Home
News

இனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்

பிஸ்.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டில் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோளும் அனுப்பப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டானது எக்ஸ் எல் வகையின் 21 ஆவது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாய்ந்த 74 ஆவது ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கார்ட்டோசாட் -2 அனுப்பிய தேதி

கார்ட்டோசாட் -2 அனுப்பிய தேதி

கார்ட்டோசாட்-2 அனுப்பிய தேதி இஸ்ரோ முன்னதாகவே கார்டோசாட் 2 செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 2017 ஆம் வருடம் ஜூன் 23 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

கார்ட்டோசாட்-3 எதற்கு

கார்ட்டோசாட்-3 எதற்கு

கார்ட்டோசாட்-3 செயற்கைகோளானது பூமியை மிக துல்லியமாக படம் பிடிக்கும். இந்த செயற்கை கோளானது 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த கார்ட்டோசாட்-3 பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும்.

பெரிதளவு பயன்பெற இருக்கும் ராணுவம்

பெரிதளவு பயன்பெற இருக்கும் ராணுவம்

பெரிதளவு பயன்பெற இருக்கும் ராணுவம்
இந்த செயற்கை கோள் ராணுவ அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயற்கைகோளின் மூலம் பூமியை துல்லியமாக படம் பிடிப்பதன் மூலம், எதிரிகளின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள், தீவிரவாதிகள் பதுங்கும் இடங்கள், ஆயுதக்கிடங்கு உள்ளிட்டவைகள் எளிதாக கண்டறியமுடியும்.

இஸ்ரோ சாதனைகள்

இஸ்ரோ சாதனைகள்

இஸ்ரோ வரலாற்றில் ஒரே ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கு 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவுவது இதுவே முதன்முறை ஆகும். நாளை செலுத்தப்பட உள்ள ரிசாட் வரிசை செயற்கைகோளுடன் ஜப்பான், லக்சம்பர்க் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் 10 செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

விண்ணில் பாய்ந்த ராக்கெட்:

விண்ணில் பாய்ந்த ராக்கெட்:

பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் நாளை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது. கவுண்டவுன் முடிந்த நிலையில், இன்று காலை சரியாக 9.28 மணிக்கு, ராக்கெட் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.

Best Mobiles in India

English summary
ISRO launches pslvc47 with cartosat 3 and 13 nano satellites
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X