ஐஎஸ்ஐஎஸ் தயாரித்த செயலி, வாட்ஸ்ஆப்பை விட பாதுகாப்பானதாம்.!!

By Meganathan
|

உலக நாடுகளை வெகுவாக அச்சுறுத்தி வரும் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் குறுந்தகவல் செயலி ஒன்றை வடிவமைத்திருக்கின்றது. தீவிரவாதிகள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட இந்த ஆண்ட்ராய்டு குறுந்தகவல் செயலி அல்ராவி என அழைக்கப்படுகின்றது. இந்த செயலி எவ்வாறு கண்டறியப்பட்டது, உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

பாதுகப்பு

பாதுகப்பு

அதிகளவு பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலியை அரசு மற்றும் வெளிநபர்கள் இடை மறிக்க முடியாத அளவு கடிமாக இருக்கும் படி வடிவமைக்ப்பட்டுள்ளது.

கோஸ்ட் செக்யூரிட்டி ஆப்

கோஸ்ட் செக்யூரிட்டி ஆப்

பயங்கரவாத எதிர்ப்பு இயக்கமான கோஸ்ட் செக்யூரிட்டி க்ரூப் தான் இந்த செயலியை முதலில் கண்டறிந்தது. தீவிரவாத செயலி என்பதால் இது கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியாது.

ஏபிகே

ஏபிகே

இந்த செயலியை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவரால் மட்டுமே ஏபிகே கோடு மற்றும் சைடுலோடு கொண்டு ஆண்ட்ராய்டு கருவியில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

செயலி

செயலி

கடந்த ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தரப்பில் பயன்படுத்தப்பட்டு வந்த அமேக் ஏஜென்ஸி எனும் செயலியையும் கோஸ்ட் செக்யூரிட்டி க்ரூப் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்

செய்திகள்

அமேக் ஏஜென்ஸி செயலியை கொண்டு ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுக்குள் செய்தி மற்றும் புதிய உறுப்பினர்களின் தேவை குறித்த தகவல்கள் பரிமாறி கொள்ள பயன்படுத்தப்பட்டன.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இந்த செயலியின் முக்கிய நோக்கமே பிரச்சாரம் செய்வது தான் என கோஸ்ட் செக்யூரிட்டி ஊழியர்கள் தனியார் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தனர்.

வலைதளம்

வலைதளம்

சமூக வலைதளங்களில் ஐஎஸ்ஐஎஸ் பயனர்களை கண்டறிவதில் அரசு சார்ந்த நிறுவனங்கள் அதிகம் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அந்த வகையில் ஐஎஸ்ஐஎஸ் தரப்பில் பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறி பல்வேறு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் கடந்த ஆண்டு முடக்கப்பட்டன.

டெலிகிராம்

டெலிகிராம்

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டதை தொடர்ந்து டெலிகிராம் சேவையிலும் ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனானமஸ்

அனானமஸ்

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக ஆன்லைனில் போர் ஒன்றை அறிவித்து அந்த இயக்கத்தை எதிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அனானமஸ் எனும் ஹேக்கர் பிரிவினர் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Isis Develops Messaging App for Android. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X