மோதியை 'வெளிப்படையாக' மிரட்டியுள்ள ஐஎஸ்ஐஎஸ்..!

Written By:

ஐஎஸ்ஐஎஸ் - ஈராக் போரின் போது உருவான இந்த இயக்கம் தற்போது அல் காயிதாவை விட மிகவும் அபாயகரமான இயக்கமாக உருவாகியுள்ளது என்பது தான் நிதர்சனம்.

இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட, ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழுவான ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், ரஷ்யா, அமெரிக்க போன்ற பல உலக நாடுகளை பகைத்துக் கொண்டது மட்டுமின்றி பதிலடிகளையும் வாங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்திய பிரதமரையும் இந்தியாவையும் தனது மின் புத்தகம் (e-book) மூலம் நேரடியாக மிரட்டியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இ-புக் :

இ-புக் :

இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் உட்பட பல உலக நாடுகளை தனது இ-புக் (e-book) மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம்.

 பிளாக் ஃப்ளாக்ஸ் :

பிளாக் ஃப்ளாக்ஸ் :

இந்த மின்புத்தகத்தை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினை சேர்ந்த பிளாக் ஃப்ளாக்ஸ் (Black Flags) என்ற குழு வெளியிட்டுள்ளது.

ஜிகாத் :

ஜிகாத் :

மேலும் பிளாக் ஃப்ளாக்ஸ் என்ற குழுவினர் ஜிகாத்திஸ்ட்கள் (jihadist platform) என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிப்படை :

வெளிப்படை :

அதுமட்டுமின்றி இந்த தீவிரவாத குழு, முதல் முறையாக இந்திய பிரதமரான நரேந்திர மோதி பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டு மிரட்டல் விடுத்துள்ளது.

அரசியல் சூழ்நிலை :

அரசியல் சூழ்நிலை :

மேலும் இந்த தீவிரவாத குழு, இந்தியாவில் நடந்து வரும் அரசியல் சூழ்நிலை குறித்தும் வெளிப்பப்படையாக பேசியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்றரை பில்லியன் முஸ்லீம்கள் :

ஒன்றரை பில்லியன் முஸ்லீம்கள் :

அந்த மின் புத்தகத்தில் "யுத்தம் என்பது ஒவ்வொரு நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, அதற்காகத்தான் மொத்தம் ஒன்றரை பில்லியன் முஸ்லீம்கள் உலகம் முழுக்க உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய உலக ஒழுங்கு :

புதிய உலக ஒழுங்கு :

மேலும் "அவர்கள் ஒவ்வொரு தேசத்திலும் புதிய உலக ஒழுங்கை (New World Order) அமைக்க போராடுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டிகிறிஸ்ட் :

ஆண்டிகிறிஸ்ட் :

"அந்த புதிய உலக ஒழுங்கு போராட்டத்தின் உச்சமானது அல்-டஜ்ஜல் (al-Dajjal) என்பதற்கு எதிரானது" (அதாவது ஆண்டிகிறிஸ்ட் - Antichrist) என்றும் அந்த மின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாத்ரி கும்பல் கொலை தாக்குதல் :

தாத்ரி கும்பல் கொலை தாக்குதல் :

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு முஸ்லீம் குடும்பத்திற்கு எதிராக நடத்தப்பட்ட 'தாத்ரி கும்பல் கொலை தாக்குதல்' சம்பவம் பற்றியும் பிளாக் ஃப்ளாக்ஸ்-ன் மின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து மதவாதி :

இந்து மதவாதி :

அந்த சம்பவத்தை குறிப்பிடும் போது இந்திய பிரதமர் மோதியை "ஆயுதங்களை வழிபடும், மாட்டு இறைச்சி உண்பவரை கொல்ல நினைக்கும் இயக்கத்தினை சேர்ந்த ஒரு இடதுசாரி இந்து மதவாதி" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்து இயக்கம் :

இந்து இயக்கம் :

மேலும், "மாட்டு இறைச்சியை உண்ணும் முஸ்லீம்களை கொலை செய்யவே ஒரு இந்து இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது" என்றும் கூறியுள்ளது.

முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் :

முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் :

அம்மாதிரியான இயக்கத்தை பணம் கொடுத்து வளர்ப்பவர்கள் வருங்காலங்களில் பெரிய அளவிலான யுத்தங்களை உருவாக்க வல்ல முஸ்லீம் எதிர்ப்பாளர்களை யும் சேர்த்தே வளர்கின்றனர்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தயார் :

தயார் :

மேலும் பிளாக் ஃப்ளாக்ஸ் அமைப்பு, பிரதமர் நரேந்திர மோதி முஸ்லீம்களுக்கு எதிரான யுத்தத்தை தொடுக்க தனது மக்களை தயார் படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளது.

நம்பர் 1 எதிரி :

நம்பர் 1 எதிரி :

இந்தியாவில் இருக்கும் அரசியல் சூழ்நிலையால் அவர்களின் நம்பர் 1 எதிரியான முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு பயங்கரவாத பிரச்சாரத்தை தொடங்க முடியும் என்றும் அந்த இ-புக் தெரிவிக்கிறது.

தாக்குதல் :

தாக்குதல் :

இதற்கு முன்பு, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் இந்திய நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அறிவித்திருந்தது இந்திய அரசு குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் வுல்ஃப் :

சிங்கிள் வுல்ஃப் :

மேலும் அது போன்ற தாக்குதல் ஆனது சிங்கிள் வுல்ஃப் (Single Wolf) எனப்படும் தனி தீவிரவாதியால் கூட நடத்தப்படலாம் என்று இந்திய அரசு குறிப்பிட்டு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
ISIS launched ebook and threatens PM Modi and India. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot