Home
News

இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் கொண்டுவரக் காரணம் இதுதானா?

தூத்துக்குடியில் விரைவில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது. இந்த புதிய இஸ்ரோ தளத்திற்கான நில ஒப்புதலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைப்பதற்கான காரணத்தையும் தற்பொழுது விளக்கியுள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளம்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளம்

சென்னைக்கு அருகே உள்ள ஆந்திராவின் எல்லையில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் தான் இஸ்ரோவின் தற்போதைய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து தான் இஸ்ரோவின் ராக்கெட்டுகள், சாட்டிலைகள் மற்றும் விண்வெளி திட்டங்கள் அனைத்தும் ஏவப்படுகிறது.

 தூத்துக்குடியில் விண்வெளி ஏவுதளம்

தூத்துக்குடியில் விண்வெளி ஏவுதளம்

தற்போது தூத்துக்குடியிலும் இதுபோன்ற ஏவுதளம் ஒன்றை அமைக்கத் தமிழக அரசுடன் சேர்ந்து திட்டமிட்டு இருக்கிறார்கள். பல வருடங்களாகத் தூத்துக்குடி மக்களின் கோரிக்கையாக இது இருந்துள்ளது. தூத்துக்குடியில் விண்வெளி ஏவுதளம் அமைக்கப்பட்டால் எங்கள் மாவட்டம் வேகமாக வளரும் என்று அம்மாவட்ட மக்கள் முன்பே தெரிவித்திருந்தனர்.

தூத்துக்குடியில் ஏவுதளம் அமைக்க இஸ்ரோவின் காரணம்

தூத்துக்குடியில் ஏவுதளம் அமைக்க இஸ்ரோவின் காரணம்

தூத்துக்குடியில் ஏவுதளம் அமைப்பதற்கு இஸ்ரோவின் காரணமும் கூறப்பட்டுள்ளது, ஸ்ரீஹரிகோட்டாவை விடத் தூத்துக்குடிதான் இந்தியப் பெருங்கடலுக்கு அருகில் இருக்கிறது. இதனால் ஆராய்ச்சி பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய இந்த ஏவுதளம் மிகவும் பயன்படும், எளிதாக இருக்கும். அதேபோல் பிறநாடுகளுக்கும் விண்வெளி பொருட்களை எடுத்து செல்லவும் எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒப்புதல்

மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒப்புதல்

அம்மாவட்ட மக்களின் ஆசைப்படி தற்போது தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் தற்போது ஏவுதளத்திற்கான நிலம் தேடும் பணி துவங்கியுள்ளது.

தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி

விரைவில் இஸ்ரோவின் விண்வெளி ஏவுதளம் தூத்துக்குடியில் அமைக்கப்படும் என்றும், நிலத்திற்கான இடத்தை உறுதி செய்தவுடன் உடனடியாக கட்டுமான பணிகள் துவங்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த செய்தியைக் கேட்டு தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
ISRO Has Acquired The First Approval For Its New ISRO Launch At Tuticorin From CM : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X