யாரும் தொடாத மைல்கல்லை தொடப்போகும் இஸ்ரோ! கே. சிவனின் மாஸ்டர் பிளான்!
அதென்ன சாதனை? அது ஏன் மிகவும் தனிப்பட்ட ஒரு சாதனையாக இருக்க போகிறது? என்பதை பற்றி எல்லாம் விரிவாக காண்போம்.
ஆம்! உலகின் எந்தவொரு நாடும் யாரும் தொடாத ஒரு எல்லையை, ஒரு இடத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தொடப்போகிறது. ஏற்கனவே குறைந்த செலவவில் பல அசாத்தியமான விண்வெளி ஆய்வுகளையும், பணிகளையும் செய்து முடிக்கிறது என்கிற பெயரை தன்வசம் தக்கவைத்துள்ள இஸ்ரோ, மேலுமொரு சாதனையையும் தன்பெயரின் கீழ் பொறித்துக்கொள்ள போகிறது.

அதென்ன சாதனை? அது ஏன் மிகவும் தனிப்பட்ட ஒரு சாதனையாக இருக்க போகிறது? என்பதை பற்றி எல்லாம் விரிவாக காண்போம்.

சந்திராயன் 2
சமீப காலமாக இஸ்ரோ நிலவின் மீது தான் தனது மாபெரும் இலக்கை வைத்துள்ளது என்பதை பற்றி அறிந்தவர்களுக்கு சந்திராயன் 2 பற்றிய அறிமுகமே தேவைப்படாது. சந்திராயன் 1 ஐ தொடர்ந்து பல தடைகளையும் தாமதங்களையும் கடந்து கூடிய விரைவில் நிலவை அடையப்போகும் சந்திராயன் 2 திட்டம் தான், மேற்குறிப்பிட்டுள்ள தனித்துவமான சாதனையையும் செய்ய போகிறது.

இஸ்ரோ
இஸ்ரோவின் அறிக்கையின் படி, சந்திராயன் 2 ஆனது வருகிற ஜூலை 5 முதல் ஜூலை 16 வரையிலான இடைப்பட்ட தேதிக்குள் ஒருநாள், ஒரு ஜிஎஸ்எல்வி மார்க் மூன்று ராக்கெட்டின் உதவியுடன் விண்வெளிக்குள் செல்ல உள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று சந்திராயன் 2 ஆனது நிலவில் தரை இறங்க வேண்டும் என்ற நோக்கத்தினை கொண்டு உள்ளது. இஸ்ரோவின் இந்த திட்டம் அப்படியே சாத்தியமாகும் பட்சத்தில், நிலவின் தென் துருவத்தில் ஒரு ரோவரை தரை இறக்கிய முதல் நாடு என்கிற வரலாற்று சாதனையை இந்தியா படைக்கும்!.

கே. சிவன்
சந்திரயான் 2 திட்டத்தை பற்றி பேசுகையில் இஸ்ரோவின் தலைவர் ஆன கே. சிவன் கூறுகையில், நிலவு சார்ந்த இஸ்ரோ அனைத்து பணிகளும் இதுவரையிலாக மிகவும் துல்லியமாக நடந்து வருகிறது. இஸ்ரோவின் ரோவர் ஆனது இதுவரை யாரும் போகாத இடத்திற்கு செல்ல உள்ளது" என்று கூறினார். பல வெளியீட்டு கால அட்டவணைகளின் திட்டத்தில் மட்டுமே இடம் பெற்று இருந்த சந்திராயன் 2 ஆனது தற்போது உருவாக்கம் பெற்றுள்ள புதிய வெளியீட்டு கால அட்டவணையின் படி, கிட்டத்தட்ட நிச்சயமாக விண்ணில் செலுத்தப்படும், அதாவது வருகிற ஜூலை மாதத்தில் துவங்கப்படும் என்று கே. சிவன் கூறினார்.

ஜூன் மாதம்
தரை இறங்கும் இடத்தை பற்றி பேசுகையில், "அந்தப் பகுதிக்கு யாரும் செல்லவில்லை என்றால், அங்கே சில புதிய அறிவியல் இருக்கலாம். சில புதிய தகவல்கள், புதிய விஞ்ஞானத்தை நாம் அணுகலாம், "என்றும் அவர் கூறினார். இந்த திட்டத்தின் இதர குறிக்கோள்கள் மற்றும் விவரங்கள் ஆனது ஜூன் மாதம் சந்திரயான் -2 செலுத்தப்பட்ட பிறகு வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

நிலவின் தென் துருவம்
சமீப காலமாக நிலவின் தென் துருவம் ஆனது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும், அந்த குறிப்பிட்ட பகுதியை அடைவதற்காக உலகின் பல நாடுகள் முயற்சி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டில்
குறிப்பாக சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரனின் தென் துருவத்தில், ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. மறுகையில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வருகிற 2024 ஆம் ஆண்டில் அதன் விண்வெளி வீரர்களை நிலவில் தரை இறக்கி ஆய்வுகளை மேற்கொள்ள வைக்கும் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறது.

இந்தியா
சீனா, சந்திரனில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதை பற்றி பற்றி கேட்டபோது, சிவன், "அவர்கள் (சீனா) என்ன செய்ய போகிறார்கள் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. இந்தியா ஏன் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்கிறது என்றால் இதுவரை யாரும் அந்த பக்கத்திற்கு செல்லவில்லை என்பதால் மட்டுமே!" என்று கூறினார்.

நாசா
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, சந்திர மண்டலத்தில் உள்ள சில மண்டலங்களில், சூரியக் குடும்பத்தின் மிகக் குறைவான வெப்பநிலையே கிடைக்க பெறுகிறது. அதனால் அங்கு நிலத்தடி நீர்மட்டநிலைகள் நிரம்பியுள்ளன. குறிப்பிடப்படும் அந்த மண்டலங்களில் குறிப்பிடத்தகுந்த ஐஸ் வைப்புத்தொகைகள் இருப்பதாக நம்பப்படுகிறது மற்றும் அந்த பகுதிகள் ஆனது சூரியனின் கதிர்வீச்சு அல்லது புவியியல் செயல்முறைகளால் பாதிக்கப்படாமல் இன்னும் அப்படியே இருக்கிறது. இந்த கோட்பாட்டின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கே. சிவன், "சந்திரயான் -2 திட்டம் கொண்டுள்ள பல இலக்குகளில், சந்திரனில் நீர் கைப்பற்றும் இலக்கும் அடங்கி உள்ளது" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








