உலக வெப்பமயமாதலை தடுக்க இஸ்ரேல் ஸ்டார்ட் அப் நிறுவனம் புதிய முயற்சி.!
புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இதன் காரணமாகவே அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பாணிப்பாறைகள் உருகுதல் போன்ற மோசமானமாற்றங்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக வெப்பமயமாதலை தடுக்க காற்றில் இருக்கும் கார்பனைஉறிஞ்சும் பலூனை இஸ்ரேல் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப்பார்ப்போம்.

அதாவது ஹை ஹோப் லேப் என்ற தனியார் நிறுவனம் தொழிலற்சாலையில் இருந்து வெளியேறி காற்றில் கலக்கும் கார்பனை மீண்டும் திட நிலைக்கு கொண்டுவந்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளது.

குறிப்பாக தரையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் வானத்தில் காற்றிலிருக்கும் கார்பனை 80 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பத்தில் திரவ நிலையில் இருந்து திடமான நிலைக்கு மாற்றி அதை உறிஞ்சி பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்று ஹை ஹோப் லேப் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பூமியின் வெப்பநிலை மாற்றமானது, வழக்கம் போல் நிகழும் காலநிலை மாற்றச் சூழ்நிலைகள் போன்று இல்லாமல், இந்த வெப்பநிலை மாற்றமானது அடுத்து வரவிருக்கும் 50 ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மாறும் என்று கூறிகின்றனர். மேலும் புவி வெப்ப மயமாதல் மிகப் பெரிய ஒரு பிரச்சனையாக உருவெத்துள்ள நிலையில், இதனை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்தஜி 20 நாடுகளின் தலைவர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதாவது இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் டாப் பொருளாதாரங்களை கொண்ட நாடுகளின் தலைவர்கள் இந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் கொரோனா பாதிப்பு போலச் சர்வதேச அளவில் எதிரொலிக்கும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில மாதங்களில் சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. பின்பு கன்டாவில் வரலாறு காணாத அளவுக்குவெப்பம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு நாடுகளில் பருவநிலை மாற்றம் காரணமாகபல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனவே புவியின் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க ஜி 20 நாடுகளில் தலைவல்கள் முடிவு செய்துள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்புஇது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பருவநிலை
மாற்றம் என்பது சர்வதேச அளவில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், சர்வதேச தலைவர்களின் இந்த
முன்னெடுப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications