கைக்கொடுக்கும் இஸ்ரோ: குறைந்த விலையில் உயர்தர வெண்டிலேட்டர்கள் கண்டுபிடித்து சாதனை!

|

கொரோனாவுக்கு எதிரான மத்திய மாநில அரசுகள் போராடி வருகிறது. அரசுகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் உயர்தர வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டல்களை குறைந்த விலையில் இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ வடிவமைத்து இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மூன்று வகையில் வெண்டிலேட்டர்கள்

மூன்று வகையில் வெண்டிலேட்டர்கள்

இதற்கு மத்திய மாநில அரசுகள் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இஸ்ரோ நிறுவனம் குறைந்த விலையில் உயர்தரமாகவும் எளிதாக எடுத்துச் செல்லும் வகையிலும் மூன்று வகையில் வெண்டிலேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. அது பிரானா, வாயு, ஸ்வஸ்தா ஆகிய மூன்று ஆகும். இந்த வெண்டிலேட்டர்கள் எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தொடுதல் மூலமாகவும் பயனர்களுக்கு ஏற்றப்படி தானியங்கி மூலமும் செயல்படுத்தப்படும்.

பிற தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தயாரிக்கும் முறை

பிற தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தயாரிக்கும் முறை

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இஸ்ரோவின் இந்த வெண்டிலேட்டர்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிற தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வழங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் இந்த தொழில்நுட்பம் இந்த காலக்கட்டத்தில் மிக பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை

தமிழகத்தின் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. தமிழக முதலைமச்சர், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் மேலும் ஒருவாரம் தளர்வுகளை நீடிக்க அறிவுரைவிடுக்கப்பட்டது. இதன்பேரில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளோடு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

முழு ஊரடங்கு அறிவிப்பு

முழு ஊரடங்கு அறிவிப்பு

தற்போதைய முழு ஊரடங்கு 7.6.2021முதல் 14.6.2021 காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இறங்குமுகமாக இருந்த போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஏறுமுகமாக இருந்து வருகிறது.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (HouseKeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதி வழங்கப்படும்.

இ-பதிவுடன் செல்ல அனுமதி

இ-பதிவுடன் செல்ல அனுமதி

வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலு்ம வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோகளில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்களின் நலன் கருதி ஊரடங்கு

பொது மக்களின் நலன் கருதி ஊரடங்கு

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பொது மக்களின் நலன் கருதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதையும் கூட்டங்கள் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் அரசு முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
ISRO Develops 3 Types of Low Cost Ventilators With Various Parameters Like Pressure flow, Oxygen, More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X