Home
News

'இந்தியர்களை' வைத்தே இந்திய ஆவணங்களை திருடும் ஐஎஸ்ஐஎஸ்..!

By Muthuraj

தற்கால தீவிரவாத இயக்கங்கள் உட்பட நவீனமாகி விட்டன என்பது தான் நிதர்சனம். தீவிரவாதிகள், துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற ஆயுத தாக்குதல்களில் மட்டுமின்றி ஊட்காந்த இடத்தில் இருந்து கொண்டே நிகழ்த்தப்படும் சைபர் தாக்குதல்களிலும் ஈடுபாடு காட்டுகின்றன என்பதற்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன.

உலக நாடுகளின் மாபெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கமானது, இந்திய அரசாங்க ஆவணங்களை 'ஹேக் செய்து' திருட 10000 அமெரிக்க டாலர்கள் வரை இந்திய ஹேக்கர்களுக்கு வழங்க தயாராக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க டாலர் :

அமெரிக்க டாலர் :

இந்திய அரசாங்கத்தின் வலை தளங்களை ஹேக் செய்து அதில் இருந்து மிகவும் முக்கியமான ஆவணங்களை திருடித் தருவதற்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களை வழங்க தயாராக உள்ளதாம் ஐஎஸ்ஐஎஸ்.

தகுதி :

தகுதி :

இந்த 'ஹேக்' வேலையை செய்யத் தகுதியானவர்களை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களில் மூலம் டேட்டா பேஸ்களை உருவாக்கும்படி ஐஎஸ்ஐஎஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

ஹேக் வேலை :

ஹேக் வேலை :

மேலும் செய்யும் ஒவ்வொரு ஹேக் வேலைகளுக்கும் தகுந்த பணமும் வழங்கப்படும் என்றும் ஐஎஸ்ஐஎஸ் தெரிவுத்துள்ளது. (அதாவது பத்தாயிரம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல்).!

சலுகை :

சலுகை :

ஹேக்கர்கள் சமூகத்தில் இது போல ஒரு பெரிய அளவிலான சலுகையை இதுவரை யாரும் வழங்கியதில்லை என்று ஹேக் சமூக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விசாரணை :

விசாரணை :

இந்த பெரிய அளவிலான ஹேக் திட்டம் பற்றி கடந்த ஆறு மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பதும், இந்த தகவல் நாடு முழுக்க இருக்கும் ஹேக்கர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் மூலம் பரப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரச்சாரம் :

பிரச்சாரம் :

ஐஎஸ்ஐஎஸ் இயக்கமானது தனது சித்தாந்தங்கள் மற்றும் பிரச்சாரம் போன்றவைகளை உலகம் முழுவதும் இருக்கும் ஆதரவாளர்களுக்கு போதிப்பதற்காக சமூக ஊடகங்களை பெரிய அளவில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஸ்க்கைப், வாட்ஸ்ஆப் :

ஸ்க்கைப், வாட்ஸ்ஆப் :

அதுமட்டுமின்றி ஸ்க்கைப், வாட்ஸ்ஆப், சைலன்ட் சர்க்கில், டெலிகிராம் போன்றவைகளையும் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீக்கும் பணி :

நீக்கும் பணி :

மறுபக்கம் ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த உள்ளடக்கங்களை இன்டர்நெட்டில் இருந்து நீக்கும் பணிகளில் இந்திய பாதுகாப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ISIS Offering $10,000 To Indian Hackers To Steal Sensitive Data From Government. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X