இஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி இன்று அதிகாலை 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏரியன் விண்வெளி தளம்

ஏரியன் விண்வெளி தளம்

தென் அமெரிக்காவில், பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது, ஏரியன் விண்வெளி தளம். இங்கிருந்து, 'ஜிசாட் - 30' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், 'இடுல்சாட் கோனக்ட்' செயற்கைக் கோள்களுடன், 'ஏரியன் - 5' ராக்கெட், இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜிசாட் 30 செயற்கைகோள்

ஜிசாட் 30 செயற்கைகோள்

2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய முதல் செயற்கைக்கோள் இதுவாகும். மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான 'டி.டி.எச்., விசாட்' மற்றும், 'டிஜிட்டல்' சேவைகளுக்கு உதவும்.

கியூ பேண்டு டிரான்ஸ்பாண்டர்

கியூ பேண்டு டிரான்ஸ்பாண்டர்

இதன், 'கியூ பேண்டு' டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், 'சி பேண்டு' டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு துணைபுரியும்.

15 ஆண்டுகள் இயங்கும்

15 ஆண்டுகள் இயங்கும்

உயர்தர தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக, ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
ISRO Gsat 30 communication satellite launched successfully

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X