Home
News

ISRO தலைவர் பகீர்.. சந்திரயான்-3 நல்லாத்தான் இருக்கு.. 100கிமீ வரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனால்?

கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்டு, நிலவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சந்திராயன்-3 மிஷன் (Chandrayaan-3 Mission) குறித்த சமீபத்திய தகவல் ஒன்றை இஸ்ரோவின் தலைவர் ஆன எஸ் சோம்நாத் (ISRO Chairman S Somanath) பகிர்ந்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோமநாத சொல்லும் தகவலை வைத்து பார்க்கும் போது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் நகம் கடிக்க வைக்கும் அளவிற்கு சந்திரயான்-3 மிஷன் ஆனது மிகவும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதை வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிக்கிறது. அவர் அப்படி என்ன சொன்னார்? இதோ விவரங்கள்:

சந்திரயான்-3.. 100கிமீ வரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனால்?

இந்தியாவின் சந்திரயான்-3 மூன் மிஷன் ஆனது "நல்ல ஆரோக்கியத்துடன்" (Good Health) உள்ளது மற்றும் சுற்றுப்பாதையை நிர்ணயிக்கும் செயல்முறை (Orbit Determination Process) தான் இந்த மிஷனின் மிகவும் சிக்கலான கட்டமாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்து உள்ளார்.

சுற்றுப்பாதையை நிர்ணயிக்கும் செயல்முறை எப்போது நடக்கும்? சந்திரயான்-3 விண்கலமானது 100 கிமீ என்கிற தூரத்திலான வட்ட சுற்றுப்பாதையில் இருந்து சந்திரனுக்கு அருகில் செல்ல தொடங்கும் போது தான் சுற்றுப்பாதையை தீர்மானிக்கும் செயல்முறை நடக்கும். இதில் என்ன சிக்கல் உள்ளது என்பதை பற்றியும் சோம்நாத் விளக்குகிறார்.

"100 கி.மீ வரை எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. பூமியில் இருந்தபடியே லேண்டரின் நிலையை துல்லியமாக மதிப்பிடுவதில் மட்டுமே சிக்கல்கள் உள்ளன. இந்த அளவீடு மிகவும் முக்கியமான அளவீடு ஆகும், நாங்கள் அதை சுற்றுப்பாதை நிர்ணய செயல்முறை என்று அழைக்கிறோம். இது சரியாக நடந்தால் மட்டுமே, மீதமுள்ள செயல்முறைகள் சரியாக நடக்கும்" என்று சோமநாத் கூறியுள்ளார்.

"இந்த முறை எங்களால் அதை மிகச்சரியாக செய்ய முடியும். திட்டமிட்டபடியே சுற்றுப்பாதை மாற்றங்கள் (Orbit changes) நடக்கின்றன. அதில் எந்த விலகலும் (Deviation) இல்லை. இதுவரை எல்லாமே சிறந்த முடிவுகளை காட்டுகிறது, எல்லாம் சரியாக நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றும் இஸ்ரோ தலைவர் கூறினார்.

மேலும் அவர் "சந்திரயான்-2 மிஷன் வழியாக கிடைத்த அனுபவம் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். என்ன தவறு நடந்திருக்கும் என்பதை நாங்கள் மிக விரிவாக ஆராய்ந்தோம். அந்த தவறுகளை சரிசெய்யும்படியாக சந்திரயான்-3 மிஷனி நிறைய மாற்றங்களைச் செய்தோம்" என்றும் சோமநாத் கூறி உள்ளார்.

சந்திரயான்-2 மிஷனில் இருந்து கிடைத்த நிலவின் புகைப்படங்கள் (Images of the moon from Chandrayaan-2 mission) ஆனது சந்திரயான்-3 இல் அதன் சிறந்த நிலைப்பாட்டிற்காகவும் (Better positioning), தரையிறங்கும் பகுதி அளவீடுகளை அதிகரிக்கவும் (Increasing the landing area measurements) பயன்படுத்தப்பட்டதாகவும் சோம்நாத் குறிப்பிட்டுள்ளார்.

"தற்செயல்கள் மற்றும் தோல்விகளை (Contingencies and Failure) கையாள நாங்கள் அதிக இன்டெலிஜென்ஸை (Intelligence) சேகரித்துள்ளோம். இவை அனைத்தையும் சரிபார்க்க விரிவான சோதனை திட்டத்தையும் (Extensive testing Programme) நாங்கள் மேற்கொண்டோம்," என்பதையும் இஸ்ரோ தலைவாரான எஸ் சோம்நாத் வெளிப்படுத்தி உள்ளார்.

நினைவூட்டும் வண்ணம், கடந்த 2019 ஆம் ஆண்டில் சந்திரயான்-2 மிஷனின் ஒரு பகுதி வெற்றி மட்டுமே பெற்றது. அதை சந்திரனில் தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து சந்திரயான்-3 ஆனது லாஞ்ச் வெஹிக்கிள் மார்க்-3 ராக்கெட் மூலம் கடத்த ஜூலை 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இப்போது சந்திரயான்-3 விண்கலமானது சந்திரனை சுற்றி 170 கிமீ 'பை' 4313 கிமீ நீளமுள்ள நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, இது ஆகஸ்ட் 9 மற்றும் 17-ஆம் தேதிகளில் 100கிமீ வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கான தொடர் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இப்படியாக விக்ரம் லேண்டர் ஆனது ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO Chandrayaan 3 Most Critical Phase is Orbit Determination Process Up to 100 km No difficulty But
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X