நாங்க ரொம்ப பிசி: அடுத்த 4 மாதத்தில் 13 திட்டங்கள்- அயராது உழைக்கும் இஸ்ரோ

|

கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் உட்பட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏராளோமானோர் பாராட்டு தெரிவித்தனர்.

விண்ணில் செலுத்திய இஸ்ரோ

விண்ணில் செலுத்திய இஸ்ரோ

பிஸ்.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டில் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோளும் அனுப்பப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டானது எக்ஸ் எல் வகையின் 21 ஆவது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாய்ந்த 74 ஆவது ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கார்ட்டோசாட்-3 எதற்கு

கார்ட்டோசாட்-3 எதற்கு

கார்ட்டோசாட்-3 செயற்கைகோளானது பூமியை மிக துல்லியமாக படம் பிடிக்கும். இந்த செயற்கை கோளானது 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த கார்ட்டோசாட்-3 பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும்.

இதுதான் நம்ம இதுதான் நம்ம "சர்கார்"- இந்திய அரசின் அத்தியாவசிய 'ஆப்'கள்: ஒன்றாவது உங்களிடம் உள்ளதா?

பெரிதளவு பயன்பெற இருக்கும் ராணுவம்

பெரிதளவு பயன்பெற இருக்கும் ராணுவம்

இந்த செயற்கை கோள் ராணுவ அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயற்கைகோளின் மூலம் பூமியை துல்லியமாக படம் பிடிப்பதன் மூலம், எதிரிகளின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள், தீவிரவாதிகள் பதுங்கும் இடங்கள், ஆயுதக்கிடங்கு உள்ளிட்டவைகள் எளிதாக கண்டறியமுடியும்.

விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்

விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்

இஸ்ரோ வரலாற்றில் ஒரே ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கு 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவுவது இதுவே முதன்முறை ஆகும். நாளை செலுத்தப்பட உள்ள ரிசாட் வரிசை செயற்கைகோளுடன் ஜப்பான், லக்சம்பர்க் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் 10 செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது.

வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்

வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்

இந்த பி.எஸ்.எல்.வி சி47 ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும் அதில் இருந்த கார்ட்டோசாட் 3 செயற்கைகோள் தனியாக பிரிக்கப்பட்டது. பின் கார்ட்டோசாட் 3 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த வெற்றியையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கைக்கொடுத்து வெற்றியை பகிர்ந்தனர்.

இஸ்ரோ தலைவர் சிவன் மகிழ்ச்சி

இஸ்ரோ தலைவர் சிவன் மகிழ்ச்சி

கார்டோசாட் -3 இந்தியாவின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட விண்கலம் எனவும் இதுவரை இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்டதிலேயே மிகவும் சிக்கலான மற்றும் மேம்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் இதுவென இஸ்ரோ தலைவர் சிவன் கூறி மகிழ்ந்தார்.

கெட் ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி!கெட் ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி!

அடுத்தடுத்து பணிகள் உள்ளது

அடுத்தடுத்து பணிகள் உள்ளது

மேலும், வருகிற 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இஸ்ரோவால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் வரிசையாக இருக்கிறது என கூறினார். 6 ராக்கெட் திட்டம் மற்றும் ஏழு செயற்கைக்கோள்கள் திட்டம் (பயணங்கள்) என மொத்தம் 13 பணிகள் வரிசையாக உள்ளதாக பட்டியலிட்டார். வழக்கம்போல் இஸ்ரோவால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது எனவும் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் இஸ்ரோ, ஒவ்வொரு பணியையும் ஆகச்சிறந்த வெற்றியாக மாற்றும் என்று நம்புவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Isro have planning to 13 missions till march

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X