இந்தியாவின் அடுத்த கல்பனா சாவ்லா யார்? துடிப்பான பெண்களை விண்வெளிக்கு அனுப்ப ISRO முடிவு.. யார் அந்த பெண்?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) அடுத்த மிகப்பெரிய கனவு திட்டம் என்றால், அது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் (Gaganyaan mission) தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த திட்டத்திற்கான பணிகளை இஸ்ரோ இப்போதே துவங்கிவிட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மனித விண்வெளித் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு தேவையான சோதனைகள் மற்றும் பணிகளை முழுவீச்சில் வேகமாக செய்து வருகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முக்கிய பகுதியான, விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு க்ரூ மாட்யூலை (Gaganyaan crew module) இஸ்ரோ சமீபத்தில் சோதனை செய்த்து.

இஸ்ரோவின் திட்டத்தின் படி, இந்த மாட்யூல் விண்வெளியில் இருந்து பத்திரமாக 3 பாராச்சூட் உதவியுடன் தரையிறக்கப்பட்டது. இந்த வெற்றிபெற்ற சோதனையை தொடர்ந்து நடந்த பத்திரிகை கலந்தாய்வில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆன எஸ். சோமநாத், ககன்யான் திட்டத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை கட்டவிழ்த்திருக்கிறார்.
அவர் கூறிய தகவலின் படி, ககன்யான் திட்டத்தில், ஒரு பெண் விண்வெளி வீரரை (woman astronaut) இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த பெண் வீரர் ஒரு பெண் போர் விமான சோதனை விமானியாக (women fighter test pilots) இருக்கலாம், அல்லது பெண் விஞ்ஞானியாக (woman scientists) கூட இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் பெண்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று விண்வெளி ஏஜென்சி தலைவர் எஸ் சோமநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இஸ்ரோ தனது ஆளில்லா ககன்யான் விண்கலத்தில் பெண் மனித உருவத்தில் இருக்கும், ஒரு ஹுமனாய்டு ரோபோவை (female humanoid robot) அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பும் என்றும் சோமநாத் கூறியுள்ளார்.
இந்த ககன்யான் திட்டத்தின் முதல் மனித பயணத்தின் போது, இந்திய விண்வெளி வீரர்கள் மூன்று நாட்களுக்கு 400 கிமீ குறைந்த பூமி (earth) சுற்றுப்பாதையில் சுற்றிவருவார்கள் என்றும் கூறினார். பிறகு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு மீண்டும் கொண்டு வரப்படுவார்கள் என்றும் திட்டத்தின் நோக்கத்தை பற்றி சோமநாத் விளக்கினார்.
இந்த வீரர்களில் ஒரு பெண் வீரரும் இருப்பார் என்று இஸ்ரோ உறுதிபட தெரிவித்துள்ளது. ஆனால், விண்வெளிக்கு அனுப்ப தகுதியான மற்றும் சாத்தியமான (பெண்கள்) வேட்பாளர்களை இஸ்ரோ இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும், என்று சோமநாத் கூறியுள்ளார். மனித விண்வெளிப் பயணமான ககன்யானுக்கு முன்னதாக இஸ்ரோ தனது டிவி-டி1 (TV-D1 test vehicle) சோதனை வாகனத்தை வெற்றிகரமாக ஏவியது.
இஸ்ரோவின் கூற்றுப்படி, வரும் 2025-ம் ஆண்டுக்குள் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கான ஆரம்ப வேட்பாளர்களாக, விமானப்படை போர் விமான சோதனை பைலட்களை (Air Force fighter test pilots) சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இவர்கள் தான் விண்வெளி பயணத்திற்கு சற்று ஏற்றவர்கள் மற்றும் வித்தியாசமான வகையினர் என்று கூறியுள்ளார்.
தற்போது, இந்தியாவிடம் பெண் போர் விமான சோதனை பைலட்கள் இல்லை. எனவே, எதிர்காலத்தில் அவர்கள் வந்தவுடன், அவர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக சோமநாத் தெரிவித்துள்ளார். அதேபோல், இரண்டாவது விருப்பமாக பெண் விஞ்ஞானிகளை, விண்வெளி வீரர்களாக மாற்றவும் இஸ்ரோ ஐடியா செய்து வருகிறது என்று கூறியுள்ளார். பெண்களுக்கு விண்வெளி துறையில் சாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது, பெண் போர் விமான சோதனை விமானிகள் இல்லாததால், இந்த நோக்கம் வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன, என்று சோமநாத் விளக்கினார். அதேபோல், வரும் 2035ம் ஆண்டிற்குள், ஒரு முழுமையான விண்வெளி நிலையத்தை இஸ்ரோ தனித்து உருவாக்கி விண்வெளியில் நிலைநாட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








