இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

உலக நாடுகள், இந்தியாவை திரும்பி பார்த்துக் கொண்டிருந்த காலம் போய், இந்தியாவை சற்றே உயர்த்தி பார்க்கும் காலம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..!

ஏலியன் வேட்டை : நாசா உறுதி..!

"ராக்கெட் பாகங்களை சைக்கிள்லயும், மாட்டு வண்டியிலயும் வச்சி தள்ளிட்டு போன நாடு தானே இந்தியா..!?" என்று நம் நாட்டின் வளர்ச்சி காலத்தை கேலி செய்த, கிண்டலடித்த நாடுகளுக்கு, இதோ 'நம் பொன்னான காலம்' கொடுக்கும் பதிலடி..!

உண்மைதான்..!

உண்மைதான்..!

இஸ்ரோவின் ஆரம்ப காலங்களில், ராக்கெட் பாகங்கள் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகளில் வைத்தே ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது உண்மைதான்...!

மேலை நாடுகள் :

மேலை நாடுகள் :

அதை மிக பெரிய தவறு என்பது போல பல மேலை நாடுகள் சுட்டிக்காட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

அபார வளர்ச்சி :

அபார வளர்ச்சி :

சைக்கிள் கேரியர்களில் ஆரம்பித்த இந்திய ராக்கெட் விஞ்ஞானம், இன்று அபார வளர்ச்சி அடைந்து நிற்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாய் மேலும் ஒரு 'பெரிய' செயல் நடக்க போகிறது..!

உதவி கேட்கும் அமெரிக்கா :
 

உதவி கேட்கும் அமெரிக்கா :

2015 தொடங்கி 2016 வரை என்ற ஓராண்டு கால இடைவெளியில் மொத்தம் 9 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை நாடியுள்ளது அமெரிக்கா..!

முதல் முறை :

முதல் முறை :

இந்தியா, அமெரிக்க செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவது இதுவே முதல் முறையாகும்..!

9 அமெரிக்க செயற்கைகோள் :

9 அமெரிக்க செயற்கைகோள் :

விண்ணில் ஏவப்போகும் 9 அமெரிக்க செயற்கைகோள்களும் நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!

உறுதி :

உறுதி :

இது சார்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இதை உறுதி செய்துள்ளது இஸ்ரோ..!

பி எஸ் எல் வி-யின் முதுகில் :

பி எஸ் எல் வி-யின் முதுகில் :

அமெரிக்க செயற்கைகோள்கள் இந்தியாவின் பி எஸ் எல் வி-களில் (PSLV) பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட இருக்கிறனவாம்..!

இந்தியா உதவி :

இந்தியா உதவி :

இதுவரை மொத்தம், 19 நாடுகளின் 45 செயற்கைகோள்களை வெற்றிகரமாய் விண்ணில் ஏவ இந்தியா உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

அடுத்த மைல்கல் :

அடுத்த மைல்கல் :

அது மட்டுமின்றி இஸ்ரோ, தன் முதல் ரீயூசபில் லான்ச் வெயிக்கல் டெக்னாலஜி (Reusable Launch Vehicle-Technology) பரிசோதனையை இந்த ஆண்டு இறுதியில் நடத்த இருக்கிறது..!

தகவல் :

தகவல் :

இந்த தகவலை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்..!

முயற்சி:

முயற்சி:

இஸ்ரோவின் இந்த முயற்சி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லாக அமையும் என்று நம்பப்படுகிறது..!

வளர்ந்த நாடுகள் :

வளர்ந்த நாடுகள் :

இது போன்ற வளர்ச்சியின் காரணமாகவே, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், இந்தியாவின் உதவியை நாடி வர வைத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை..!

கேலி சித்திரம் :

கேலி சித்திரம் :

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம், செய்வாய் கிரகத்தை அடைந்ததை கிண்டல் செய்யும் விதத்தில் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கை, கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது..!

பதிலடி :

பதிலடி :

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெயரிடப்படாத ஒரு அமெரிக்க விண்கலம், விண்ணில் ஏவப்பட்ட போது வெடித்து சிதறிய போது, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை, ஒரு கேலி சித்திரத்தை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது..!

காலத்தின் பதில் :

காலத்தின் பதில் :

இன்று, அதே அமெரிக்காவை இந்தியாவிடம் தொழில்நுட்ப உதவியை நாட வைத்து, 'காலம்' தன் பங்கிற்கு ஒரு பதிலடியை கொடுத்திருக்கிறது..!

 
Read more about:
English summary
ISRO will be launching nine nano / micro satellites for United States during 2015-16 time frame.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X