Home
News

உங்களோட செக்கென்ட் சிம் Jio-வா.. அப்போ இரண்டே ஆப்ஷன் தான் இருக்கு.. காசை கரி ஆக்காதீங்க!

உங்களிடம் டூயல் சிம் கார்ட் ஸ்லாட் (Dual SIM Card Slot) கொண்ட ஸ்மார்ட்போன் இருந்து, அதில் உள்ள செக்கென்ட் சிம் கார்டு (Second SIM Card) ஸ்லாட்டில் ஜியோ சிம் (Jio SIM) இருந்தால்.. அதற்கு ரீசார்ஜ் செய்கிறேன் என்கிற பெயரில் - உங்களுடைய காசை கரி ஆக்க விரும்பவில்லை என்றால்.. உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளது!

அதாவது அன்லிமிட்ட் ஆக கிடைக்கும் ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க்கை (Jio True 5G Network) பயன்படுத்தி கொண்டே.. உங்களுடைய செக்கென்ட் சிம் கார்டு ஆன ஜியோ சிம் கார்ட்டை "மிகவும் மலிவான விலையில்" ஆக்டிவ் (ACTIVE) ஆக வைத்துக்கொள்ள உங்களுக்கு 2 ரீசார்ஜ் விருப்பங்கள் மட்டுமே உள்ளன.

உங்களோட செக்கென்ட் சிம் Jio-வா.. அப்போ இரண்டே ஆப்ஷன் தான் இருக்கு!

இந்த விஷயத்தில் (பட்ஜெட் விலை 5ஜி ரீசார்ஜ் விஷயத்தில்) முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ரூ.200 க்கும் குறைவான விலையில் 5ஜி வழங்கும் நாட்டின் ஒரே ஒரு டெலிகாம் நிறுவனம் இது மட்டுமே ஆகும். மேலும் 5ஜி நெட்வொர்க்கில் இருக்கும்போது நுகர்வோர்கள் எவ்வளவு டேட்டாவை பயன்படுத்தலாம் என்பதில் ஜியோவுக்கு எந்த வரம்பும் இல்லை.

அப்படியாக நாம் பேசும் இரண்டு திட்டங்களின் விலைகள் - ரூ.198 மற்றும் ரூ.349 ஆகும். சுவாரஸ்யமாக ரூ.349 திட்டமானது தற்போது பண்டிகை கால சலுகைகளுடன் (Festive season offers) இணைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் ஆர்வமுள்ள ஜியோ கஸ்டமர்கள், முடிந்த வேகத்தில் ரூ.349-ஐ ரீசார்ஜ் செய்துகொள்ளவும்

1. ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

இந்த திட்டத்துடன் நுகர்வோர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் பெறுவார்கள். இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட சேவை செல்லுபடியாகும் காலம் (Service Validity) ஆனது 14 நாட்கள் ஆகும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ரூ.198 ஆனது ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் ஆகியவைகளுக்கான இலவச அணுகல்களையும் வழங்கும்.

2. ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ரூ,198 திட்டத்தை போலவே - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

மேலும் இந்த திட்டமும் நுகர்வோருக்கு வரம்பற்ற 5ஜி சேவையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி இப்போது இந்த திட்டத்தின் கீழ் ஜியோ சிறப்பு பண்டிகை சலுகைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் ஜியோ ஃபைனான்ஸில் (Jio Finance), பயனர்கள் இப்போதே தங்கம் வாங்கினால், அவர்களுக்கு 2% எக்ஸ்ட்ரா தங்கம் கிடைக்கும். கூடுதல் தங்கத்தை பெற, பயனர்கள் 8010000524 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.

மேலும் புதிய கனெக்ஷனில் 2 மாதங்கள் இலவச சேவைக்கான ஜியோ ஹோம் (Jio Home) சலுகையும், 3 மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவச மொபைல் / டிவி சந்தாவும் (Jio Hotstar Mobile / TV Subscription) கிடைக்கும். கடைசியாக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) மூலம், பயனர்கள் 50 ஜிபி இலவச ஸ்டோரேஜையும் பெறுவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Is your Second SIM Card is Jio Then You Have Only 2 Options To Not Waste your Money
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X