ISRO தலைவர் மோடியை கோர்த்துவிட பார்க்கிறாரா? மோடி உண்மையிலேயே விண்வெளி செல்கிறாரா? எது உண்மை?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவுள்ளது. இதற்கான பிரத்தியேக விண்வெளி திட்டமான ககன்யான் திட்டத்தில் (Gaganyaan Mission) இஸ்ரோ இப்போது மும்முரமாக வேலை செய்து வருகிறது. சமீபத்தில், நடைபெற்ற ஒரு கலந்தாய்வில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் (ISRO Chairman Somnath) பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இதில் விண்வெளிலுக்கு நரேந்திர மோடி (Narendra Modi) செல்வாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர் வழங்கிய விடை இப்போது இணையத்தில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம், சமீபத்தில் சாந்தியராயன்-3 திட்டத்தை (Chandrayaan-3 Missiona) வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனை படைத்தது. இந்த சாதனைக்கு பிறகு, இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organaization) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் மொத்தம் 4 நபர்கள் முதலில் விண்வெளிக்கு (4 Indian Astronauts) அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

ககன்யான் திட்டத்தின் மூலம் நரேந்திர மோடி விண்வெளிக்கு செல்கிறாரா?
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட நான்கு வீரர்களை உலகிற்கு அறிமுகம் செய்தார். இந்தியாவின் அடுத்த சாதனை திட்டமான ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லவிருக்கும் நபர்களின் பட்டியலில், பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா பெயர் உறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் நடந்த ஒரு கலந்தாய்வில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், ககன்யான் திட்டம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். ககன்யான் திட்டம் குறித்த பல சுவாரசியமான தகவலைகளை இஸ்ரோ தலைவர் இந்த முறை பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள் ஒரு நாள் முழுக்க விண்வெளியில் பயணிப்பார்கள் என்ற தகவலை பகிர்ந்துகொண்டார்.
முதலில் 3 விண்வெளி வீரர்கள் 3 நாட்களுக்கு விண்வெளியில் பயணிப்பார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது இஸ்ரோ தலைவர் ஒரு நாள் என்ற கணக்கில் ககன்யான் திட்டத்தில் என்ன நடைபெறும் என்பதை விளக்கியுள்ளார். இந்த ஒரு நாள் பயணத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் பூமியை சுமார் 16 முறை முழுமையாக சுற்றி வருவார்கள் என்ற தகவலையும் பகிர்ந்திருக்கிறார்.
ISRO தலைவர் மோடியை கோர்த்துவிட பார்க்கிறாரா? உண்மை என்ன?
இந்த முதல் இந்திய விண்வெளி வீரர்களின் பயணத்தின் போது சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் சோம்நாத் தெரிவித்திருக்கிறார். தற்போது ககன்யாம் திட்டத்தில் இஸ்ரோ முழுகவனம் செலுத்தி வருவதாக சோம்நாத் கூறியுள்ளார். இதற்காக மூன்று கட்ட சோதனைகளை இந்த ஆண்டு இஸ்ரோ நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். முதற்கட்டமாக, பூமியின் சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி சரியான பாதையில் ககன்யான் வீரர்களை சுற்றி வர செய்வது.
இதை உறுதிப்படுத்த இஸ்ரோ முதலில் ஆளில்லா விண்கலத்தை ஏவ திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது சோதனையாக, விண்வெளி வீரர்களுக்கு தேவைப்படும் கருவிகள் முழுமையாக சோதனை செய்யப்படவுள்ளது. இறுதியாக, மூன்றாவது கட்ட சோதனையாக இஸ்ரோ ஏவுதளம் சோதனை செய்யப்படும் என்று சோம்நாத் கூறியுள்ளார்.
இதற்கு நடுவே, பிரதமர் நரேந்திர மோடி விண்வெளிக்கு பயணிக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, இந்தியாவின் முதல் ககன்யான் திட்டத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடியால் விண்வெளிக்கு பயணிக்க முடியும் என்று விடையளித்துள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. உண்மையில், அதிகாரப்பூர்வமாக நரேந்திர மோடி விண்வெளிக்கு செல்வார் என்ற தகவல் வெளியாகவில்லை.
கலந்தாய்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டுமே சோம்நாத் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இடையே நெட்டிசன்கள், பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரோ தலைவர் கோர்த்துவிட பார்க்கிறார் என்று கமெண்ட் செய்து, பலர் பல விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








