ISRO: 10 வயதுக்கு மேற்பட்டவர் சான்றிதழுடன் இலவச விண்வெளி பாடம் படிக்க வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (Indian Space Research Organisation) இஸ்ரோ (ISRO) 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் விண்வெளி அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 'விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மேலோட்டம்' (Overview of Space Science and Technology) என்ற தலைப்பில் இந்த ஆன்லைன் விண்வெளி அறிவியல் படிப்புக்கான படத்தை இஸ்ரோ மாணவர்களுக்காக நிகழ்த்தவுள்ளது.

இஸ்ரோவின் இலவச ஆன்லைன் வகுப்பு விரைவில் துவங்குகிறது

இஸ்ரோவின் இலவச ஆன்லைன் வகுப்பு விரைவில் துவங்குகிறது

இந்த ஆன்லைன் படிப்பில் நீங்களோ அல்லது உங்களுடைய குழந்தைகளோ பங்கேற்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி, இந்த ஆன்லைன் வகுப்பிற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம். 'விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மேலோட்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடநெறியானது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆன்லைன் பாட வகுப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

ஆன்லைன் பாட வகுப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

இஸ்ரோ அறிவித்துள்ள இந்த ஆன்லைன் பாட வகுப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவலையும் இங்கே வழங்கியுள்ளோம். முன்பதிவு செய்வதற்கு முன்னதாக, இந்த செயல்முறை விபரங்களை முழுமையாகப் படித்துப் பயன்பெறுங்கள். யாரெல்லாம் இந்த வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம்? இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியிலும் உள்ள மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஒரு மாத படிப்பு வரும் ஜூன் 6, 2022 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

10 மணிநேர ஆன்லைன் பாடம்

10 மணிநேர ஆன்லைன் பாடம்

இது பிரபல விண்வெளி விஞ்ஞானிகளால் நடத்தப்படும் மொத்தம் 10 மணிநேர ஆன்லைன் பாடமாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு வீடியோ அமர்வுக்குப் பிறகும், மாணவர்களிடம் வினாடி வினா கேள்விகள் கேட்கப்படும். இந்த பாடப்படிப்பின் முடிவில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்சிங் (ஐஐஆர்எஸ்), இஸ்ரோவின் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். பாடத்திட்டத்தில் விண்வெளி தொழில்நுட்பம், விண்கல அமைப்புகள், வானியல், விண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் வானிலை, கிரக புவி அறிவியல் போன்ற பல தகவல்கள் பற்றிக் கற்பிக்கப்படும்.

எப்படி குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்?

எப்படி குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்?

ஆன்லைன் தரவுக் களஞ்சியங்களிலிருந்து தகவல்களைப் பிரித்தெடுப்பதற்கும் புவிசார் தரவுகளை அணுகுவதற்கும் மாணவர்கள் செயற்கைக்கோள் படங்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது இதில் ஒரு சிறப்பான விஷயமாகும். பாடப் பங்கேற்புச் சான்றிதழைப் பெற, வினாடி வினாவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும், வீடியோ அமர்வுகளில் 70 சதவீத வருகையும் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதைப் பெற்றோர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொள்வது முக்கியமானது.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

ஆன்லைன் வகுப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு

ஆன்லைன் வகுப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு

இந்த பாட மொழி ஆங்கிலத்தில் நடத்தப்படும். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை, பாடத்தின் தொடக்கத்தில் உருவாக்கப்படும் கலந்துரையாடல் மன்றத்தில் பதிவு செய்யலாம். அதேபோல், பாடநெறியின் கடைசி நாள் வரை மாணவர்கள் அனைத்து அமர்வுகளையும் மீண்டும் அணுகலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.மேலும், இந்த ஆன்லைன் வகுப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ சிற்றேட்டைப் பார்க்கவும். இஸ்ரோ வழங்கியுள்ள அதிகாரப்பூர்வ ப்ரோச்சரை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இஸ்ரோவின் இந்த ஆன்லைன் வகுப்புக்கு எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இஸ்ரோவின் இந்த ஆன்லைன் வகுப்புக்கு எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

  • இந்த https://isat.iirs.gov.in/mooc.php அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் படிப்புக்குப் பதிவு செய்யவும்.
  • உள்நுழைவு சான்றுகள் சேர்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
  • அமர்வு IIRS E-CLASS LMS இல் கிடைக்கும்.
  • பதிவு செய்வதற்கு முன் அதிகாரப்பூர்வ ப்ரோச்சரை பார்க்கவும்.
  • Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?

    கவனிக்க வேண்டிய முக்கிய நாட்கள்

    கவனிக்க வேண்டிய முக்கிய நாட்கள்

    இந்த ஆன்லைன் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய நாட்கள் இதுவே. இஸ்ரோவின் இந்த முக்கியமான பாடநெறி தொடங்கும் தேதி ஜூன் 6, 2022 ஆகும். அதேபோல், இந்த ஆன்லைன் வகுப்புகள் முடிவடையும் தேதியாக ஜூலை 5, 2022 ஆம் தேதி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், நடத்தப்படும் அமர்வுகளில் மாணவர்கள் கலந்துகொண்டு, இறுதியில், இஸ்ரோவிடம் இருந்து சான்றிதழையும் பெறலாம். உங்கள் குழந்தைகளையும் இந்த அமர்வில் பங்குபெற உடனே பதிவு செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
ISRO Announces Free Space Science Course With Certificate For Students Over 10 Yrs How To Apply : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X