ISRO-வை விட்டு வைக்காத கொரோனா: ககன்யான் மிஷன் பயிற்சியில் ஏற்படுத்திய தாக்கம்!

|

இந்தியாவின் முதல் மனிதன் சார்ந்த விண்வெளி பயண பயிற்சியான ககன்யான் கொரோனா அச்சுறுத்தலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் விண்வெளி பயணம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் விண்வெளி பயணம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்தை நோக்கி பணியாற்றி வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டம்

2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டம்

இந்த ககன்யான் திட்டமானது 2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

மனித உருவிலான பெண் ரோபோ

மனித உருவிலான பெண் ரோபோ

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை முதற்கட்டமாக 2021 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இஸ்ரோ தலைவர் சிவன் இந்த பெண் ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார்

வியோமமித்ரா பெண் ரோபோ இஸ்ரோ

வியோமமித்ரா பெண் ரோபோ இஸ்ரோ

வியோமமித்ரா பெண் ரோபோ இஸ்ரோவின் இந்த வியோமமித்ரா பெண் ரோபோ மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை தகவல் தெரிவித்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன், விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாடும் திறன் மற்றும் விண்வெளி வீரர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் திறன் போன்று பல திறன்கள் வியோமமித்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று சிவன் தெரிவித்தார்.

கோவிட் 19 எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது

கோவிட் 19 எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது

இந்த நிலையில் கொரோனா தொற்றான கோவிட் 19 எனும் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதோடு இந்த வைரஸ் தொற்று பராவமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பல்வேறு நாடுகளும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பயிற்சி இடைநிறுத்தம்

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பயிற்சி இடைநிறுத்தம்

இஸ்ரோ ககன்யான் திட்டத்துக்கு விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நான்கு விமானிகள் இந்திய விமானப்படையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் முன்னதாகவே யு.ஏ.வில் பயிற்சியை மேற்கொண்டனர்.

கொரோனா தொற்று காரணமாக விண்வெளி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்

கொரோனா தொற்று காரணமாக விண்வெளி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்

அதன்பின் பிப்ரவரி மாதம் முதல் மாஸ்கோவிற்கு அருகில் உள்ள காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்தில், சோதனை மேற்கொண்டனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக விண்வெளி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விண்வெளி வீரர்கள் நலமோடு உள்ளனர்

விண்வெளி வீரர்கள் நலமோடு உள்ளனர்

இருப்பினும் விண்வெளி வீரர்கள் நலமோடு உள்ளனர் என்றும், அவர்கள் பத்திரமாக விடுதியில் உள்ளனர் என்றும் மாத இறுதிக்குள் விண்வெளி மையம் திறக்கப்படும் என்றும் தகவல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் பாதிப்படைந்துவிட கூடாது

விண்வெளி வீரர்கள் பாதிப்படைந்துவிட கூடாது

12 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் பயிற்சியானது நடைபெறும் எனவும் அதில் 3 மாதங்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக சேர்க்கப்பட்டது எனவும் இந்த இடை நீக்கம் காரணமாக விண்வெளி வீரர்கள் பாதிப்படைந்துவிட கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விமான மருந்துகளின் நிபுணத்துவம்

விமான மருந்துகளின் நிபுணத்துவம்

இதில் மூன்று விண்வெளி வீரர்களைத் தவிர, விமான மருந்துகளின் நிபுணத்துவம் பெற்ற விமான அறுவை சிகிச்சை நிபுணர்களும் ககன்யான் பணியின் ஒரு பகுதியாக உள்ளனர்.

மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

இஸ்ரோ வட்டார தகவல்

இஸ்ரோ வட்டார தகவல்

விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏஜென்சி ஒரு மாத கால அவகாசம் இடைவெளி விட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ரஷ்யாவில் எங்கள் நடவடிக்கைகள் சரியான பாதையில் இல்லை எனவும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் பயணத்திற்குப் பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தேவைப்படுவதால், தாங்கள் எங்கள் அணியை இருக்கும் இடத்திலேயே தங்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

source: weather.com

Best Mobiles in India

English summary
ISRO Gaganyaan Mission Astronaut Training Put On Hold Due To Coronavirus

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X