கடைசி நேரத்துல.. பகீர் கிளப்பும் ISRO விஞ்ஞானி.. அந்த 2 கிமீ ரொம்ப சிக்கல்.. சந்திரயான் 3-க்கும் லூனா-25 கதி?
இந்தியாவையும், இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்தையும் தோற்கடித்து.. சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் (South Pole of the Moon) வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை அடைய.. வேகவேகமாக நிலவை நோக்கி சென்ற ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் படுதோல்வியில் முடிந்துள்ளது.
ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்கு பிறகு, நிலவில் சாஃப்ட்-லேண்டிங் (Soft Landing) செய்யும் நோக்கத்தின் கீழ் அனுப்பப்பட்ட்ட லூனா-25 விண்கலமானது, தரையிறங்குவதற்கு முன்பான திட்டமிட்ட இயக்கங்களில் (Pre-landing Manoeuvres) ஏற்பட்ட தோல்வியால் சந்திர கிரகத்தின் மேற்பரப்பில் விழுந்து சிதைந்துள்ளது. இதை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸும் (Roscosmos) உறுதிபடுத்தியுள்ளது.

ரோஸ்கோஸ்மோஸின் கூற்றுப்படி "லூனா-25 உடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அது சிஸ்டமால் கணிக்க முடியாத சுற்றுப்பாதைக்குள் (Unpredictable Orbit) நகர்ந்து ஒருகட்டத்தில் சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியும் உள்ளது". இதன் விளைவாக ரஷ்யாவின் லூனா-25 மிஷன் தோல்வியில் முடிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரஷ்யாவின் இந்த தோல்வியால் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் (Chandrayaan 3 Spacecraft) மீது திரும்பியுள்ளது. இது வெற்றிகரமாக நிலவில் தரை இறங்குமா? அல்லது சந்திரயான்-2 மற்றும் லூனா-25 விண்கலங்களை போலவே தோல்வியில் முடியுமே என்கிற கேள்வி, நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே போகிறது!
இதற்கிடையில் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான ஜி மாதவன் நாயர், சந்திரயான்-3 மிஷனின் சிக்கலான பகுதி ஒன்றை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். நினைவூட்டும் வண்ணம் கடந்த 2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 மிஷன் (Chandrayaan-1 Mission) ஏவப்பட்டபோது இவர் தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையனமான இஸ்ரோவிற்கு தலைமை தாங்கினார்.
ஜி மாதவன் நாயரின் கூற்றுப்படி, "நிலவில் தரையிறங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சந்திரயான் 3-யின் திட்டமிட்ட இயக்கங்கள் மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்றும், அதன் வெற்றிக்காக அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்."
இறுதிகட்ட திட்டமிட்ட இயக்கம் (Final maneouvre) பற்றி பேசிகையில், சந்திர கிரகத்தின் கடைசி 2 கிலோமீட்டர் தூரத்தில் தான் சந்திரயான்-2 மிஷன் ஆனது தோல்வியை சந்தித்தது என்பதையும் மாதவன் நாயர் நினைவு கூர்ந்தார். "ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன... த்ரஸ்டர்கள், சென்சார்கள், அல்டிமீட்டர்கள், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்.. இவைகளில் எங்கும் ஏதேனும் சிறு தடுமாற்றம் ஏற்பட்டாலும் கூட.. நமக்கு சிக்கல் தான்" என்றும் நாயர் கூடியுளார்.
இருப்பினும் இத்தகைய தோல்விக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் இஸ்ரோ போதுமான உருவகப்படுத்துதல்களை (Simulations ) செய்துள்ளது மற்றும் பணிநீக்கங்களை திட்டங்களையும் (Redundancies) கட்டமைத்துள்ளது. இருந்தாலும் கூட நாம் பிரார்த்தனை செய்வதை நிறுத்த கூடாது என்றும் ஜி மாதவன் நாயர் கூறியுள்ளார்.
இஸ்ரோவின் கூற்றுப்படி, பிரக்யான் என்கிற ரோவரை (Pragyan Rover) தன்னுள் கொண்ட விக்ரம் லேண்டர் (Vikram Lander) ஆனது ஆகஸ்ட் 23 ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6.04 மணியளவில் சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் உள்ள மேற்பரப்பை வெற்றிகரமாக தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து நாம் சேகரிக்கும் தரவுகள் சில அரிய கனிமங்களை அடையாளம் காண பயனுள்ளதாக இருக்கும் என்றும், சந்திரயான் 3-யின் வெற்றிகரமான மூன் லேண்டிங் ஆனது இஸ்ரோவின் அடுத்த கட்ட கிரக ஆய்வுக்கு ஒரு பெரிய தொடக்கத்திற்கான ஆரம்பமாக இருக்கும் என்றும் ஜி மாதவன் நாயர் கூறியுள்ளார்.
சந்திரயான்-3 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்டை பொறுத்தவரை, விக்ரம் லேண்டரை சந்திரனுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு வருவதற்கான இரண்டாவது டீபூஸ்டிங் செயல்பாட்டை வெற்றிகரமாக முடித்த கையோடு, சந்திரயான்-3 ஆனது சந்திரயான்-2 ஆர்பிட்டர் உடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








