Home
News

மனிதர்களை பெண் ரோபோ துணையுடன் விண்வெளிக்கு அனுப்பும் ISRO.. இதன் பணி என்ன தெரியுமா?

சந்திரயான்-3 (Chandarayaan-3) மிஷனுக்கு பிறகு இஸ்ரோ அடுத்து 2 பிரமாண்டமான விண்வெளி திட்டங்களை அடுத்தடுத்து 2 மாதங்களுக்குள் நிகழ்த்தவுள்ளதாக கூறியுள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்ய ஒரு திட்டமும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவொரு திட்டமும் மிக விரைவில் நிகழவுள்ளது.

நிலவை தொட்டு பதம்பார்க்க துவங்கியுள்ள இஸ்ரோ, அடுத்தபடியாக சூரியனையும் பதம் பார்க்கவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் நிகழ்த்தவுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 (Aditya L1) என்ற திட்டத்தை துவங்க இஸ்ரோ விரைவாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மனிதர்களை பெண் ரோபோ துணையுடன் விண்வெளிக்கு அனுப்பும் ISRO..

இதற்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தையும் (Gaganyaan Mission) இஸ்ரோ விரைந்து செய்து வருகிறது. இந்தியா சொந்த முயற்சியில் உருவாக்கி வரும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை, அக்டோபர் மாதத்தில் தொடங்கும் கூறப்பட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோ (ISRO) மற்றொரு துணை திட்டத்தையும் இத்துடன் சேர்த்து நடத்தியுள்ளது.

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ ஒரு பெண் ரோபோட்டையும் (India's female humanoid robot) சேர்த்துள்ளது. இந்த பெண் ரோபோட் விண்வெளிக்கு செல்லவிருக்கும் மனிதர்களுடன் பயணம் செய்யவுள்ளது. இந்த பெண் ரோபோட் மனித உருவத்தில் (ISRO's humanoid robot) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெண் ரோபோவை இஸ்ரோ வியோமித்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது.

வியோமித்திரா-வா? அப்படி என்றால் என்ன? இந்த பெயருக்கு என்ன பொருள் என்று பார்க்கையில், வியோமித்ரா என்பது வியோமா (விண்வெளி) மற்றும் மித்ரா (நண்பர்) என்ற இரண்டு பெயர்களின் கலவையுடன் வருகிறது. இதுவொரு சமஸ்கிருத வார்த்தையாகும். வியோமித்ரா என்பது பாதி மனித உருவத்துடன் இயங்கும் ரோபோவாகும்.

மனிதர்களை பெண் ரோபோ துணையுடன் விண்வெளிக்கு அனுப்பும் ISRO..

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு முன்னோட்டமாக முதல் ஆளில்லா ககன்யான் பயண சோதனைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெண் ரோபோட் கடந்த 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இஸ்ரோ திட்டமிட்டுள்ள மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் ஏதேனும் எதிர்பாராத இடர்கள் ஏற்பட்டால், அதை எச்சரிக்கும் வகையில் சுவிட்ச் பேனல் செயல்பாடுகளை இது செய்யும்.

அதுமட்டுமின்றி, இந்த பெண் ரோபோ, விண்வெளி வீரர்களுக்கு ஒரு துணையாகவும் இருக்குமென்று இஸ்ரோ கூறியுள்ளது. விண்வெளியில் வீரர்கள் அதிகமாக தனிமையை உணர்வார்கள் என்பதனால், அவர்களின் மனநிலையை பலப்படுத்த தேவையான உரையாடல்களை இந்த பெண் ரோபோட் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. வீரர்கள் கேட்கும் அணைத்து வகையான கேள்விகளுக்கும் இந்த ரோபோட் பதில் அளிக்கும்.

இஸ்ரோ உருவாக்கும் முதல் மனித உருவ ஹியூமனாய்டு ரோபோட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ககன்யான் திட்டம் ம 3 நாட்கள் 3 மனிதர்களை கொண்ட குழுவை விண்வெளியில் 400 கிமீ சுற்றுவட்டப்பாதையில் அனுப்பும் என்று கூறியுள்ளது. விண்வெளிக்கு அனுப்பும் இந்திய வீரர்களை மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரவும் இஸ்ரோ ஒரு திட்டத்தை சரியாக வகுத்துள்ளது.

வீரர்களை பத்திரமாக இந்திய பெருங்கடல் நீரில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பூமி போன்ற சூழலை வழங்குவதற்கும், வீரர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தவும் இஸ்ரோ பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அவசரக்காலத்தில் தப்பிக்க உதவும் எமெர்ஜென்சி அமைப்பையும் இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக, முதலில் இந்த பெண் ரோபோட் வியோமித்ரா ரோபோ ஒரு சோதனையோட்டத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இந்த சோதனையின் போது இஸ்ரோ ஏர் டிராப் டெஸ்ட், பேட் அபார்ட் டெஸ்ட் மற்றும் டெஸ்ட் வெஹிக்கிள் சோதனை போன்ற பல சோதனைகளை மேற்கவுள்ளது. இஸ்ரோ அடுத்த 2 மாதங்களில் இன்னும் பல புதிய சாதனங்களை படைக்கவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO planning to send vyommitra the female humanoid robot on Gaganyaan mission 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X