மொத்த பூமியும் கண்காணிப்பில்- இனி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யலாம்: இஸ்ரோ ஏவும் புதிய செயற்கைக்கோள்!

|

ஆகஸ்ட் 12 ஆம் தேதி புதிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய செற்கைக் கோளானது EOS-03 ஆகும். இந்த செயற்கை கோள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 5 மணி 43 நிமிடத்தில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

புதிய EOS-03 செயற்கைக்கோள்

புதிய EOS-03 செயற்கைக்கோள்

புதிய செயற்கைக் கோளான EOS-03 ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட் மூலம் ஏவப்பட இருக்கிறது. இந்த செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக் கோள் ஆனது பூமியின் தட்ப வெப்ப நிலை, புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களை கண்காணிக்க ஏவப்படுவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இருக்கிறது. இந்த ஏவுதல் காலை 5:43 நடக்க இருக்கிறது.

புவிசார் சுற்றுப்பாதையை அடையும் செயற்கைக்கோள்

புவிசார் சுற்றுப்பாதையை அடையும் செயற்கைக்கோள்

ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி எஃப் 10-ன் 14-வது விமானத்தில் இஓஎஸ்-03 செயற்கைகோள் கொண்டு செல்லப்பட்டு ஜியோசிங்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைகோளானது அதன் உள்உந்துவிசை அம்சத்தை பயன்படுத்தி புவிசார் சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

அதிநவீன சுறுசுறுப்பான செயற்கைக்கோள்

அதிநவீன சுறுசுறுப்பான செயற்கைக்கோள்

அதேபோல் ஜிஎஸ்எல்வி விமானத்தில் முதல்முறையாக 4 மீட்டர் விட்டம் கொண்ட Ogive- வடிவ பேலோட் ஃபேரிங் பறக்கப்பட இருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. EOS-03 என்பது அதிநவீன சுறுசுறுப்பான செயற்கைக்கோள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோளானது பூமியின் தட்பவெட்பநிலை, வெள்ளம் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளை நிகழ்நேர தன்மையில் கண்காணிக்கும். அதுமட்டுமின்றி இந்த செயற்கைக்கோளானது பயிர்கள், தாவர நிலை, வனப்பகுதி மாற்றங்கள் உள்ளிட்டவைகளை கண்காணிக்க உதவும்.

2021-ல் இரண்டாவது ஏவுதல்

2021-ல் இரண்டாவது ஏவுதல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு பணிகளும் முடங்கி இருந்தது. இதற்கு இஸ்ரோவும் விதிவிலக்கு இல்லை. கொரோனா பரவல் இஸ்ரோவின் பணி பாதிக்கப்பட்ட நிலையில் 2021-ல் அதன் இரண்டாவது ஏவுதல் இதுவாகும். நாடாளுமன்றத்தில் விண்வெளி துறைக்கான மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், இஓஎஸ்-03 ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து முறை முழு நாட்டையும் சுற்றி வந்து படம்பிடிக்கும் திறன் கொண்டது என தெரிவித்தார்.

ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரம்

ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரம்

மறுபுறம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ககன்யான் திட்டமானது 2022-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரோ
நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு ரஷ்யாவின் ககரின்
விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்கலத்தின் திரவ இஞ்சின் பரிசோதனை

விண்கலத்தின் திரவ இஞ்சின் பரிசோதனை

விண்ணில் செலுத்தப்பட இருக்கும் GSLV MK III விண்கலத்தின் திரவ இஞ்சின் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான வெப்ப பரிசோதனை நடைபெற்றது. சுமார் 240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய கவுன்ட்டவுன் தொடங்கி பரிசோதிக்கப்பட்ட நிலையில், வெப்ப பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
ISRO Going to Launch an Earth Observation Satellite on August 12

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X