ISRO-வின் 2020 திட்டங்கள் இதுதான்! இதில் ககன்யான் திட்டத்திற்கு உதவ உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தனது ககன்யான் திட்டத்திற்கான ஆலோசனை வழங்க இந்தியர்களுக்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது. இஸ்ரோவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் பணிக்கு உதவும் வகையில், மலிவான உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்களின் ஆலோசனையை வழங்க அழைப்புவிடுத்துள்ளது.

மனிதர்களின் பெருமிதம் கொள்ளும் நிகழ்வாக ககன்யான்

மனிதர்களின் பெருமிதம் கொள்ளும் நிகழ்வாக ககன்யான்

அனைத்து மனிதர்களுக்கும் இந்த ககன்யான் பணியின் விளைவு, பெருமிதம் கொள்ளும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருக்கும் என்று இஸ்ரோ எதிர்பார்க்கிறது. அதேபோல், இந்த பணிக்கான கண்டுபிடிப்புகள் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்திற்கு மதிப்பு சேர்க்கவும், தேசிய வளர்ச்சியை நோக்கி முன்னேறி உதவ உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் உதவிக்கு இஸ்ரோ அழைப்பு

ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் உதவிக்கு இஸ்ரோ அழைப்பு

எவ்வாறாயினும், விண்வெளி அமைப்பு இந்த பணியைச் சரியாகச் செய்து வெற்றி அடைய, மேலும் பல திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக இஸ்ரோ நம்புகிறது. இதனால் தான் இப்போது இஸ்ரோவுக்கு உதவ ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் உதவிக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. எந்த எந்த துறையில் இஸ்ரோவிற்கு உதவி தேவைப்படுகிறது என்று ஒரு பட்டியலையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ரூ.1500-க்கு கிடைக்கும் 'வில்லேஜ் ஏசி' - மலிவு விலையில் இப்படி ஒரு ஏசியா?ரூ.1500-க்கு கிடைக்கும் 'வில்லேஜ் ஏசி' - மலிவு விலையில் இப்படி ஒரு ஏசியா?

இந்த துறைகளில் உதவக்கூடிய ஆலோசனை தேவை

இந்த துறைகளில் உதவக்கூடிய ஆலோசனை தேவை

சமீபத்திய ஊடக அறிக்கையின்படி, கதிர்வீச்சு அபாய தன்மை மற்றும் குறைப்பு, விண்வெளி உணவு, விண்வெளியில் வாழ்விடங்கள் அமைத்தல் மற்றும் மனித-ரோபோ இடைமுகங்கள் போன்ற துறைகளுக்கு உதவ அழைப்புவிடுத்துள்ளது. இந்த துறைகளில் உதவக்கூடிய தொழில்நுட்பங்களுடன் ஆலோசனை தரும் நிறுவனங்களுக்கு இஸ்ரோ தங்களின் ககன்யான் திட்டத்தில் உதவுவதற்கு வாய்ப்பளிக்கிறது.

3D உற்பத்தி ஆகிய துறைகளிலும் உதவி தேவை

3D உற்பத்தி ஆகிய துறைகளிலும் உதவி தேவை

அதேபோல், வெப்ப பாதுகாப்பு அமைப்புகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை ஆதரவு அமைப்புகள், பசுமை உந்துவிசை, குப்பைகள் மேலாண்மை மற்றும் குறைப்பு, எரிசக்தி சேணம், சேமிப்பு மற்றும் இன்-சிட்டு 3D உற்பத்தி ஆகிய துறைகளில் இஸ்ரோ வெளிப்புற உதவியை தற்பொழுது நாடியுள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்களும் இஸ்ரோவுக்குத் தேவை

தொழில்நுட்ப வல்லுநர்களும் இஸ்ரோவுக்குத் தேவை

உருவகப்படுத்தப்பட்ட ஈர்ப்பு, நீண்ட கால பயணங்களுக்கான மனித உளவியல், விண்வெளி மருத்துவம் மற்றும் நோயறிதல் போன்ற தொழில்நுட்பங்களில் வல்லுநர்களும் இஸ்ரோவுக்குத் தேவைப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்! இப்படி ஒரு அம்சமா?Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்! இப்படி ஒரு அம்சமா?

ஜூலை 15ம் தேதிக்குள் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம்

ஜூலை 15ம் தேதிக்குள் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம்

ஜூலை 15, 2020 வரை இஸ்ரோ இந்த வாய்ப்பை அளிக்கிறது. நல்ல ஆலோசனையுடன் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு உதவ முடியும் என்று நினைப்பவர்கள் தங்களின் உதவி ஆலோசனையை ஜூலை 15ம் தேதிக்குள் அவர்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த கால இடைவெளியில் மட்டுமே ஆலோசனைகள் ஏற்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!

இஸ்ரோவின் ககன்யான் முதல் சோதனை எப்பொழுது?

இஸ்ரோவின் ககன்யான் முதல் சோதனை எப்பொழுது?

இது இஸ்ரோவின் முதல் மனித விண்வெளி விமான ஆராய்ச்சி திட்டமாக ககன்யான் இருப்பதால், இந்த பணியை மேற்கொள்வதற்கு முன் நீண்ட கால ஆராய்ச்சியை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ககன்யான் பணியின் ஒரு பகுதியாக 'வயோமித்ரா' என்ற மனித உருவம் கொண்ட ஹியூமனாய்டு அல்லது மனித ரோபோவை இஸ்ரோ மனிதர்களுடன் விண்வெளிக்கு அனுப்பும் என்று கூறியுள்ளது. இஸ்ரோவின் ககன்யான் முதல் சோதனை 2020 இறுதிக்குள் நடத்தப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இஸ்ரோவின் 2020 திட்டங்கள் இதுதான்

இஸ்ரோவின் 2020 திட்டங்கள் இதுதான்

Gaganyaan திட்டங்கள் தவிர, இஸ்ரோ மேலும் பல திட்டங்களை இந்த 2020 அம் ஆண்டில் நிகழ்த்தவுள்ளது. குறிப்பாக 10 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவவுள்ளது. ஆதித்யா எல் 1 (சூரியன்) மிஷன், கிசாட் 1, கிசாட் 12R, போன்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும், ரிசாட் -2BR2 மற்றும் மைக்ரோசாட் போன்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ 2020 இல் ஏவவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ISRO Invites Ideas For The First India's Human Space Flight Gaganyaan Mission : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X