Home
News

நிலவில் இருந்து சந்திரயான் 4 பூமிக்கு லான்ச் செய்யப்படுமா? NASA-வை வியக்க வைத்த ISRO திட்டம்..

இந்த 2023ம் ஆண்டில் இந்தியாவின் மிகப் பெரிய சாதனை என்னவென்று கேட்டால் அனைவரும் சிறிதும் யோசிக்காமல் சொல்வது சந்திரயான் 3 (Chandrayaan 3) தான். விண்ணில் ராக்கெட் செலுத்துவதை பார்ப்பதற்கு எப்போதுமே நமக்கு ஆர்வம் இருக்கும்.

கடந்த 2019ம் ஆண்டு தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் அந்த சரித்திர நிகழ்வை ஆரய்ச்சியாளர்கள் கொண்டு சேர்ந்தனர். முதலில் இந்தியா அனுப்பிய செயற்கைக் கோளான சந்திரயான் 1 (Chandrayaan 1) நிலவின் வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. முதல் முறையாக இந்தியா, நிலவின் பரப்பில் சாஃப்ட் லான்டிங் (Soft-landing) செய்து அதனை ஆரய்ச்சி செய்ய வேண்டும் என்ற நோக்கில் சந்திரயான் 2 மிஷனை (mission) செயல்படுத்தியது.

நிலவில் இருந்து சந்திரயான் 4 பூமிக்கு லான்ச் செய்யப்படுமா?

சந்திரயான் 2-ன் மற்றொரு சிறப்பம்சம் நிலவின் தென் துருவத்தை அடைந்த வெகுசில நாடுகளின் பட்டியளில் இந்தியாவையும் சேர்ப்பது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதி கட்டத்தில் நிலவில் இருந்து சில மைல்கள் தூரத்தில் அதன் இலக்கை தவறவிட்டது. 2019 ஆம் ஆண்டு மொத்த இந்தியாவையும் வருத்தத்தில் ஆழ்ந்திய நிகழ்வு இது என்றே கூறலாம்.

சந்திரயான் 3 மிஷன் (Chandrayaan 3 Mission):

தோல்வியால் துவண்டு விழாமல் இந்த ஆண்டு சந்திரயான் 3 மிஷனை (Chandrayaan 3) வெற்றிகரமாக செயல்படுத்தி, நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லான்டிங் செய்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது. உலக நாடுகள் அனைத்தின் பார்வையையும் இந்தியாவின் பக்கம் ஈர்த்ததில் சந்திரயான் 3-க்கு முக்கிய பங்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

சந்திரயான் 3 மூலம் நிலவை பூமியில் இருந்து ஆராய்ச்சி செய்ய மட்டுமே முடிந்தது. இதை, சந்திரயான் 4 மூலம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதாவது, சந்திரயான் 4 ரிட்டன் டிக்கெட்டுடன் பூமியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மீண்டும் பூமியிலேயே வந்து முடியும் வகையில் உருவக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 4 (Chandrayaan 4) திட்டம்:

விளக்கமாக கூற வேண்டும் என்றால், சந்திரயான் 4 (Chandrayaan 4) நிலவின் பரப்பிற்கு சென்று அங்கு இருக்கும் மாதிரிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்கே வந்து சேறும். நிலவில் மாதிரிகளை வைத்து அதன் வளங்களைப் பற்றி முற்றிலுமாக ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ளலாம் என்பது தான் இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டம்.

இதற்காக சந்திரயான் 4 நான்கு மாடியூல்களுடன் (Modules) உருவாக்கப்பட உள்ளது. மேலும் இந்த சந்திரயான் 4-ஆனது பூமியில் இருந்து ஒரு முறை, நிலவில் இருந்து ஒரு முறை என்று இரண்டு முறை லான்ச் (Launch) செய்யப்படும் என்று இஸ்ரோ தெரிவிக்கின்றது. முதல் லான்ச்சில் ஒரு லான்டர் (Lander) மற்றும் அஸென்டர் (Ascender) மாடியூல்கள் பூமியில் இருந்து ஏவப்பட்டு, சந்திரயான் 3 லான்ட் ஆன இடத்திற்கே அனுப்பப்படும்.

நிலவின் அந்த தென்துருவ பகுதியில் அதிக வளங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குறிப்பாக அந்த இடத்தை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. மேலும், உயிர் வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களும், ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருளும் அந்த பகுதியில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

சந்திரயான் 4 (Chandrayaan 4) 2 முறை லான்ச் செய்யப்படுமா?

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு மாடியூல்களுடன் சேர்த்து இரண்டாவது லான்ச்சிற்காக ட்ரான்ஸ்ஃபர் மாடியூல் (Transfer module) மற்றும் ரீஎன்ட்ரி மாடியூல் (Re-entry module) என்று கூடுதலாக இரண்டு மாடியூல்கள் ஏவுகலத்தில் அனுப்பப்படும். இந்த இரண்டு மாடியூல்களும் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் காத்திருக்கும். தேவையான அராய்ச்சிகளை செய்து முடித்த பின்னர், நிலவின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு அசென்டர் மாடியூல் அதன் பரப்பில் இருந்து ரீஎன்ட்ரி மாடியூலை அடையும்.

அந்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு ட்ரான்ஸ்ஃபர் மற்றும் ரீஎன்ட்ரி மாடியூல்கள் நிலவில் இருந்து பூமிக்கு தனது ரிட்டன் பயணத்தை துவங்கும். சந்திரயான் 4 மிஷனிற்கான நோக்கம் மிகவும் கடினமான ஒன்றாக இருப்பதால் இதனை செயல்படுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த திட்டம் சிறப்பாக செயல்படுமானால் நாசாவைப் (NASA) போலவே இந்தியாவிடமும் நிலவின் உண்மையான மாதிரிகள் இருக்கும்.

இதன் மூலம் நிலவு பற்றி ஆராய்ச்சியில் இந்தியா முக்கிய இடம் பிடிக்கும். இதேபோல, உலக புகழ் பெற்ற நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகளை எடுத்துவரவும் தற்போது அந்த கிரகத்தில் ரோவரை இறக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO planning to launch Chandrayaan 4 two times one from earth and another from moon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X