Subscribe to Gizbot

சிங்கப்பூரை போல இந்திய குடிமக்களுக்கும் போனஸ்; எவ்வளவு கிடைக்கும்.? எப்படி கிடைக்கும்.?

Written By:

ஏற்கனவே இந்தியாவின் பொருளாதார நிலை பற்றிய கேள்விகளுக்கு "நோ கமென்ட்ஸ்.. சிம்ப்ளி வேஸ்ட்" என்ற பதிலே பெரும்பாலான மக்களிடமிருந்து வரும் நிலைப்பாட்டில், கோடிக்கணக்கில் கடனை வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு 'எஸ்கேப்' ஆன விஜய் மல்லையாவையே இன்னும் ஜீரணிக்காத காலகட்டத்தில், நீரவ் மோடி நமது அனைவரின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறார்.

சிங்கப்பூரை போல இந்திய குடிமக்களுக்கும் போனஸ்; எவ்வளவு கிடைக்கும்.?

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே, அதாவது கடந்த மார்ச் 31, 2017 வரையிலாக அரசு வங்கிகளில் 8,670 "கடன் மோசடி" வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பொதுத்துறை வங்கிகள் மட்டுமே 9.58 பில்லியன் டாலர்கள் (1 பில்லியன் என்றால் 100 கோடி) இழந்துள்ளன. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரத்திலேயே, இந்த தொகையானது இன்னும் சில நூறு கோடிகளாக உயர்ந்திருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மிகவும் வேதனையாக உள்ளது

மிகவும் வேதனையாக உள்ளது

கூட்டி கழித்து பார்த்தால், கிட்டத்தட்ட ரூ.61 ஆயிரம் கோடியை மோசடிகள் காரணமாக வங்கிகள் இழந்துள்ளன. இந்த 61,000 கோடியை காப்பற்றி இருந்தால் இந்திய நாட்டிற்கும் இந்திய மக்களுக்கும் என்னென்ன நன்மைகள் மற்றும் மேம்பாடுகள் செய்திருக்கலாம் என்பதை பற்றி ஆராய்ந்தால் மிகவும் வேதனையாக உள்ளதென்றே கூறவேண்டும்.

ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும்

ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும்

ஒருவேளை மோசடி செய்யப்பட்ட 61,000 கோடி ரூபாய்களை மொத்தமாக பெற முடிந்தால், அதை மக்களுக்கே விநியோகிக்க முடிவு செய்தால், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் ரூ.470/-ஐ பெறுவார்கள்.

புல்லட் ரெயில்

புல்லட் ரெயில்

கடந்த 2015-ஆம் ஆண்டில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டால், ரூ.61,000 கோடி ரூபாய் கொண்டு சுமார் 610 கிமீ நீளத்திற்கான உயர் வேக புல்லட் ரெயில் பயணத்தை மக்களுக்கு வழங்க முடியும்.

மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயில்

கடந்த 2015-ஆம் ஆண்டில் டி.எம்.ஆர்.சி (Delhi Metro Rail Corporation) விஜயவாடாவில் மெட்ரோ இரயில் கட்டுமானத்திற்கான ஒரு விரிவான திட்ட அறிக்கையை அளித்தது. அந்த திட்டத்தின்படி ஒரு கிலோமீட்டருக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.288/- கோடி செலவாகுமென்று மதிப்பிட்டுள்ளது. அந்த கணக்கின்படி ரூ.61,000 கோடி கொண்டு மொத்தம் 212 கிமீ அளவிலான மெட்ரோ ரெயில் திட்டங்களை செய்து முடிக்கலாம்.

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையானது, அதன கடற்படை திறனை அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் பிரான்ஸ் நிறுவனமான டாசால்ட் நிறுவனத்திடம் 36 ரபேல் போர் விமானங்களை சுமார் 56,000 கோடி ரூபாய் செலுத்தூ வாங்குகிறது. இந்த கணக்கின்படி, ரூ.61,000 கோடி மீட்கப்பட்டால் அது பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கப்பட்டால் மேலுமொரு 36க்கும் மேற்பட்ட போர் விமானங்களை இந்தியாவால் வாங்க முடியும்.

சுகாதார, கல்வி, சமூக பாதுகாப்பு

சுகாதார, கல்வி, சமூக பாதுகாப்பு

2018-2019 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்டத்தில் சுகாதார, கல்வி, சமூக பாதுகாப்பு ஆகியவற்றிற்காக 1.38 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானதை வங்கி கடன் மோசடிகளில் ஏற்பட்ட பணத்தோடு ஒப்பிட்டால் சுமார் 40 சதவீதத்திற்கும் மேலாகும்.

இந்திய ராணுவம்

இந்திய ராணுவம்

உலகளாவிய பாதுகாப்பு ஆய்வு அறிக்கையின்படி, பனிப்பொழிவில் இருக்கும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு இந்தியா ஒவ்வொரு நாளும் ரூ.5 கோடி செலவிடுகிறது. ரூ.61,000 கோடி மட்டும் கையில் கிடைத்தால், கடுமைமிக்க சியாச்சினில் இந்திய ராணுவ வீரர்களை அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்க முடியும்.

இஸ்ரோ

இஸ்ரோ

எல்லாவற்றிற்கும் மேலாக ரூ.61,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, விண்வெளி ஆராய்ச்சிக்காக இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டால், செவ்வாய் கிரக ஆய்வை மேற்கொள்ளும் மங்கள்யான் போன்று மேலும் 135 விண்வெளி ஆராய்ச்சிகளை இஸ்ரோ நிகழ்த்திக்காட்டும். நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற அனைத்தையும் தூக்கி சாப்பிடும்.!

இந்திய இரயில்வே துறை

இந்திய இரயில்வே துறை

இறுதியாக இந்த அளவிலான தொகையை கொண்டு, இந்திய இரயில்வே துறைக்கான இரண்டு ஆண்டு ஆற்றல் கட்டணங்களை (பவர் பில்) செலுத்த முடியும். இந்திய இரயில்வே ஆனது மின்சாரம் அல்லது டீசல் அல்லது எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு ஆண்டு ஒன்றுக்கு 30,000 கோடி ரூபாய் செலவழிக்கிறது. டீசலுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.18,000 கோடி செலவிடும் மறுகையில் ரயில்பாதைகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறை

டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறை

இந்தியா போன்றதொரு மிகப்பெரிய நாட்டில் மோசடி செய்யப்பட்ட ரூ.61,000 கோடி என்பது நிச்சயமாக ஒரு சிறிய தொகை தான். ஆனால் அந்த தொகையானது டைட்டானிக் கப்பலை மூழ்கடித்த பனிப்பாறை போன்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பின் வெளிப்பாடுகள் வரும் நாட்களில் மெல்ல மெல்ல தலைத்தூக்கும், தனி மனிதனின் பணத்தை குறி வைக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
9 Things India Could Have Done With Rs 61,000 Crore Lost In Loan Frauds In Last 5 Years. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot