

583 கி.மீ சுற்றுவட்ட பாதை:

பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17 நிமிடத்தில் இரண்டு செயற்கை கோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44வது பிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும்.

பிறந்த நாள் அன்று பிரமர் வாழ்த்து:

இன்று பிரதமர் நரேந்திர மோடி 68 வது பிறந்த நாள் கொண்டாடுகின்றார். இந்த வேளையில் இஸ்ரோ சார்பில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்டும், இங்கிலாந்தின் இரண்டு செயற்கை கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களில் 10 செயற்கை கோள்:

6 மாதங்களில் 10 செயற்கை கோள்:

அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைகோள் விண்ணிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தற்போது பிஎஸ்எல்வி சி42 ராக்கெட்டால் ஏவப்பட்ட இரண்டு செயற்கை கோள்கள் மூலம் நிலபரப்பு ஆய்வு, பேரிடர் கால கண்காணிப்பு கடல் வாழ்வழி போக்குவரத்து உள்ளிட்டவைகளை கண்காணிக்கும். செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கு எளிமையான ராக்கெட் பிஎஸ்எல்வி ஆகும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியாவுக்கு  உதவும்:

டிஜிட்டல் இந்தியாவுக்கு உதவும்:

வரும் காலங்களில் செலுத்த உள்ள செயற்கைகோள் பிரதமரின் டிஜிட்டல் இந்திய திட்டத்திற்கு உதவியாக இருக்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றி:

பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றி:

பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றி எதிர்கால திட்டங்களு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும். அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார். கடின உழைப்பால் உள்நாட்டு தொழில் நுட்பம் வெற்றியால், தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
isro president sivan says 10-satellites will be launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X