ISRO தமிழத்தில் ஏவுதளம் அமைக்க இது தான் காரணம் - சிவன் விளக்கம்!

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் இரண்டாவது புதிய ஏவுதளம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே, ஏன் குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது? எரிபொருளைச் சேமிக்கவும், பேலோட் திறனை அதிகரிக்கவும் இஸ்ரோ என்ன திட்டம் வைத்துள்ளது என்ற காரணத்தை இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கியுள்ளார்.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் அடுத்த புதிய ஏவுதளம் அமைக்கப்படவிருக்கிறது, அதற்கான நில கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி முக்கியமாக குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் செய்தியாளரிடம் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் அமைக்கப்பட காரணம் என்ன?

தமிழகத்தில் அமைக்கப்பட காரணம் என்ன?

தமிழகத்தில் அமைக்கப்படும் இந்த புதிய ஏவுதளம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளங்களை விட அதிக நன்மையைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், புதிய ஏவுதளத்திலிருந்து, SSLV விண்கலங்களை நேரடியாக தென் துருவத்திற்கு ஏவ முடியும் என்பதால், வியூக ரீதியான நன்மையும் இந்தியாவிற்கு அதிகம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!

எரிபொருள் செலவு மிச்சமா?

எரிபொருள் செலவு மிச்சமா?

இதுமட்டுமின்றி முக்கியமாக நாம் இலங்கையைச் சுற்றிச்செல்ல வேண்டியதில்லை என்றும், இதனால் எரிபொருள் செலவும் பெரிய அளவில் மிச்சமாகும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் தான் இஸ்ரோவின் தற்போதைய இரண்டு ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் ஜிஎஸ்எல்வி மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு வருகிறது.

ராக்கெட் கழிவுகள் இலங்கையை தாக்கும்

ராக்கெட் கழிவுகள் இலங்கையை தாக்கும்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தென்துருவத்திற்கு நேரடியாக விண்கலங்களை ஏவ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான நன்மை தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள ஏவுதளம் மூலமே கிடைக்கும் என்பதால் குலசேகரன்பட்டினத்தை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது என்று கூறியுள்ளார். அதேபோல், ராக்கெட் கழிவுகள் இலங்கை மண்ணில் விழுவதைத் தவிர்க்க அத்தீவைச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

அனைத்து நன்மைகளுடன் மையப் பகுதியாக குலசேகரப்பட்டிணம்

அனைத்து நன்மைகளுடன் மையப் பகுதியாக குலசேகரப்பட்டிணம்

இதனால், தேவையற்ற எரிபொருள் செலவு ஏற்படுகிறது. பெரிய விண்கலங்களில் அதிக எரிபொருள் செலவு என்பது பிரச்சினையில்லை. ஆனால், சிறிய விண்கலங்களை விண்ணில் ஏவும் பொழுது செலவு அதிகமாகிறது. ஆனால், குலசேகரப்பட்டிணம் இவை அனைத்தையும் சமாளிக்கும் ஒரு மையப் பகுதியாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!

இஸ்ரோவில் தனியார் பங்கு

இஸ்ரோவில் தனியார் பங்கு

ராக்கெட் ஏவுதள மையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருவதாகவும், அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்திருக்கிறார்.இந்திய விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பைத் தொடர்ந்து, பல தொடக்க நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் தங்களை அணுகுவதாக கூறியுள்ளார்.

ஏவுதளத்திற்காக 2,300 ஏக்கர் நிலம்

ஏவுதளத்திற்காக 2,300 ஏக்கர் நிலம்

விண்வெளித் துறையில் தங்களின் பங்களிப்பை மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டிவருவதாகவும் விண்வெளித் துறையின் செயலாளராக இருக்கும் சிவன் கூறியுள்ளார்.விண்வெளி நிலையம் அமைப்பதற்காக மாதவன்குரிச்சி, படுகாபத்து மற்றும் பல்லகுரிச்சி ஆகிய மூன்று கிராமங்களில் சுமார் 2,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ISRO New Launchpad In Tamil Nadu To Save Fuel And Increase Payload Capacity : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X