ஆதார் உடன் பான் கார்டை லிங்க் பண்ணிட்டீங்களா? தெரிந்துகொள்வது எப்படி? இதோ வழிமுறைகள்..
சமீபத்தில் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதாவது 2025 டிசம்பர் 31-ம் தேதிக்குள் பான் (PAN) எண்ணை ஆதார் (aadhaar) எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். குறிப்பாக இதைச் செய்யாதவர்களின் பான் கார்டு எண் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் செயலிழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பான் எண் மட்டும் முடக்கப்பட்டால் உங்களால் வங்கி கணக்கைத் தொடங்க முடியாது. டீமேட் கணக்கையும் தொடங்க முடியாது. இதனால் நீங்கள் பங்குச் சந்தையிலோ அல்லது ஈடிஎப்ஃகளிலோ வர்த்தகம் செய்ய முடியாது. அதேபோல் ரூ.50,000-க்கு மேல் நிலையான வைப்புத்தொகை வைத்திருக்கவும் பான் தேவைப்படுகிறது.

அதேபோல் அரசு முக்கிய திட்டங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கும் பான் கணக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதுவும் பான் கார்டு இல்லாமல் எந்த நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் பான் எண் இல்லாமல் வங்கிகளிடமிருந்தோ அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடன் கூட பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர வாகனம் வாங்கவோ அல்லது வீடு வாங்கலோ பான் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் இது செயலிழக்கப்பட்டால், சிக்கல் அதிகரிக்கும். மேலும் ரூ,50,000-க்கு மேல் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளைச் செய்ய விரும்பினால், செயல்பாட்டில் உள்ள பான் எண் இருப்பது அவசியம்.
மேலும் பான் எண் முடக்கப்பட்டிருந்தால், வரிப் பணத்தை திரும்பப் பெற முடியாது, நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வட்டி எதுவும் வழங்கப்படாது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். சிலருக்கு அவர்களது ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே தெரியாமல் இருக்கும். அதை அவர்களே மிக எளிதாக ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா தெரிந்துகொள்வது எப்படி?
முதலில் அதிகாரப்பூர்வ வருமான வரி மின்-தாக்கல் (e-filing) தளமான https://www.incometax.gov.in/iec/foportal/ சென்று, இடது பக்கத்தில் உள்ள "Link Aadhaar Status" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து உங்கள் பான் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
அதன்பின்னர்"Validate"என்பதைக் கிளிக் செய்து இணைப்பை உறுதிசெய்யவும். அவ்வளவு தான்
உங்களது பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைப்பது எப்படி?
ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைப்பது மிகவும் எளிமையான விஷயம் ஆகும். அதாவது முதலில் வருமான வரி இ-ஃபைலிங் (e-Filing) இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதன் முகப்புப் பக்கத்தில் 'Link Aadhaar' என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் 10 இலக்க பான் எண் மற்றும் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி பணம் செலுத்த வேண்டும். கோரிக்கையை சமர்ப்பித்த பிறகு அதைச் செயல்படுத்தி உறுதிப்படுத்தப்படும்.
குறிப்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிகள் ஆதார் சேவைகளை எளிதாக்குவது மட்டுமின்றி, டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இதன் மூலம் மக்கள் வேகமான பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத ஆதார் சேவைகளைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








