Home
News

கே.சிவனின் நிறைவேறாத ஆசை.. இன்னும் 10 நாள்ல சாதிச்சு காட்றோம்.. தேதியை குறித்த ISRO விஞ்ஞானிகள்!

இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Indian Space Research Organization) முன்னாள் தலைவரான கே.சிவன் (K. Sivan), தன் பதவிக்காலத்தின் போது பல்வேறு சாதனைகளை செய்து இருந்தாலும் கூட, அவருக்கும் கூட நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது.

அது தோல்வியில் முடிந்த சந்திராயன் 2 மிஷன் (Chandrayaan 2 Mission) ஆகும். 2019ல் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 ஆனது இஸ்ரோ உடனான தொடர்பை இழந்ததையும், அதை நேரில் காண வந்த பிரதமர் நரேந்திர மோடி, மனம் உடைந்துப்போன கே.சிவனை கட்டிப்பிடித்தது ஆறுதல் கூறியதையும் யாராலும் மறந்திருக்க முடியாது.

கே.சிவனின் நிறைவேறாத ஆசை.. தேதியை குறித்த ISRO விஞ்ஞானிகள்!

கே.சிவனால் சாதிக்க முடியாத "அந்த" சாதனையை, இன்னும் ஒரு சில வாரங்களில் சாதித்துக்காட்ட உள்ளனர் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள். அதாவது சந்திராயன் 3 (Chandrayaan 3) விண்கலமானது விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இது எப்போது விண்ணில் செலுத்தப்படும் என்கிற தேதியை தற்போதைய இஸ்ரோ தலைவரான எஸ்.சோம்நாத் (S. Somnath) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சந்திரயான் 2 மிஷன் தோல்வியுற்று "கிட்டத்தட்ட" நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரோவின் மூன்றாவது மூன் மிஷனான (Moon Mission) சந்திரயான் 3 ஆனது வருகிற ஜூலை 12 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என்பதை இஸ்ரோ தலைவரான எஸ்.சோம்நாத் உறுதிப்படுத்தி உள்ளார்.

"தற்போது சந்திரயான் 3 விண்கலமானது முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இது ஜூலை 12 முதல் ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு சரியான 'லான்ச் டேட்' (Launch Date) அறிவிக்கப்படும்" என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியுள்ளார்.

சந்திரயான் 3 மிஷனின் முக்கிய நோக்கம் என்ன? இஸ்ரோவின் மூன்றாவது மூன் மிஷனான சந்திரயான் 3-யின் முக்கிய நோக்கம், சந்திர கிரகத்தில் மூன் லேண்டரை (Moon Lander) பாதுகாப்பாக தரையிறக்குவதே ஆகும். அதை தொடர்ந்து, குறிப்பிட்ட மூன் லேண்டர் ஆனது சந்திர கிரகத்தில் கிடைக்கும் மண்ணை சோதனை செய்யும்; பலவகையான ஆய்வுகளுக்கு வழிவகுக்கும்.

சந்திரயான் 2 உடன் ஒப்பிடும்போது, சந்திரயான் 3-க்காக செய்யப்பட்ட ​​மூன் லேண்டரில் ஐந்துக்கு பதிலாக நான்கு மோட்டார்கள் (4 Motors) இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி மூன் லேண்டரின் மென்பொருள் (Software) பக்கத்திலும் கூட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சந்திரயான் 3-யின் மூன் லேண்டர் மற்றும் ரோவரின் (Rover) பெயர்கள் இன்னும் முடிவு செய்யப்பவில்லை. இருந்தாலும் கூட முந்தைய மிஷனில் சூட்டப்பட்டது போலவே இம்முறையும் விக்ரம் (Vikram) மற்றும் பிரக்யான் (Pragyan) என்கிற பெயர்களே, பெரும்பாலும் தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டரில் என்ன தவறு நடந்தது? நிலவின் தென் துருவத்தில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ள இடத்தை குறிவைத்து விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. இருப்பினும் திட்டமிடப்பட்ட டச் டவுனுக்கு (அதாவது தரையை தொடுவதற்கு) சற்று முன்பு அது இஸ்ரோ உடனான தொடர்பை இழந்தது.

ஆதித்யா-எல் 1 விண்கலம் எப்போது விண்ணில் ஏவப்படும்? சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் மிஷன் ஆன ஆதித்யா எல் 1 (Aditya L1 Mission) ஆனது வருகிற 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் இலக்கை கொண்டிருப்பதாகவும் எஸ்.சோம்நாத் கூறி உள்ளார்.

Best Mobiles in India

English summary
ISRO Chairman S Somanath confirmed Chandrayaan 3 will launch between July 12 to July 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X