ஒருவழியாக நிலவில் "அது" இருப்பது உறுதியானதா? சந்திரயான் 2 கண்டறிந்த உண்மை இதுதான்.!

|

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சத்தியம் இருக்கிறதா என்று நாசா ஒரு புறம் தீவிரமாக ஆராய்ச்சி வருகிறது. அதேபோல், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைத் தேடி அதை நிரூபிக்கும் பணியை மும்முரமாக செய்து வருகிறது. இஸ்ரோவின் சந்திரயான்-2 இந்த பணிக்காக நிலவில் மேல் வளம் வந்துகொண்டிருக்கிறது. இப்போது மிகவும் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதா?

நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதா?

சந்திரயான் -2 விண்கலம் சமீபத்தில் தனது இரண்டாம் ஆண்டு நிறைவை நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான வெற்றி செய்தியுடன், சந்திரயான் -2 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் -2 விண்கலம் நிலவின் நிழல் நிறைந்த பகுதிகளில் நீர் இருப்பதற்கான அடையாளங்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நிலவில் நீர் நீராக தான் இருக்கிறதா? அல்லது வேறு மாதிரி பொருளாக இருக்கிறதா?

நிலவில் நீர் நீராக தான் இருக்கிறதா? அல்லது வேறு மாதிரி பொருளாக இருக்கிறதா?

இந்த நீர் அடையாளங்கள் நிலவில் நீராக இல்லாமல், உறைந்த பனியின் தடயங்களாகக் காணப்பட்டுள்ளது என்று இஸ்ரோவின் விஞ்ஞானிகள் குழு தகவலை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இஸ்ரோ ஏற்பாடு செய்த இரண்டு நாள் ஆன்லைன் சந்திர அறிவியல் கலந்தாய்வில் இந்த செய்தி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, நிலவில் இந்த நீர் பனி அடையாளங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்று இப்போது பார்க்கலாம்.

ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?

சூரிய ஒளியே படாத நிலவின் நிரந்தர நிழல் பகுதி எங்கு உள்ளது தெரியுமா?

சூரிய ஒளியே படாத நிலவின் நிரந்தர நிழல் பகுதி எங்கு உள்ளது தெரியுமா?

தெரியாதவர்களுக்கு, நிலவில் நிரந்தர நிழல் பகுதி என்று குறிப்பிட்ட சில பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் எப்போதுமே சூரியனின் ஒளி பட்டதில்லை, இவை நிரந்தரமாக எப்போதும் நிழலால் சூழப்பட்டுள்ளது. இந்த இருண்ட நிழல் பகுதியில் தான் நீர் அடையாளங்கள் இருப்பதற்கான தகவலை சந்திரயான் -2 விண்கலம் கைப்பற்றியுள்ளது. நிலவின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் தான் இந்த நிரந்தர நிழலாடும் பகுதிகள் அமைத்திருக்கிறது.

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் கண்டறிந்த உண்மை என்ன?

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் கண்டறிந்த உண்மை என்ன?

முன்பே நாங்கள் சொன்னது போல, இந்த பகுதிகள் சூரிய ஒளியைப் பெறாது. இவை சந்திர மேற்பரப்பில் குளிர்ச்சியான பகுதிகளாக அமைகின்றன. சந்திரயான்-2 விண்கலத்தில் இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ராடார் பொருத்தப்பட்டிருப்பதை இஸ்ரோ தலைவர் கே சிவன் வெளிப்படுத்தினார். இது பொருட்களின் மின் பண்புகளின் அளவீடுகளைப் பயன்படுத்தி மேற்பரப்புகளை வரைபடமாக்குகிறது. இதன் மூலம் சந்திர மேற்பரப்பு மற்றும் பனி மேற்பரப்பை இந்த ரேடார் வேறுபடுத்திக் காட்டுகிறது.

மரணம் இல்லாத வாழ்க்கையின் வாசலை திறக்க துடிக்கும் ஜெஃப் பெசோஸ்.. வினோதமான முயற்சி.! வெற்றியில் முடியுமா?மரணம் இல்லாத வாழ்க்கையின் வாசலை திறக்க துடிக்கும் ஜெஃப் பெசோஸ்.. வினோதமான முயற்சி.! வெற்றியில் முடியுமா?

சந்திரனை கண்காணிக்கும் எட்டு பேலோட்களின் விபரம்

சந்திரனை கண்காணிக்கும் எட்டு பேலோட்களின் விபரம்

சந்திர சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட எட்டு பேலோட்களில் இந்த ரேடாரும் ஒன்றாகும். மற்ற பேலோட்களில் டெரைன் மேப்பிங் கேமரா, ஆர்பிட்டர் ஹை-ரெசல்யூஷன் கேமரா, லார்ஜ் ஏரியா சாஃப்ட் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், சோலார் எக்ஸ்-ரே மானிட்டர், இமேஜிங் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர், அட்மோஸ்பரிக் காம்போசிஷன் எக்ஸ்ப்ளோரர் மற்றும் டூயல்-ஃப்ரீக்வென்சி ரேடியோ சயின்ஸ் பரிசோதனை ஆகியவை இத்துடன் அடக்கப்பட்டுள்ளது.

 உலகின் முதல் முழு துருவ முனைப்பு ரேடார் இது தான் - இஸ்ரோ தலைவர் கே சிவன்

உலகின் முதல் முழு துருவ முனைப்பு ரேடார் இது தான் - இஸ்ரோ தலைவர் கே சிவன்

கிரகப் பணிக்காக முன்னோக்கிச் சென்ற உலகின் முதல் முழு துருவ முனைப்பு ரேடார் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். டிஎஃப்எஸ்ஏஆர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனூப் தாஸ், கடந்த காலத்தில் சந்திரன் அனுபவித்த தாக்கங்களைப் பற்றி இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த யோசனையை அளிக்கக்கூடியது என்று கூறியுள்ளார்.

கடலுக்கு நடுவில் இப்படி ஒரு காற்று விசையாழியா? 5 மடங்கு சக்தியை பெருக்க புது மல்டி டர்பைன் தொழில்நுட்பம்..கடலுக்கு நடுவில் இப்படி ஒரு காற்று விசையாழியா? 5 மடங்கு சக்தியை பெருக்க புது மல்டி டர்பைன் தொழில்நுட்பம்..

ஆர்பிட்டர் அனுப்பிய படங்களை வைத்து தீவிரமாகும் ஆராய்ச்சி

ஆர்பிட்டர் அனுப்பிய படங்களை வைத்து தீவிரமாகும் ஆராய்ச்சி

ஆர்பிட்டரின் உயர்-தெளிவுத்திறன் கேமரா வழியாக அனுப்பப்பட்ட தரவு மற்றும் புகைப்படங்கள் பாரிய பள்ளங்களை ஆய்வு செய்ய மேலும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.நிலவில் திரவ நீர் மற்றும் பனியின் தடயங்களைக் கண்டறிவதில் இந்த இஸ்ரோ மற்றும் சந்திரயான்-2 இன் முயற்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் என்ன ஆனது?

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் என்ன ஆனது?

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், பூமி பற்றிய சுவாரசியமான தகவல்களுக்கும், விண்வெளி தொடர்பான செய்திகளுக்கும் எங்கள் செய்தி பதிவுகளைத் தவறாமல் பார்வையிடுங்கள். தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் அறிவு சார்த்த முக்கிய தகவல்களுக்கு எங்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
ISRO Chandrayaan 2 Detects Presence Of Water Ice On Permanently Shadowed Regions Of The Moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X