பக் பக் நிமிடத்தில் இஸ்ரோ! நிலவின் தென்துருவதில் தரையிறங்க இந்தியா தயார்!

|

இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து,விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ISRO-வின் அறிவிப்புப் படி செப்டம்பர் 7ஆம் தேதி, நிலவி தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர்

சந்திரயான் 2 விண்கலம் நேற்று அதன் இறுதிக்கட்ட சுற்று வட்டப்பாதை 119 கி.மீ x 127 கி.மீ அடைந்தது. இதற்குப் பின் நேற்று சரியாக 12.45 முதல்01.45 மணி அளவில் விக்ரம் லேண்டர் சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.

தரை இறங்கத் தயார்

சந்திரயான் 2 ஆர்பிட்டர் தனது பயணத்தை நிலவைச் சுற்றி அதன் சுற்று வட்டப் பாதையில் தொடரும். அதேபோல் விக்ரம் லேண்டர் இரண்டு டீ-ஆர்பிட்களை செப்டம்பர் 3 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 4 ஆம் தேதிகளில் முடித்து, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கத் தயார் செய்யப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

யுபிஐ எச்சரிக்கை: உடனே உஷார் ஆகிக்கொள்ளுங்கள் இல்லைனா பணம் அபேஸ்!யுபிஐ எச்சரிக்கை: உடனே உஷார் ஆகிக்கொள்ளுங்கள் இல்லைனா பணம் அபேஸ்!

இஸ்ரோவின் விக்ரம் 'டச் டௌன்'

இஸ்ரோவின் தகவலின்படி விக்ரம் 'டச் டௌன்' செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சரியாகச் செப்டம்பர் 7 ஆம் தேதி 01:30 முதல் 02:30 மணியளவில் நிலவின் தென்துருவ மேற்பரப்பில் தரை இறுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்டிசன்ஸ்களின் மனதை வென்ற இளம் பெண்! என்ன செய்தார் தெரியுமா?நெட்டிசன்ஸ்களின் மனதை வென்ற இளம் பெண்! என்ன செய்தார் தெரியுமா?

பிரக்யான் ரோவர்

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும் அடுத்தகட்டமாக விக்ரம் லேண்டர் எடுத்துச் செல்லும் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் சுமார் 500 மீட்டர் தொலைவில் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதேபோல் சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவை 100 கி.மீ தொலைவில் உள்ள சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்து புகைப்படங்களை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா One Action பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் களமிறங்கியது! விலை & சலுகை விபரம்!மோட்டோரோலா One Action பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் களமிறங்கியது! விலை & சலுகை விபரம்!

பக் பக் நிமிடங்களை நெருங்கி வரும் இஸ்ரோ

இஸ்ரோ தனது சந்திரயான் 2 திட்டத்தை வெற்றிகரமாக படிப்படியாக நிகழ்த்தி வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இஸ்ரோ கூடுதல் கவனத்துடன் செயல்பட்டுவருகிறது. கடந்த ஒரு வாரமாக முக்கிய பணிகள் நடந்து வருவதனால் இஸ்ரோவில் உள்ள அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். பக் பக் நிமிடங்களை நெருங்கி வரும் இஸ்ரோவுக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Isro in the tense minute! India ready to land on the moon! : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X